1. இதயத்தில் பெருந்தன்மை இருந்தால் , அது நற்பண்புகளை அழகாக பிரகாசிக்கும்.
2. புலியின் மீது சவாரி செய்தால் இறங்குவது கடினம்.
3. அறிவைத் தந்தையாகவும், மன நிறைவை தாயாகவும் போற்றுங்கள்.
4. தீர்மானமுள்ள மனிதன் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டான்.
5. தீர்மானமாக இரு. காரியமாகி விட்டது.
6. புன்னகை செய்யத் தெரியாத ஒருவன் வணிகத்தில் கால் வைக்கக்கூடாது.
7. ரொட்டியின் படத்தை வரைந்து பசியைத் தீர்க்க முடியாது.
8. தாகம் எடுக்கும்வரை கிணறு தோண்டுவதை ஒத்திப் போடக்கூடாது.
9. குன்றின் உச்சியில் ஏறாவிட்டால் பசுமையான சமவெளியை ரசிக்க இயலாது.
10. அறிவுள்ள மனிதன் குறைவாக பேசுகிறான், அதிகம் கேட்கிறான்.
11. நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்.
12. நாயின் வாயில் யானைத் தந்தம் இருக்காது.
13. சேற்றில் ஓரடி வைப்பதைவிட, பத்தடி சுற்றிச் செல்வது மேல்.
14. பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது.
15. பெண்களால் சதா சிரித்துக்கொண்டு இருக்க முடியாது. ஆனால் அவர்களால் நினைத்தவுடன் அழுவதற்கு முடியும்.
16. வண்டி வந்தால் வழி உண்டாகும்.
17. அறிஞருடன் உரையாடுவது நூறு நூல்களைப் படிப்பதற்கு சமம்.
18. பருவத்தே பயிர் செய்ய சற்று தாமதித்தால்கூட, வயல் மனிதனை ஓராண்டுக்கு தாமதிக்க வைத்துவிடும்.
19. பணமிருந்தால் நீ பாம்பு, இல்லாவிடில் நீ புழு.
20. முதியவர் ஒருவர் குடும்பத்தில் இருப்பது, இரத்தினம் ஒன்று இருப்பதற்கு சமம்.
21. ஒருவன் ஆட்டை மீட்க நீதிமன்றம் போனால், மாட்டை இழக்கப் போகிறான் என்று அர்த்தம்.
22. மோசமான அரசாங்கத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைவிட குருடனாக இருப்பதே மேல்.