- சொர்கத்தின் முதல் சட்டம் ஒழுக்கம்தான்.
- இருவர் குதிரை ஏறினால் ஒருவர் பின்னால்தான் அமர வேண்டும்.
- மூடநம்பிக்கை மனவலிமை இல்லாதவர்களின் மதம்.
- மூடுபனியை விசிறியால் விரட்ட முடியாது.
- கருத்தைக் கூறுவதைக் காட்டிலும் செயலில் காட்டுவது நல்லது.
- கோபமுள்ளவன் சோகத்தைத் தேட வேண்டியதில்லை.
- ஊக்கமுள்ளவனே தினந்தோறும் செல்வத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறான்.
- மனிதர்களில் செயல்கள் அவர்களின் சிந்தனைக்கு சிறந்த விளக்கங்கள்.
- இலடசியத்தை அடைவதற்குரிய எளிய வழி; நேர்மையான வழியில் செயல்படுவது.
- மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம்.
- ஆற்றலை வீணாக செலவு செய்வது தற்கொலைக்கு ஒப்பாகும்.
- எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்றுதான்.
- தீய இன்பங்களுக்கு செலுத்தும் கூலியே துன்பம்.
- செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி- இந்தத் தம்பதிகள் இன்பமாக இருப்பார்கள்.
- நல்லதில் நம்பிக்கை கொள்ளாதவன் தீயத்திற்கும் அஞ்ச மாட்டான்.
- உலகின் நல்லறிவெல்லாம் பழமொழிகளுக்குள் அடக்கம்.
- திருப்தியே வேண்டியதை எல்லாம் தங்கமாக்கும்.
- வீரமுள்ள மனிதனுக்கு ஆயுதங்கள் தேவையில்லை.
- எந்த நிறம் சேர்ந்தாலும் கருப்பு நிறம் வேறாகாது.
- முற்றிம் கனிந்த கனி முதலில் விழும்.
- பணம் பணத்தைக் கொண்டுவரும்.
- நேர்மையானவர்களிடம்தான் அதிக பணிவு இருக்கும்.
- தன் குறை எது எனக் கண்டுபிடித்தலே அறிவின் சிகரம் ஆகும்.
- அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான்.
- வாலிபம் நம்பிக்கைக்குரிய பருவம்.
இங்கிலாந்து நாட்டில் கூறப்படும் புகழ்பெற்ற 25 பழமொழிகள்!
Date: