28.5 C
Chennai
Tuesday, February 27, 2024

காதல் பற்றி அறிஞர்கள் கூறிய அற்புதமான 23 பொன்மொழிகள்!

Date:

காதல் உலகத்திலுள்ள எவராலும் உடைக்க முடியாத மாபெரும் மலை. காதல் பற்றி பல அறிஞர்கள் கூறிய பொன்மொழிகள் உங்களுக்காக…

காதல் பற்றி அறிஞர்கள் கூறிய அற்புதமான பொன்மொழிகள்!

 • காதல் மயக்கத்தில் தோன்றினால் மங்கும். அன்பில் தோன்றினால் பொங்கும். – கவியரசு கண்ணதாசன்
 • நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும். – கலைஞர் மு. கருணாநிதி
 • கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு. – கலைஞர் மு. கருணாநிதி
 • இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு. – அரிஸ்டாட்டில்
 • உங்களால் நேசிக்கப்படுபவரும், உங்களை நேசிப்பவரும், எப்பொழுதும் ஒரே நபராக இருப்பதில்லை. – சக் பலஹ்னியுக்
 • நிபந்தனையின்றி உன்னையே கொடுப்பது தான் உண்மையான அன்பு. – ஓஷோ
 • காதல் என்பது வெறும் வார்த்தையே, யாரோ ஒருவர் வந்து அதற்கு அர்த்தம் கொடுக்கும் வரை. – பாலோ கோயல்ஹோ
 • காதல் இல்லாத வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. – லியோனார்டோ டா வின்சி
 • உண்மையான காதல் அரிதானது, அதுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது. – நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்
 • காதலில் எப்போதுமே கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது. ஆனால் பைத்தியக்காரத்தனத்துக்கு எப்போதும் சில காரணம் இருக்கிறது. – ப்ரீட்ரிக் நீட்சே
 • காதல் என்பது வெறும் வார்த்தை மட்டுமே, ஆனால் நீங்கள் தான் அதற்கு பொருள் கொடுக்கிறீர்கள். – எமினெம்
 • பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது. – கலீல் ஜிப்ரான்
 • வாழ்க்கையின் மிகச்சிறந்த மகிழ்ச்சியே, நாம் ஒருவரால் நேசிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கை தான். – விக்டர் ஹ்யூகோ
 • காதல் என்பது ஒரு தற்காலிக மனநோய் நிலை. – சிக்மண்ட் பிராய்ட்
 • காதல் கண்களால் பார்ப்பதில்லை, ஆன்மாவால் பார்க்கின்றது. – வில்லியம் ஷேக்ஸ்பியர்
 • பருவகாலங்களின் துணையின்றி வளர்ந்து, பூக்கும் ஒரே மலர் காதல். – கலீல் ஜிப்ரான்
 • போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல். – ஹெர்பர்ட்.
 • காதலையும் இருமலையும் மறைக்க முடியாது. – ஜார்ஜ் ஹெர்பர்ட்
 • காதல் ஒரு தீவிரமான மன நோய். – பிளேட்டோ 
 • முதற் காதல் என்பது சிறு முட்டாள்தனமும் நிறைய ஆர்வமும் மட்டுமே. – ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
 • ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படுவது உங்களுக்குப் பலத்தைத் தருகிறது. அதே நேரத்தில் ஒருவரை ஆழமாக நேசிப்பது உங்களுக்கு தைரியத்தைத் தருகிறது – லாவோ சூ
 • வெறுமனே உங்கள் தலையைத் தொடுவதன் மூலமோ, அல்லது உங்கள் கண்களை நோக்கி சிரிப்பதன் மூலமோ, அல்லது வெறுமனே வானத்தை அண்ணாந்து பார்ப்பதன் மூலமோ, உங்களை கிளர்ச்சியடையச் செய்யக்கூடிய நபரே உங்கள் உண்மையான காதலன். – மர்லின் மன்றோ
 • நீங்கள் காதலில் விழுந்ததற்குப் புவி ஈர்ப்பைக் குறை சொல்ல முடியாது. – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Also Read: கல்வியின் சிறப்பைக் கூறும் பொன்மொழிகள்!

ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!

‘பயணம் அறிவாளியை மேதையாக்கும்’ பயணம் பற்றிய 17 பொன்மொழிகள்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!