‘நட்பும் ஒரு பொக்கிஷம் தான், நீ அதற்கு உண்மையாக இருக்கும் வரை..’ நட்பு பற்றிய சிறந்த 28 பொன்மொழிகள்

Date:

 1. நண்பனின் ரகசியத்தை வாழ்நாள் வரை காப்பாற்றுபவனே நல்ல நண்பன். ஒரு சிறந்த நட்பு ஒருவனுக்கு வாழ்நாள் முழுவதும் கை கொடுக்கும்.
 2. எதிர்பார்த்து உறவாடுகின்ற உறவுகளுக்கு மத்தியில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவாடுவது நட்பு மட்டுமே.
 3. வாழக்கை வாழ ஒரு பிறவி போதும். ஆனால் நல்ல நட்போடு வாழ பல பிறவி வேண்டும்.
 4. சரியான நேரத்தில் உதவி செய்பவனே சிறந்த நட்பின் புரிதல். அந்த நட்பை எந்த நிலையிலும் ஒதுக்கி விடாதே.
 5. உறவுகள் யாரும் இல்லை என்று வருந்தாதே. நல்ல நண்பர்கள் எல்லா உறவுகளையும் விட மேலானவர்கள்.
 6. உன் நிழல் இன்றிக் கூட நீ நடந்தாலும், உன் நல்ல நண்பர்கள் உன் கூடவே வருவார்கள்.
 7. நட்பும் ஒரு பொக்கிஷம் தான், நீ அதற்கு உண்மையாக இருக்கும் வரை.
 8. உன்னை விழ வைத்தவர்கள் முன்னே தலை நிமிந்து எழ வைக்கும் நல்ல நட்பு.
 9. கூடவே பிறக்கவே இல்லை என்றால் கூட ஒன்றாகவே துடிக்கும் உண்மையான நண்பர்கள் வாழ்வில் கிடைத்த அதிஷ்டம்.
 10. ஆயிரம் உறவுகள் நம்மை தேடி வரும். ஆனால் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்கள் நல்ல நண்பர்கள்.
 11. இதயத்திற்கும் உண்மையான நல்ல நட்புக்கும் வித்தியாசம் கிடையாது. இரண்டுமே நமக்காக துடிப்பவயேை.
 12. நட்பு என்பது மேகம் அல்ல நொடிப் பொழுதில் களைந்து போக. இது வானம் போன்றது வாழ் நாள் முழுவதும் கூடவே இருக்கும்.
 13. நண்பர்களிடம் தேவைக்காக பழகாதே அப்படி பழகும் நண்பர்களை விட பழி தீர்க்க துடிக்கும் எதிரி மேலானவன்.
 14. ஒரு தூய அன்பிற்கு அடையாளம் யார் என கேட்டால், என் நண்பன் உன்னை சொல்வேன் பெருமிதமாக.
 15. ஆயிரம் உறவுகள் என் வசதியை நாடி வந்தாலும், என்னை விட்டு என்றும் விலகாத அறிய பொக்கிஷம் என் நண்பன் நீ.
 16. ஒரு நல்ல நட்பு ஒன்று இருந்தாலே போதும் நம் வாழ்க்கையின்  கஷ்ட நஷ்டங்கள் கூட நமக்கு காமெடி கலாட்டா தான்.
 17. காதலை விட மிக கொடியது நம்முடன் உயிராய் பழகிய நல்ல நண்பனை இழப்பது.
 18. என் நண்பன் என்னுடன் பேசக்கூட தேவையில்லை. அவன் கண்களின் செய்கையை வைத்தே கண்டுபிடித்திடுவேன் அவனின் மனநிலையை.
 19. நட்பு என்ற ஒன்றின் ஏணிப்படி இருந்தால் போதும் மலையை கூட எளிதில் கடக்கலாம் நண்பனின் கரங்களை கைகோர்த்து கொண்டே.
 20. என்னதான் நாம் வாழ்க்கையின் மிக உயரத்திற்கு சென்றாலும் நண்பனின் முன்னால் இன்னும் சிறு குழந்தை தான்.
 21. வாழ்க்கையில் அனைத்து  சிக்கல்களும் தீர்ந்த பாடில்லை தான். ஆனால் நண்பனிடம் பகிரும்போது அவன் தரும் ஆறுதல் தேடினாலும் கிடைக்காத ஒரு வரம்.
 22. நிறைகள் பல இருப்பினும் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் உறவுகளை விட வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் கை கொடுக்கும் நட்பு என்ற தோழமையே சிறந்தது.
 23. நல்ல நண்பர்கள் எதையும் எதிர்பார்த்து பழகுவது இல்லை. நாம் எதிர்பார்க்கும் பொழுது நல்ல நண்பர்கள் நமக்கு கிடைப்பது இல்லை.
 24. “காதலுக்கு” எல்லைகள்  உண்டு. ஆனால் “நட்பிற்கு” எல்லைகள் கிடையாது.
 25. கனவுல கூட துரோகம் பண்ணாத  ஒரு உள்ளம். அது உண்மையான நட்புள்ளம்.
 26. என் உயர்வைக் கண்டு என்னை விட அதிகமாக மகிழ்ச்சி கொள்பவன் என் நண்பனை தவிர வேறுயாரும் இருக்க முடியாது .
 27. எந்த உறவை மறந்தாலும் நல்ல நட்பை யாரும் வாழ்நாளில் மறப்பதில்லை.
 28. நம் வாழ்வு திசைமாறும் என தெரிந்தும் சில நட்புடன் பயணிக்க மனம் விரும்பும்.

Also Read: ‘வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது’ மாவீரன் நெப்போலியன் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்!

‘ஓர் ஏழையின் செல்வம், அவனது திறமை தான்…’ சீன தத்துவஞானி கன்பூசியஸ் பொன்மொழிகள்!

‘வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது..!’ ஓஷோ…

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!