ஃபிடல் காஸ்ட்ரோ கூறிய சிறந்த 16 பொன்மொழிகள்

Date:

பிடல் காஸ்ட்ரோ, கியூபா புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி. கியூபாவின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் 49 ஆண்டுகள் பணியாற்றினார் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல 634 முறை பலரும் பலவிதமாக முயற்சித்தனர். அத்தனையும் முறியடித்து வெற்றி பெற்ற, பிடல் காஸ்ட்ரோ கூறிய புரட்சிகரமான பொன்மொழிகள் இங்கே…

 1. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
 2. தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.
 3. பசியினால் திருடுகிற ஏழைகளை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அரசிடமிருந்து கோடி கணக்காக திருடுவார்கள் ஒருநாள் கூட சிறைத்தண்டனை அனுபவித்ததில்லை.
 4. நான் என்னை வேலைக்கு அர்ப்பணித்து விட்டேன். நான் அதன் அடிமை. நான் பார்க்க நினைக்கிற செய்ய நினைக்கிற பணிகளை பிறருக்கு தருவதில்லை. எனக்கு வேலை செய்ய பிடிக்கும். காலம் முழுவதும் நான் அப்படியே இருக்க நினைக்கிறன்.
 5. புரட்சி என்பது ஆண்கள் சார்ந்து மட்டுமல்ல.. பெண்களும் புரட்சியில் பங்கு பெறுவதே உண்மையான புரட்சி.
 6. நீ செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லை என்றால் அது நீ போகும் பாதையே இல்லை. வேறு யாரோ போன பாதை.
 7. தயங்குறவர்கள் கை தட்டுகிறார்கள். துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்.
 8. நூலகங்களையும் புத்தகங்களையும் பார்க்கும் போதெல்லாம் என் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும் கற்பதிலும் செலவிட முடியவில்லையே என்று வருந்துகின்றேன்.
 9. கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
 10. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் புரட்சி.
 11. நீங்கள் என்னை தண்டியுங்கள், சிறையில் அடையுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் வரலாறு எனக்கு நீதி வழங்கும்.
 12. ஒரு மனிதனை விலைக்கு வாங்கிவிடலாம் ஆனால் மக்களை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது.
 13. எங்களுக்கென்று சில பழக்க வழக்கங்கள் உண்டு. அதைக்கொண்டு எங்களை மதிப்பிடுவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் இப்படிதான் இருப்போம்.
 14. உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான்.
 15. அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர். ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
 16. தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்…

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!