ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாளான நவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறந்த பண்பாளரான நேரு அவர்கள் ‘The Discovery of India‘ என்ற சிறந்த புத்தகத்தை எழுதிய நேரு பல்வேறு பொன்மொழிகளை கூறியுள்ளார். நேருவின் தேர்ந்தெடுத்த 25 பொன்மொழிகள் இங்கே…
நேரு பொன்மொழிகள்:
- ஒன்றை அடைவதற்கு தேவையானவை: நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல்.
- அச்சம் போன்ற மிக மோசமான ஆபத்து ஒன்றுமில்லை.
- துணிந்து செயல்படுகிறவர்கள்தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள்.
- கழிந்ததைக் கணக்கெடுத்துக் கொண்டே இருந்தால், இருப்பதையும் காணாமல் தொலைத்து விடுவாய்.
- பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது.
- தோல்வி ஏற்படுவது, அடுத்த காரியத்தை கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
- மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.
- முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடி வரும்.
- அறியாமையே எப்போதும் மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறது.
- அழகும், சாகசமும் நிறைந்த அற்புதமான உலகில் வாழ்கிறோம். நாம் கண்களை திறந்திருந்தால் மட்டுமே இவற்றைப் பார்க்க முடியும்.
- உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்து விடும்.
- கடப்பதற்கு தடைகளும், தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லை என்றால், வாழ்க்கை உப்புச்சப்பற்று போய்விடும்.
- செயலுக்கு முன்பே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு, வெற்றி என்பது வெகு தூரம்.
- ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் சொந்த வாழ்விலும் சரி, நமது சமுதாய வாழ்விலும் சரி, நாம் முன்னேற மாட்டோம்.
- முயற்சியுடன் செயல்படுகிறவர்களையே வெற்றி தழுவும்.
- வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.
- சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.
- விளைவுகளை வைத்துத்தான், செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.
- உங்கள் உடல்நலனை எப்படிப் பாதுகாக்கிறீர்களோ, அதேபோல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.
- உண்மையைச் சிலசமயங்களில் அடக்கி வைக்க முடியும், ஆனால் ஒடுக்கிவிட முடியாது.
- இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதத்தில் தான் நமது நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்க்கப்படும்.
- மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக, நாம் நமது உண்மைத் தன்மையை இழந்து விடக்கூடாது.
- ஒரு நிகழ்வைப் பற்றி அதிகம் பேச நினைக்கிறோம், அதை செயல்படுத்துவதை விட்டுவிட்டு.
- குழந்தைகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை யோசிப்பதில்லை.
- உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
மேலும் பல அறிஞர்கள், தலைவர்களது பொன்மொழிகளை நியோதமிழ் தளத்தின் பொன்மொழிகள் பக்கத்தில் படிக்கலாம்.
நமது நியோதமிழ் தளத்தில் நேருவின் வாழ்க்கை வரலாறு பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.