வாரன் எட்வர்ட் பஃபெட் அமெரிக்கா ஐக்கிய நாட்டை சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். Berkshire Hathaway எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். தொழில் தொடங்க இருக்கும் முதலீட்டார்களுக்கும் இளம் தொழில் முனைவோர்களுக்கும் ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். வாரன் பஃபெட் அவர்களின் சிறந்த பொன்மொழிகள்!
- முதல் விதி ஒருபோதும் பணத்தை இழக்கக்கூடாது. இரண்டாம் விதி ஒருபோதும் முதல் விதியை மறக்கக் கூடாது.
- உங்களை விடவும் சிறந்தவர்களிடம் நேரத்தை செலவு செய்திட துவங்குங்கள். அவர்களின் வழியில் நீங்கள் செல்லலாம்.
- நான் பணக்காரனாக போகிறேன் என்று எனக்கு எப்போதும் தெரியும். நான் அதைப்பற்றி ஒரு நிமிடம் கூட சந்தேகித்தது இல்லை.
- நீங்கள் வேலைபார்க்கும் அதே துறையில் வேலை பார்க்கிறவர்கள் மட்டுமே உங்களுக்கு அருகில் இருப்பது போதுமானது அல்ல. மாறாக, உங்களை ஊக்குவித்து உங்களை மேன்மைபடுத்தி உங்களை சிறந்தவராகவும் சிறந்த தொழில்முனைவோராகவும் மாற்றுகிறவர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
- தினந்தோறும் 500 பக்கங்கள் படிப்பதற்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களது அறிவை வளர்க்க உதவும். இதனை அனைவராலும் செய்துமுடிக்க முடியும் ஆனால் அனைவரும் இதனை செய்யமாட்டார்கள். தொடர்ந்து படிக்க பழகிக்கொள்ளும்போது உங்களோடு உங்களது அறிவும் வளரும்.
- நீ உறங்கி கொண்டு இருந்தாலும் உனக்கு வருமானம் வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள். இல்லாவிட்டால் சாகும்வரை நீ உழைத்து கொண்டே இருக்க வேண்டும்.
- ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் – உங்களை எத்தனை பேர் ஆத்மார்த்தமாக நேசிப்பார்கள் என்பதையும் நீங்கள் எவ்வளவு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்கள் என்பதனையும் பணம் ஒருபோதும் தீர்மானிக்காது. ஆகவே உங்களின் மீது அன்பு செலுத்துகிறவர்களையும் உடல் ஆரோக்கியத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
- உன்னுடைய உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், உன்னிடம் உள்ள பணத்தை உன்னால் கட்டுப்படுத்த முடியாது.
- தேவையற்ற பொருட்களை வாங்கிக் கொண்டே இருந்தால், விரைவில் தேவையான பொருட்களை இழக்க நேரிடும்.
- நீ எங்கே செல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும், எங்கிருக்கிறாய் என்பதில் அல்ல.
- வாரன் பபெட் பரிந்துரைக்கும் பிரபலமான இரண்டு விதிமுறைகள் உண்டு, ஒன்று – எக்காரணத்தை முன்னிட்டும் பணத்தை இழக்கக்கூடாது. இரண்டாவது விதிமுறை – முதல் விதிமுறையை மறக்க கூடாது.
- ஆற்றின் ஆழம் அறிய இருக்கைகளை விட்டு ஒருபோதும் சோதனை செய்யக் கூடாது.
- மிகவும் மதிப்புமிக்க முதலீடு என்பது நேரம், மிகவும் மோசமான முதலீடு என்பது பணம்.
- உங்களது நிறுவனத்தை ஒரு நல்ல விலைக்கு விற்க முயலுங்கள். நீங்கள் ஒரு சிறந்த பொருளை விற்பனைக்கு மக்களிடம் கொண்டு சென்றால் அவர்கள் நீண்ட காலத்திற்கு உங்களுடைய பொருள்களை வாங்கி உங்களது நிறுவனத்திற்கு உண்மையாக நடந்துகொள்வார்கள்.
- உங்களது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் முற்காலத்தில் எடுத்த முடிவு உங்களது வியாபாரத்தை எந்த விதத்தில் பாதித்து இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள். உங்களது கடந்த காலத்தை பின்னோக்கி பார்ப்பதற்கு ஏதுவாக காலக்கண்ணாடியை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.
- நான் பணக்காரன் ஆவேன் என எனக்குத்தெரியும். அதில் ஒரு நிமிடம் கூட எனக்கு சந்தேகம் வந்தது கிடையாது.
- நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியாமல் செய்யும் போது தான் ஆபத்து வருகிறது.
- நான் எனது வாழ்வில் செய்த சிறந்த விசயம் என்னவென்றால் சிறந்த ஹீரோக்களை [முன்னோடிகளை] தெரிவு செய்தது தான். ஒவ்வொருவருக்கும் ரோல்மாடல் இருப்பார்கள். அவர்களை வெறுமனே தெரிவு செய்துவிடாமல் சரியான காரணத்திற்காக தெரிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.
- ஒரு பொருள் உங்களுக்கு தேவையென நீங்கள் கருதினால் அதனை அவசரகதியில் வாங்காதீர்கள்.
- ஒரு சிறந்த நிறுவனத்தை அதிக பணம் கொடுத்து வாங்க மாட்டேன். மாறாக, ஒரு சிறந்த நிறுவனத்தை சரியான பணத்தை கொடுத்து வாங்குவேன்.
Also Read: கல்வியின் சிறப்பைக் கூறும் பொன்மொழிகள்!
ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!
‘மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது’: ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய 16 சிறந்த பொன்மொழிகள்!