“எதையாவது சொல்ல வேண்டும் என்றால் அதை ஆணிடம் சொல்லுங்கள். எதாவது காரியம் முடிய வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் சொல்லுங்கள்” – மார்கரெட் தாட்சர்
“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்..” அன்னை தெரசா
“மனிதர்கள் அவர்களுடைய கடமையை மறக்கப் பழகியிருக்கிறார்கள்; ஆனால், உரிமைகளை நினைவில் வைத்திருக்கிறார்கள்” –இந்திராகாந்தி

“ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவைத் தவறவிடுகிறோம்.” – ஹெலன் கெல்லர்
“வா, சிறிது காலம் நம் தலைக்கு மேலே சிறிய கூரையை அமைக்கலாம். மேலும் அங்கே கவனி, உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் சிறியதோர் வெற்றிடம் இருக்கிறது” – அம்ருதா ப்ரீதம்
“இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்” –அன்னை தெரசா

“கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்…
கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை” –அன்னை தெரசா
“இந்திரா காந்தியின் பொன்மொழி “கல்வி கற்பதும்,கற்பிப்பதும் மிகவும் முக்கியம். அதே நேரத்தில் சிறந்த மனிதனை உருவாக்குவதாக அவை அமைய வேண்டும்” – இந்திரா காந்தி
“கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான்
அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம்
குழந்தைகளுக்குக் கூட அன்னையாக முடியும்”. – அன்னை தெரசா
“தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய்.
ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூடச் செய்யாதே”.
– அன்னை தெரசா
“அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான்” – அன்னை தெரசா
“உலகில் இரண்டே வகையான மனிதர்கள் தான், ஒன்று வேலை செய்பவர்கள், மற்றொன்று அதற்கான மரியாதையை மட்டும் ஏற்றுக் கொள்ள முன்வருபவர்கள்.” –இந்திரா காந்தி

“மூடிய விரல்களுடன் கைகுலுக்க முடியாது”- இந்திரா காந்தி
“பறக்க விரும்புபவனால் படர முடியாது.” –ஹெலன் கெல்லர்
“ஆண்களோடு பெண்கள் சரிநிகர் சமமாக உயர வேண்டுமானால், அவர்கள் பொருளாதார ரீதியில் அதிகாரம் பெற்று தமது சொந்தக் கால்களில் நிற்கும் வலிமையையும், தன்னம்பிக்கையையும் பெற வேண்டும்.” – ஜெயலலிதா
Also Read: காதல் பற்றி அறிஞர்கள் கூறிய அற்புதமான 23 பொன்மொழிகள்!