- பயணங்கள் நமக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கின்றன. – பெஞ்சமின் டிஸ்ரேலி
- நான் மெதுவாக நடப்பவன்தான். ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. – ஆப்ரஹாம் லிங்கன்
- வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. நாம்தான் நடந்து நடந்து பாதை போட வேண்டும் – டிஸ்ரேலி
- நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. – மார்ட்டின் லூதர் கிங்
- வெற்றி என்பது குறிக்கோள் அன்று, அது ஒரு பயணமே ஆகும். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். – இங்கர்சால்
- நடந்துகொண்டே இரு… பாதை தானாக உருவாகும் – ஜென் தத்துவ மொழிகள்
- செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்லது மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.
- எதிரி இல்லை என்றால், நீ இன்னும் இலக்கை நோக்கி பயணிக்கவில்லை என்று அர்த்தம்.
- எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே. உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.
- ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை.
- பாதைகள் தொடர்ந்தால் பயணங்கள் முடியாது.. விழுந்தவன் துணிவுடன் மீண்டும் எழுந்தால் இனி உனக்கு வெற்றி மட்டும் தான் உன் வாழ்க்கை.
- ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றது.
- பயணம் அறிவாளியை மேதையாக்கும்.
- புயலுக்கும் பூகம்பத்துக்கும் இடையிலான புரியாத போராட்ட பயணம் தான் வாழ்க்கை. ஆரம்பத்திலேயே புரிய வேண்டுமென நினைத்தால் சுவாரஸ்யம் இருக்காது.
- பாதைகளில் தடைகள் இருந்தால் அதை தகர்த்து விட்டு தான் செல்ல வேண்டும் என்றில்லை. தவிர்த்து விட்டும் செல்லலாம் எறும்பைப் போல.
- நம்பிக்கை என்னும் படியில் நீ இருக்கும் வரை, வெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்.
- அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம். ஆனால் உனக்கான வாழ்க்கைப் பாதையை நீ தேர்ந்தெடுக்கும் வரை வெற்றி என்பது உனக்கு கிடைக்காத பொக்கிஷமாகவே இருக்கும்.
Also Read:‘சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்’ சேமிப்பு பற்றிய 35 பொன்மொழிகள்!
‘மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது’: ஸ்டீபன் ஹாக்கிங் கூறிய 16 சிறந்த பொன்மொழிகள்!
‘நட்பும் ஒரு பொக்கிஷம் தான், நீ அதற்கு உண்மையாக இருக்கும் வரை..’ நட்பு பற்றிய…