- உண்மையான அடக்கம் எல்லா நல்ல பண்புகளுக்கும் அடிப்படை.
- மனிதன் பிறப்பால் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவனாக மாட்டான். ஆனால் ஒழுக்கத்தால் மனிதன் மற்றவனை விட உயர முடியும்.
- வெளிப்படையாயினும் மறைவானவையாயினும் மானக்கேடான செயல்களில் அருகே கூட செல்லாதீர்கள்.
- நல்ல அறிவு எந்த மூலையில் எவ்வளவு தூரத்தில் இருந்த போதிலும் அதைத் தேடிச் செல்லுங்கள்.
- அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது.
- எல்லா விதமான அடக்கம் உடைய செயல்களும் சிறந்தவையே.
- எவன் சாந்த குணத்தை பெற்று இருக்கிறானோ அவன் நன்மையான பகுதியை உடையவன்.
- பேராசை வறுமையை குறிக்கிறது. அவாவின்மை செல்வத்தை குறிக்கின்றது.
- கைத்தொழிலும் மோசடி இல்லாத வியாபாரமும் தூய்மையான சம்பாத்தியம்.
- எவனுடைய சொல்லும் செயலும் பிறரைத் துன்புறுத்த மாட்டாதோ அவனே மனிதன்.
- மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம்.
- முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவது ஆகும்.
- மக்கள் விரும்பாத இரண்டு, மரணமும் வறுமையும்.
- எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத சகிப்புத்தன்மையும் நிதானமும் சிறப்புக்குறியவை.
- மதம் என்பது தூய்மையான வாக்கும் கொடையும் ஆகும்.
- தன்னிடம் உள்ள குறைகளை அறிந்தும் பிறரது குறைகளை கூறித் திரியக்கூடாது.
- நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள். தீய செயல்களை விட்டு விலகி இருங்கள்.
- நல்ல முறையில் பழகத் தெரிந்தவனும் நற்குணமுள்ளவனும் நண்பர்களுள் சிறந்தவன்.
- உலக ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் பிறப்பிடம்.
- பிறரை சபித்தல் உண்மை பேசுவோருக்கு அழகல்ல.
- அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதனாக மாட்டான்.
- தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே விரும்பி வருந்துபவன் குற்றம் இல்லாதவனுக்கு ஒப்பாவான்.
- வயது முதிர்ந்த பெற்றோரை புறக்கணிக்கும் எவனும் சொர்க்கத்தை அடைய முடியாது.
- பிறப்பால் அனைவரும் தூய்மையானவர்களே ஒருவர் செய்யும் பாவமே அவரை கலங்கப்படுத்துகிறது.
- நட்பு கொள்ளும் முன் நாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதை கவனித்து நட்பு கொள்ள வேண்டும் அதுவே நிலைத்து நிற்கும்.
- கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
- ஒருவனை அதிகமாக புகழ்வது அவனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்.
- நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்
Date: