ஸ்டீபன் ஹாக்கிங் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் முக்கியமானவர். அறிவியல் ஆராய்ச்சியாளரான இவர், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், பேச முடியாமல் முடங்கிய நிலையிலும் அண்டவியல், காலப்பயணம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். இவர் கூறிய சிறந்த 16 பொன்மொழிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
ஸ்டீபன் ஹாக்கிங் பொன்மொழிகள்
- கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள். மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்.
- எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம். அங்கு எப்போதும் உங்களால் செயல்பட மற்றும் வெற்றிபெற முடிந்த ஏதாவது இருக்கும்.
- இந்த பிரபஞ்சத்தை விட பெரியது அல்லது பழமையானது எதுவுமில்லை.
- நமது பேராசை மற்றும் மூடத்தனத்தின் மூலம் நாம் நம்மை அழித்துக்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறோம்.
- நீங்கள் எப்போதும் கோபமாகவோ அல்லது குறை கூறிக்கொண்டோ இருந்தால், உங்களுக்கான நேரம் மற்றவர்களிடம் இருக்காது.
- நமது நடவடிக்கையின் உயரிய மதிப்பினை நாம் தேடிப்பெற வேண்டும்.
- அமைதியான மக்கள் சத்தமான மனதைக் கொண்டிருக்கிறார்கள்.
- மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது.
- உழைப்பு உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றது. உழைப்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது.
- வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லாமல் இருந்தால் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
- நாம் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்த பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்புவது இயற்கையானதே.
- ஒரு மிகச் சாதாரண நட்சத்திரத்தின் மிகச் சிறிய கிரகத்தில் வாழும் சற்றே முன்னேறிய குரங்கினம் தான் நாம்.
- வாழ்க்கை உள்ளவரை நம்பிக்கைக்கும் இடம் உண்டு.
- எனக்கு கடவுள் மீது பயம் இல்லை அவரை நம்பியவர்கள் மேல்தான் பயமே.
- என்னுடைய இலக்கு எளியது தான். அது இப்பிரபஞ்சத்தை முழுமையாக புரிந்து கொள்வதுதான். அது ஏன் இப்படி இருக்கிறது? எதற்காக இப்படி இருக்கிறது?
- நாம் பூமியைத் தவிர வேறு எங்கேனும் வாழ்வதற்கு முயற்சி எடுக்கவில்லை என்றால் ஆயிரம் வருடத்திற்கு பிறகு மனித இனம் என்பது இருக்கவே இருக்காது.
Also Read: கவியரசு கண்ணதாசன் கூறிய சிறந்த 45 பொன்மொழிகள்!
‘வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது’ மாவீரன் நெப்போலியன் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்!