அப்துல் கலாம் அவர்களின் தன்னம்பிக்கை தரும் 15 பொன்மொழிகள்!
- உங்கள் முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அடுத்த முறை தோற்று விட்டால், உங்களுடைய முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன.
- வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கு, உழைப்பவர்களுக்கு மட்டுமே சிறந்தவற்றை வழங்குகிறது.
- நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
- உங்கள் சிறந்த ஆசிரியர், உங்கள் கடைசி தவறு.
- அனைத்து பறவைகளும் மழையின் போது தங்குமிடம் காண்கின்றன. ஆனால் கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதன் மூலம் மழையைத் தவிர்க்கிறது.
- சிந்தனை என்பது மூலதனம், ஒரு நிறுவனம், ஒரு வழி, கடின உழைப்புதான் தீர்வு.
- நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள்.
- நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
- கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு.
- ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல… உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…
- அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
- ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
- கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
- கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், அதை வென்றுவிடலாம்.
- உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே… ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.