சீன வம்சாவளியைச் சேர்ந்த புரூஸ் லீ, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் நவம்பர் 27 அன்று 1940-ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே குங்ஃபூ கலையில் சில மாற்றங்களை செய்து வந்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் மூலம் அனைவரையும் அசரவைத்தார். புரூஸ் லீயின் நுட்பமான வேகம் நிறைந்த சண்டைக் காட்சிகளை பதிவு செய்வதற்கு, பலவித கேமராக்கள் வைத்தும் சரியாக ஈடுகொடுக்க முடியாமல் திணறியது ஹாலிவுட். குங்ஃபூ மன்னன், சண்டைக் கலையின் வித்தகன், புரூஸ் லீ கூறிய 20 பொன்மொழிகள் உங்களுக்காக இங்கே.
- எளிமையான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யாதீர்கள். கடினமான வாழ்வை எதிர்கொள்ள பலத்தை கேளுங்கள்.
- அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம். குணம் தான் மரியாதையைப் பெற்றுத் தரும்.
- சந்தோசமாக இரு, திருப்தி அடையாதே!
- எதிர்மறை எண்ணங்களை அகற்றுங்கள். உங்களால் முடியாது என்று நினைத்தால் முடியாது. உங்கள் அவநம்பிக்கை வெற்றியை தடுத்து விடும்.
- வாழ்க்கை ஒரு போர்க்களம் போன்றது. இதில் பலமானவனோ, வேகமானவனோ வெற்றி பெறப் போவதில்லை. தன்னால் முடியும் என்பதை நம்புபவன் தான் வெற்றி பெறுகிறான்.
- முடியும் என சொல்வது பெரிதல்ல. எதையும் முயன்று முடித்துக் காட்ட வேண்டும்.
- எதைக் கண்டும் பின்வாங்காதீர்கள். சிரிக்க வேண்டிய இடத்தில் சிரியுங்கள். உதைக்க வேண்டிய இடத்தில் உதையுங்கள்.
- கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்..!
- உன் கோபம் உன்னை கோமாளி ஆக்கி விடும்.
- தோல்வியைக் கண்டு பயப்படாதே. சில முயற்சிகளில் தோற்றால் கூட அது உனக்கு பெருமையே.
- உன் மீது நம்பிக்கை இருந்தால், தோல்வி கூட உன்னை நெருங்க பயப்படும்.
- ஆயிரம் வித்தியாசமான கிக்களை ஒரு முறை அடித்தவனை விட. ஆயிரம் முறை ஒரே கிக் அடித்தவன் மீதே பயம் அதிகம்…!
- ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் செலவிட்டால், நீங்கள் அதை ஒருபோதும் செய்ய முடியாது. உங்கள் இலக்கை நோக்கி தினமும் குறைந்த பட்சம் ஒரு அடியாவது எடுத்து வையுங்கள்.
- இன்றும் நான் சாதித்து விட்டேன் என்று சொல்லத் துணிவு இல்லை. நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் கற்றல் எல்லையற்றது.
- மற்ற மனிதனுக்கு எதிராக வெற்றி பெறுபவன் வலிமையானவன். ஆனால் தன்னைத்தானே வெற்றி பெறுபவன் மிகவும் வலிமையானவன்.
- நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்கள் எனில், நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை.
- உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கு இந்த உலகில் நான் இல்லை, என்னுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கும் நீங்கள் இந்த உலகில் இல்லை.
- தவறுகளை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தால் தவறுகள் எப்போதும் மன்னிக்கக்கூடியவை.
- ஒரு புத்திசாலித்தனமான பதிலில் இருந்து ஒரு முட்டாள் கற்றுக்கொள்வதை விட, ஒரு முட்டாள்தனமான கேள்வியிலிருந்து ஒரு புத்திசாலி அதிகம் கற்றுக்கொள்ள முடியும்.
- உங்கள் முன் எந்த வாய்ப்பும் தென்படவில்லையெனில், தேவையான வாய்ப்பை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.
Also Read: பெண் சிறப்பை போற்றும் பொன்மொழிகள்