சிறந்த 28 தமிழ் பழமொழிகள்!

Date:

  1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
  2. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  3. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
  4. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்.
  5. பந்திக்கு முந்து, படைக்கு பிந்து.
  6. அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்.
  7. இருகினால் களி, இளகினால் கூழ்.
  8. சருகைக் கண்டு தணல் அஞ்சுமா.
  9. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.
  10. அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா.
  11. கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்.
  12. அடாது செய்தவன் படாது படுவான்.
  13. இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை.
  14. உண்டவன் பாய் தேடுவான், உண்ணாதவன் இலை தேடுவான்.
  15. குடிப்பதோ கூழ், கொப்பளிப்பதோ பன்னீர்.
  16. ஊதாரிக்கு பொன்னும் துரும்பு.
  17. அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்.
  18. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.
  19. சேர இருந்தால் செடியும் பகை.
  20. தேரை இழுத்து தெருவில் விட்டது போல.
  21. கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்.
  22. நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம்.
  23. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
  24. ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
  25. கோல் ஆட, குரங்கு ஆடும்.
  26. தனி மரம் தோப்பாகாது.
  27. கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  28. கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!

Also Read: அதிர்ஷ்டம் பற்றிய 30 பழமொழிகள்!

ஆரோக்கியம் பற்றிய 21 பழமொழிகள்!

‘அகப்படும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்’: புகழ்பெற்ற 20 பாரசீகப் பழமொழிகள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!