மகேந்திர சிங் தோனி கூறிய 20 பொன்மொழிகள்!

Date:

வெற்றி, தோல்வி, இலக்கு, விமர்சனம், தலைமை, திறமை, விளையாட்டு போன்ற பலவற்றைப் பற்றி கிரிக்கெட் விளையாட்டு வீரர் மகேந்திர சிங் தோனி பொன்மொழிகள் சிலவற்றை இங்கே காண்போம்!

  • நீங்கள் உண்மையான கனவு ஒன்றை வைத்திருக்காவிட்டால், உங்களுக்கு உந்துதல் என்ற ஒன்று இருக்காது; உங்களுக்கான இலக்கு என்ன என்பதும் தெரியாமலேயே போய்விடும்.
  • நாம் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்போது தான் மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்போம்; ஏனெனில் நடந்தது நடந்தவை தான்.
  • தோல்விக்கு நீ மட்டும் பொறுப்பு ஏற்றுக்கொள்… வெற்றிக்கு அணியினரை கை காட்டு.
  • போராடி கிடைக்கும் தோல்வி கூட கொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான்.
  • அமைதியாக நடவடிக்கை எடுங்கள். சிங்கம் தாக்கும் போது சத்தம் இடுவது இல்லை.
  • உங்களின் ஒரு வெற்றி, ஆயிரம் விமர்சனங்களுக்கான முற்றுப்புள்ளி.
  • தலைமை என்பது நாம் நினைத்ததை நடத்திக் காட்டுவதற்கான ஒரு கருவி.
  • ஒரு செயலை செய்ய வேண்டுமென்றால், செய்து முடித்துவிட வேண்டும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது.
  • நீங்கள் செய்யும் தவறுகளும் சரியானவையே.. அவற்றை நீங்கள் மீண்டும் செய்யாமல் இருந்தால்.
  • நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்த பின்னர், அதன் முடிவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
  • என்னை பொறுத்த வரையில் எதிர்ப்பு என்பது, மற்றொரு எதிர்ப்பு.
  • என் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளன. ஒரு தொடரை இழந்த பிறகும் அல்லது ஒரு தொடரை வென்ற பிறகும், அவைகள் என்னிடம் ஒரே மாதிரி தான் நடக்கிறது.
  • உங்களை கேள்வி கேட்கும் தகுதி யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பதில் சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டுமே உண்டு.
  • உங்கள் தனித்திறன் என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்களுடையதாகிவிடும்.
  • நான் எதற்கும் வருத்தப்படுவதில்லை. எது உங்களை கொல்லாதோ அது உங்களை வலுப்படுத்தும்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு பற்றி தோனி கூறிய சில பொன்மொழிகள்!

  • கூட்டத்துக்காக நீங்கள் விளையாடக்கூடாது, நாட்டுக்காக விளையாட வேண்டும்.
  • நம் நாட்டில் நிலையாக இருக்கும் ஒரே விஷயம் ‘கிரிக்கெட்’ மட்டுமே..
  • ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக அல்ல, ஒரு சிறந்த மனிதராக மக்கள் என்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
  • சதம் அடிப்பதைவிட, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதே எனக்கு முக்கியம். அப்படியான கூட்டணி உருவாகிவிட்டாலே சதங்கள் தானாய் அமையும்.
  • நான் விளையாடாத போது விளையாட்டிலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!