- அளவற்ற செல்வமுடையவர்களுக்கு, அளவற்ற தேவைகளுண்டு.
- காதலின் இன்ப வேதனையை அறியாத நெஞ்சம் நெஞ்சமல்ல.
- பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம், அது இல்லாதவனுக்கு கவலை.
- சந்தேகம் நுழையும் வாசல் வழியே தான் துணிவும் நம்பிக்கையும் வெளியேறுகின்றன.
- ஆட்டு மந்தையின் அடித் தூசியும் ஓநாயின் கண்ணுக்கு இனிமை தரும்.
- திருப்தியுடன் வாழ்ந்தால் நீயே அரசன்.
- உப்புச் சுரங்கத்தில் விழுவதெல்லாம் உப்பாகும்.
- அறுந்தக் கயிற்றை முடிக்கலாம் ஆனால் முடிச்சு இருக்கும்.
- நல்ல கனியிலிருந்து பிழியாமலே சாறு வரும்.
- தாராள குணம் உள்ள மனிதன் இறைவனின் நண்பன்.
- அறுவடைக்கு தக்கபடி வாழ்ந்து கொள்.
- அகப்படும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்.
- ஒரு செந்நாய்க்கு மற்றொரு செந்நாயைத் தெரியும். அது போல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடனின் குணம் தெரியும்.
- நாம் காணும் உலகம் செழிப்பாக இருக்கிறதா? அப்படியானால் அங்கு கருணையும் இரக்கமும் குடிகொண்டிருக்கின்றன.
- வாழ்க்கை என்பது இடைவிடாத குடிவெறி, மகிழ்ச்சி மறைந்த பின்பும் தலைவலி இருந்துகொண்டே இருக்கும்.
- மன்னன், மாது, குதிரை இவை மூன்றையும் நம்ப வேண்டாம்
- ரோசாப் பூவை எடுப்பவன், முள்ளினால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
- கெட்ட நேரமாய் இருந்தால் பாயசம் குடித்தாலும் பல் ஒடிந்து போகும்.
- நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு நாள் பிரிவு உண்டு.
- உடைந்த கைகளை கொண்டு உழைக்கலாம் உடைந்த உள்ளத்தை கொண்டு உழைக்க முடியாது.
Also Read: ‘எருமை வாங்கும் முன்னே, நெய் விலை கூறாதே’: சிறந்த 60 தமிழ் பழமொழிகள்..!
‘அறிஞருடன் உரையாடுவது நூறு நூல்களைப் படிப்பதற்கு சமம்.’ சீனப் பழமொழிகள்
‘பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்’ புகழ்பெற்ற 20 அரேபிய பழமொழிகள்!