28.5 C
Chennai
Thursday, February 22, 2024

‘உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்’ பணம் பற்றிய 20 தத்துவங்கள்!

Date:

 1. உங்கள் பணத்தை சம்பாதிப்பதற்கு முன்பு, அதை ஒருபோதும் செலவிட வேண்டாம். – தாமஸ் ஜெபர்சன்
 2. பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை. – பாரசீகப் பொன்மொழி
 3. பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைக் குப்புறத் தள்ளிவிடும். – ஆலிவர் வெண்டல்
 4. பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். – ஷோப்பன் ஹொபர்
 5. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. – ஸ்மித்
 6. உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள். – பெர்னாட்ஷா
 7. பொன் நாணயங்களை அடை மழையாகப் பெய்தாலும், ஆசைகள் அடங்காமல் பெருகும். – கவுதம புத்தர்
 8. தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின் புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு குறைந்தும்தான் வரும். – கிருபானந்த வாரியார்
 9. பணப் பிரச்சினை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். – வால்டேர்
 10. பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால், அது தவறான வழியிலேதான் தேடப்படும். – ரஸ்கின்
 11. பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். – வீப்பர்
 12. அரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது.
 13. பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். – பிராங்க்ளின்
 14. பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள் தனம். – ஜீவெனால்
 15. நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். – பெர்னார்ட்ஷா
 16. சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை – கோல்ட்டஸ்
 17. பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன. – தாமஸ் புல்லர்
 18. பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை. – ஆஸ்திரேலிய பொன்மொழி
 19. பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை. – டென்மார்க் பொன்மொழி
 20. பலரின் ஆறாத காயங்களுக்கு காரணம் மனங்கள் மட்டுமல்ல பணமும் தான்.

Also Read: பெண்கள் சிறப்பை போற்றும் 25 பொன்மொழிகள்!

மகிழ்ச்சி பற்றிய புகழ்பெற்ற 35 பொன்மொழிகள்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!