- அறிவாளர் சபை உயிருள்ள நூல் நிலையம்.
- முட்டை கல்லை உடைக்காது.
- பொறுமை கல்லையும் வளைக்கும்.
- சந்தேகம் நட்புக்கு விஷம்.
- குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும்,கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே.
- வாங்கியே பழகிய கைகளுக்கு கொடுப்பதென்றால் கஷ்டமே.
- பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்.
- ஒரு பொருளை அடகு வைப்பதை விட, விற்று விடுவது மேல்.
- கஸ்தூரி விற்று நஷ்டமடைவதை விட புழுதி விற்று லாபம் அடைவது மேல்.
- கையால் கடன் கொடுத்ததை காலால் வாங்க வேண்டும்.
- உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உன் சரித்திரத்தில் ஒரு ஏடாகும்.
- சோம்பேறி, ஜோதிடன் ஆகிறான்.
- தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்.
- மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும் பெண் இனமே மேலானது.
- நைல் நதியில் தள்ளினாலும், அவன் வாயில் ஒரு மீனோடு வெளியே வந்து விடுவான்.
- இலைகள் அதிகமாக இருந்தால், கனிகள் குறைவாக இருக்கும்.
- பண்பில்லாத இடத்தில் சுதந்திரம் இருக்க முடியாது.
- ஒட்டகத்தின் மேலிருப்பவன் திட்டங்கள் போடுகிறான். ஒட்டகத்திற்கும் திட்டம் உண்டு.
- பொறுமையுள்ள மனிதன் வெற்றியடைவான்.
- கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
- ஒரு கொசுவால் சிங்கத்தின் கண்களைக் கூட பழுதாக்க முடியும்
- உன் சொத்து உன்னிடமுள்ள அடைக்கலப் பொருள் என்று கருது.
- வெங்காயம் கிடைத்ததற்கு ஒருவன் துள்ளிக் குதித்தால், வெல்லம் கிடைத்தால் என்ன செய்வானோ.!
- உனக்கு நிழலளிக்கும் மரத்தை வெட்டிச் சாய்க்க வேண்டாம்.
- பொறாமைக்காரனின் பார்வையை விட சிங்கத்தினால் உண்டான காயம் மேலானது.
‘பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்’ புகழ்பெற்ற 20 அரேபிய பழமொழிகள்!
Date: