தன்னுடைய அறிவையும், வாசிப்பையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்திய மாமேதை. இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்காவிற்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக் குழுவின் தலைவர். இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர். அரசியலமைப்புச் சட்டம், பொருளாதாரம், சமூகச் சீர்திருத்தம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, தேர்தல் சீர்திருத்தங்கள், தொழிலாளர் நலன், விவசாயம், மின்சார உற்பத்தி, வெளியுறவுக் கொள்கை என ஒரு தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான அனைத்திலும் பங்களிப்பு செய்திருக்கிறார். அண்ணல் அம்பேத்கர் கூறிய பொன்மொழிகள் இங்கே.
- ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
- பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான், சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.
- ஓர் அடிமைக்கு, அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
- தன்னை உயர்ந்த ஜாதியாகவும் இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி.
- மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்.
- வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
- சமூகத்தால் செய்யப்படும் சர்வாதிகாரம், அரசியலால் செய்யப்படும் சர்வாதிகாரத்தை விடக் கொடியது.
- ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதில் வாழும் பெண்கள் அடைந்த வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம்.
- உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.
- நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை.
- தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைப் போல, தரணியில் மோசமானவன் இல்லை.
- சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது.
- மாபெரும் லட்சியத்தையும் வெற்றியையும் நம்பிக்கையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
- சாதி அமைப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண்களே. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதியை கடத்துவது அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது.
- சாதிகள் அனைத்தும் தேசவிரோத சக்திகள்.
- இந்தச் சமூகம் உங்களுக்குச் சுதந்திரமான உணர்வைத் தராதவரை, சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை.
- சமுதாய சிந்தனைகளை விட, வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு.
- சாதிய அமைப்பு முறை என்பது ஒரே இனத்தை சேர்ந்தவர்களை சமூகங்களாக பிரித்து வைத்திருக்கிறது.
- சாதியை அழித்தொழிப்பது என்பது சமபந்தி விருந்துகள் மூலமோ, சாதி மறுப்புத் திருமணங்கள் மூலமோ நிகழ்ந்து விடாது. சாதியின் அடித்தளமாக விளங்கும் மதத்தை ஒழிப்பது மட்டுமே தீர்வாகும்.
- சாதி அமைப்பு புனிதமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த புனிதத்தன்மையை முதலீடாகக் கொண்டு இயங்கும் மதத்தையும் சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கையும் ஒழிக்க வேண்டும்.
- குழந்தைப்பேறு சமயத்தில் பெண்கள் படவேண்டியுள்ள வேதனைகளை, ஆண்கள் படவேண்டியிருந்தால், அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்கு மேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்.
- வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
- எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
- உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
- கற்பி, ஒன்றுசேர், போராடு.
Also Read: