‘வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது..!’ ஓஷோ பொன்மொழிகள்

Date:

ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்டு வந்தவர் ஓஷோ. தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் ஞானம் அடைந்தார். ஒரு இந்திய ஆன்மீக குரு மற்றும் தத்துவஞானி. ஓஷோ அவர்களின் பொன்மொழிகள்.

  • வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது..!
  • வன்முறை என்பது மனிதருக்கு வியாதி. ஆனால் விலங்குகளுக்கு அது அவற்றின் இயல்பு..!
  • வன்முறை உள்ள மனம் சண்டையிடாமல் திருப்தி அடையாது. பிறரைத் துன்புறுத்துவதிலேயே மகிழ்ச்சி காணும். அத்தகைய மனம் எப்போதும் நிரந்தர மகிழ்ச்சி அடைய முடியாது.
  • நெருப்பில் கை வைக்க அஞ்சும் மனிதன், கோபம் எனும் நெருப்பில் மட்டும் தைரியமாக கை வைக்கிறான்.
  • தேடு, கண்டுபிடி பல தவறுகள் நிகழும். ஆனாலும் வேறு வழியில்லை. பயிற்சியும் தவறுகளும் தான் வழி. மெல்ல மெல்ல தவறுகள் குறையும். மேலும் மேலும் தெளிவு பிறக்கும் இடையில் நிறுத்திவிடாதே.
  • அடுத்தவருக்கும் உனக்கும் இருக்கும் உறவு கண்ணாடியைப் போன்றது.
  • வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை. வேலையை விரும்பிச் செய்பவன் அரசன்.
  • இந்த நிமிடம் தான் உண்மை மற்றவை அனைத்தும் நினைவுகளும் கற்பனையும் தான்.
  • யாருடனும் போட்டி போட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீங்களே நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள். உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.
  • எத்தனை தவறுகள் வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் ஒரே தவறை திருப்ப செய்யாதீர்கள். நீங்கள் கற்றுக் கொள்ளுவீர்கள். பயம் தொலைகிற இடத்தில் வாழ்வு தொடங்குகிறது.
  • உண்மை என்பது வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடிப்பதல்ல. உள்ளுக்குள் இருக்கும் ஒன்றை உணர்வது.
  • நிபந்தனையின்றி உன்னையே கொடுப்பது தான் உண்மையான அன்பு.
  • உன்னை தவிர வேறு எவராலும் உன்னை தடுக்க முடியாது. உன் வழியில் நீ குறுக்கே நிற்காதே.
  • எதிலும் குதிப்பதற்கு முன்பு இருமுறை யோசி என்று மற்றவர்கள் கூறுவார்கள். முதலில் குதித்து விடு அதன் பின்னர் நீ விரும்புகின்ற அளவு யோசி என்று நான் கூறுகிறேன்.
  • ஒருவர் தன்னிடமே சமாதானமாய், சுகமாய், இருக்க முடியவில்லை என்றால்.. யாரிடமும் சமாதானமாய் அமைதியாய் இருக்க முடியாது.
  • மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுவதில் கிடைக்கும் ஆனந்தம் மிகவும் நுட்பமானது. கர்வம் கலந்த ஆனந்தம் அது. உன் அறிவுரையைக் கேட்பவன் அறியாதவன் ஆகிறான். நீயோ அறிவாளி ஆகிவிடுகிறாய். இந்த உலகில் எல்லோருமே கொடுக்க கூடிய யாருமே பெற்றுக்கொள்ளாத ஒரே விஷயம் அறிவுரை மட்டுமே. யாருமே அதைப் பெற்றுக் கொள்ளாமலிருப்பதும் நல்லது தான்.
  • கொஞ்சம் முட்டாளாய் இருந்தால் வாழ்க்கையை ரசிக்கலாம். கொஞ்சம் புத்திசாலியாய் இருந்தால் தவறுகளை திருத்தலாம்.
  • உன்னை தவிர வேறு யாராலும் உன்னை தடுக்க முடியாது. உன் வழியில் நீயே குறுக்கே நிற்காதே.
  • பேசும் போது பயப்படாதீர்கள். பயப்படும் போது பேசாதீர்கள்.
  • நகைச்சுவை உணர்வு, ஆழ்ந்த அன்பு செலுத்தும் தன்மை இவைகளோடு நாம் இருப்பது தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம்.
  • இறைவன் வேண்டியதை தருபவர் அல்ல. இறைவன் வாழ்க்கைக்கு தேவையானதை தருபவர் ஆவார்.
  • நம் உறவுகள் எல்லாம் உள்ளே விஷத் தன்மை கொண்டவர்களாகவும் வெளியே இனிப்பு பூசப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
  • ஒருவர் தன்னிடமே சமாதானமாய், சுகமாய் இருக்க முடியவில்லை என்றால் அவரால் யாரிடமும் சமாதானமாய் அமைதியாய் இருக்க முடியாது.
  • பயத்தின் முடிவே வாழ்க்கையின் தொடக்கம் ஆகும்.
  • அகங்காரத்திற்கு சிரிக்கவே தெறியாது.
  • நாளை என்று ஒன்று கிடையாது, இன்றே நிஜம்.
  • அன்பு இல்லாதவன் வாழ்க்கையில் புன்னகை, உற்சாகம், போன்றவை இருக்காது.

Also Read: ‘ஓர் ஏழையின் செல்வம், அவனது திறமை தான்…’ சீன தத்துவஞானி கன்பூசியஸ் பொன்மொழிகள்

‘கேளுங்கள் தரப்படும்’ என்ற இயேசு கிறிஸ்துவின் 15 பொன்மொழிகள்…

நல்வாழ்க்கைக்கு புத்தர் கூறிய 40 பொன்மொழிகள் மற்றும் சிந்தனைகள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!