அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் சிறந்த 21 பொன்மொழிகள்!

Date:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி பிறந்தார். திருவள்ளுவர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார் இவர்களின் வழியில் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்தவர் வேதாத்திரி மகரிஷி. மனவளக்கலை நிறுவியவர், உலக சமுதாய சேவா சங்கம் நிறுவனர், சித்தர், அறிவுத் திருக்கோயில் தோற்றுவித்தவர். வேதாத்திரி மகரிஷி கிட்டத்தட்ட தமிழிலும் ஆங்கிலத்திலும் 80 நூல்களை எழுதியுள்ளார்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைர வரிகள்

“வாழ்க வையகம்”

“வாழ்க வளமுடன்”

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 21 பொன்மொழிகள்!

  1. அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது உணரப்படுவது.
  2. உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும். எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயும்.
  3. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள்.
  4. தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது.
  5. ன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
  6. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
  7. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
  8. மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
  9. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.
  10. உண்மை எது,  பொய் எது  என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒருநாள் திரும்பும்.
  11. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை மனதார உணருங்கள்.
  12. ‘நானே பெரியவன் நானே சிறந்தவன்’ என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.
  13. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.
  14. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
  15. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
  16. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
  17. மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.
  18. அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது எல்லாவற்றிலும் மிக முக்கியம்.
  19. எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.
  20. உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.
  21. அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.

Also Read: குழந்தைகளுக்கான நீதிக்கதைகளை எளிய முறையில் கூறிய கதைசொல்லி ஈசாப் அவர்களின் 22 பொன்மொழிகள்!

கல்வியின் மிக உயர்ந்த பலன் சகிப்புத் தன்மையே – ஹெலன் கெல்லர் கூறிய சிறந்த…

“நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை” – ஒரிசன் ஸ்வெட் மார்டென் கூறிய…

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!