‘வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது’ மாவீரன் நெப்போலியன் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்!

Date:

மாவீரன் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவர். பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மாவீரன் நெப்போலியன் கூறிய பொன்மொழிகள் இங்கே…

  • சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான், சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.
  • உன்னை வெற்றி கொள்ள யாரும் பிறக்கவில்லை என்று நினைக்காதே. எல்லோரையும் வெற்றி கொள்ள நீ பிறந்திருக்கிறாய் என நினைத்துக்கொள். வெற்றி உன் பக்கம்.
  • தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வி அடைவான்.
  • காலத்தின் அருமையைப் புரிந்துகொள்ளாதவர்கள் வெற்றி அடைய முடியாது.
  • தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும்.
  • உலகில் வெற்றி பெற வேண்டுமானால் ஏற்கெனவே நீங்கள் வெற்றி பெற்றுவிட்ட மாதிரி மற்றவர்களுக்கு தெரிய வேண்டும்.
  • இலட்சியத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிகளை மட்டுமே மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • நீ உன் வலது காலை முன்னே எடுத்து வை. உன் இடது கால் தானாகவே முன்னால் வந்துவிடும்.
  • தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள். நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்..
  • வீரமில்லாத மக்களைக் கொண்ட நாடு அடிமை நாடாகவே இருக்கும்.
  • பொதுவாக தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதியாகத் தீர்மானித்தலே.
  • வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது.
  • கற்பனை வளமே இந்த உலகை ஆள்கிறது.
  • என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
  • முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
  • இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்து விடுங்கள்.
  • நாளை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது மகிழ்ச்சியுடன் உழைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எந்த நாளும் இன்பமான நாள் தான்.
  • குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் தான் தங்கியிருக்கிறது.
  • ஒரு வீரனுக்கான முதல் தகுதி. சோர்விலும் பொறுமையாக இருப்பது. தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.
  • ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்றுப் போய்விடுகிறது.
  • நாளை நாளை என ஒரு செயலை பிற்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
  • நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையின் முன்னால் துன்பங்கள் எல்லாம் நீங்கி விடுகின்றன.
  • வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • நட்புக்கு உயிரைக் கொடுப்பது இலகுவானது, ஆனால் உயிரைக் கொடுப்பதற்கு தகுதியான நட்பு கிடைப்பது அரிது.
  • நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை அமைதியான மனமே.
  • நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறோமே தவிர, நமது திறன்களைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை.
  • நீங்கள் ஒரு செயலை சிறப்பாக செய்ய விரும்பினால், அதை நீங்களே செய்யுங்கள்.
  • வெற்றி கிடைக்குமோ என்ற ஐயம் நிச்சயம் தோல்வியை நோக்கியே கொண்டு செல்லும்.
  •  இறக்கும் நேரத்தை விட, துன்பப்படும் நேரத்திலேயே நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகிறது.
  • சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதை செயல்படுத்தும்போது, அது குறித்து சிந்திப்பதை நிறுத்திவிடுங்கள்.

Also Read: ‘வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது..!’ ஓஷோ…

உங்களை உற்சாகமூட்டும், பில் கேட்ஸ் கூறிய 14 பொன்மொழிகள்!

ஃபிடல் காஸ்ட்ரோ கூறிய சிறந்த 16 பொன்மொழிகள்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!