- அதிர்ஷ்டம் வந்து தட்டும் போது கதவைத் திறங்கள் – ஸ்பெயின் பழமொழி
- அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு சேவலும் முட்டையிடும் – கிரீஸ்
- அதிர்ஷ்டம் ‘குருடு’ எவர் மடியிலும் போய் விழும் – எஸ்டோனியா
- கடவுள் இல்லை என்று சொன்னால் உன் முன் கயிறு வந்து விடும். அவர் ஏறு என்று சொன்னால் உன் முன் குதிரை வந்து நிற்கும் – இந்தியா
- முன்னால் போகும் ஊஞ்சல் பின்னாலும் வரும் – இலங்கை
- ஆகாயத்திலிருந்து ஈச்சம்பழம் விழுந்தால் நீயும் வாயைத் திற – சீனா
- அதிர்ஷ்டம் வந்தால் யார் தான் வரமாட்டார். அது வராவிட்டால் யார் தான் வருவார் – பல்கேரியா
- வானத்திலிருந்து தங்கமாக மழை பெய்யும்போது உன் துணிகளை எல்லாம் விரித்து ஏந்திக் கொள் – கீழை நாடுகள்
- அதிர்ஷ்டம் நமக்கு தூக்கத்தில் வரும் – பிரான்ஸ்
- அதிர்ஷ்டம் உள்ள மனிதன் வாயை திறந்து கொண்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தால் போதும் – ஜெர்மனி
- அதிருஷ்டம் உள்ளவன் அழகன் தான் – அயர்லாந்து
- அதிர்ஷ்டமும் துரதிஷ்டம் ஒரே கிணற்றில் தொங்கும் இரண்டு வாளிகள் ஒன்று மேலே வந்தால் மற்றது கீழே வரும் – டென்மார்க்
- கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்து கொண்டு வந்து கொடுக்கும் – தமிழ்நாடு
- பல்லக்கு ஏற ஆசை உண்டு உன்னி ஏறச் சிவனில்லை – தமிழ்நாடு
- அதிர்ஷ்டம் என்ற பசு சிலருக்கு தலையைக் காட்டும் சிலருக்கு வாலை காட்டும் – இத்தாலி
- அதிர்ஷ்டம் ஒருவனை அதிகமாக தட்டிக் கொடுத்தால் அவன் மூடனாவான் – லத்தீன்
- அதிக அதிர்ஷ்டம் ஆபத்தானது – ரஷ்யா
- அறிவு இல்லாதவனுக்கு வரும் அதிர்ஷ்டம் பயனற்றதாகும் – ரஷ்யா
- இளமையான பசு கிடைக்கும் போது கயிறு தயாராக இருக்கட்டும் – ஸ்பெயின்
- அதிர்ஷ்டம் வரும்போது முந்திக்கொண்டு வரும் – ஸ்பெயின்
- நைல் நதியில் தள்ளினாலும் அவன் வாயில் ஒரு மீனோடு வெளியே வந்துவிடுவான் – அரேபியா
- கெட்டதை விட நல்ல அதிர்ஷ்டத்தை தாங்க பெரும் குணங்கள் தேவை – பிரான்ஸ்
- அதிர்ஷ்டமும் துரதிஷ்டம் பக்கத்து வீட்டுக்காரர்கள் – ஜெர்மனி
- ஒவ்வொரு மனிதனுடைய வீட்டு வாயிலும் அதிர்ஷ்டம் ஒருமுறையாவது வந்து தட்டும் – இத்தாலி
- நல்ல அதிர்ஷ்டம் வரும் போது நல்ல புத்தி இருப்பது அரிது – லத்தின்
- அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாயாயிருக்கும் மற்றொருவனுக்கு மாற்றாந்தாயாக இருக்கும் – இங்கிலாந்து
- அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து இருப்பவனுக்கு மதிய சாப்பாடு நிச்சயமில்லை – இங்கிலாந்து
- மனிதன் அதிர்ஷ்டத்தை தேடுவதில்லை அதுவே அவனைத் தேடி வருகிறது – துருக்கி
- அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் பிறவாமல் இருப்பதே மேல் – யூதர்
- அதிர்ஷ்டம் கைகளில் வலிமை இல்லாதவள் கைதூக்கி விட்ட அவர்களே விரைவில் நழுவ விட்டு விடுவாள் – ஜெர்மனி
அதிர்ஷ்டம் பற்றிய 30 பழமொழிகள்!
Date: