“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்..

Date:

  1. வெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.
  2. எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.
  3. பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.
  4. உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது. அதை வெற்றிகொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது.
  5. நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாயைப் பகிர்ந்து கொண்டால் நாம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். ஆனால் நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் நாம் இருவரிடமும் நல்ல எண்ணங்கள் இருக்கும்.
  6. கண்டிப்பை விட அன்பே சிறந்த முடிவைத் தரும்.
  7. வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம்.
  8. நீங்கள் அங்கிகரிக்கப்படவில்லை என்று வருத்தப்படாதீர்கள், அங்கீகாரத்திற்கு தகுதியுடையவர்களாக முயற்சி செய்யுங்கள். 
  9. எல்லோரையும் நம்புவது பயங்கரமானது. யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது. 
  10. நான் யாரை தலைசிறந்த நண்பன் என்று கருதுகிறேன் என்றால், யார் எனக்கு நான் இன்னும் படிக்காத ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி தருகிறானோ அவன் தான்.
  11. நான் பொறுமையாக செல்பவன் தான் ஆனால், நான் ஒரு போதும் ஒரு லட்சியத்திலிருந்து பின்வாங்குவதில்லை.
  12. எனக்கென தனி கொள்கைகளை நான் பின்பற்றுவதில்லை. எனக்கு தோன்றுவதை சிறப்பாக செய்வேன் அவ்வளவுதான்.
  13. வெற்றிக்காக ஏமாற்றுவதை விட தோற்றுப்போவது மரியாதைக்குரியது.
  14. உங்களை மற்றவர்கள் மதிக்கவில்லை என்று ஒரு பொழுதும் கலங்காதீர்கள் அவர்கள் உங்களை மதிக்கும் அளவிற்கு நீங்கள் உயர்ந்து காட்டுங்கள்.
  15. புகழை வேண்டினால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியை வேண்டாதீர்கள்.
  16. நாளைக்கு இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இன்று செய்ய வேண்டிய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதீர்கள்.
  17. என் அம்மாவிடமிருந்து தான் எனக்கு தைரியம் தன்னம்பிக்கை என அனைத்துமே கிடைத்தது.
  18. ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் அளிக்கப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தை கோடாரியை கூர் திட்டவே பயன்படுத்துவேன்.
  19. நாம் செய்யும் ஒரு வேலையை நம்மால் முடிந்த வரை சிறப்பாக செய்ய வேண்டும். அதை நீ கண்டிப்பாக இறுதிவரை செய்ய வேண்டும்.
  20. உழைப்பை மிஞ்சும் சக்தி இவ்வுலகத்தில் வேறு எந்த சக்திக்கும் கிடையாது. உழைப்பே உலகத்தின் உன்னதமான சக்தியாகும்.
  21. இவ்வுலகத்தில் அனைவருக்கும் பிடித்த விஷயம் பாராட்டு தான்.
  22. யார் ஒருவர் உதவும் எண்ணம் கொண்டுள்ளாரோ அவர் தான் உண்மையாக விமர்சிக்க தகுதியானவர்.
  23. ஊக்கத்தையும், தன்னடக்கத்தையும் மனித சுதந்திரத்தை பறித்து கொண்டு வர முடியாது.
  24. சாதாரண மனிதர்களை தான் இறைவன் அதிகம் விரும்புகிறார் போல, அதனால் தான் மனிதர்களை உலகத்தில் அதிகமாக படைக்கிறார்.
  25. அனைத்து மக்களுக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு தான் ஆனால் வயதாகாமல் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!