“நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை” – ஒரிசன் ஸ்வெட் மார்டென் கூறிய சிறந்த 14 பொன்மொழிகள்!

Date:

ஒரிசன் ஸ்வெட் மார்டென் அவர்கள் ஒரு அமெரிக்க எழுத்தாளர். வாழ்க்கையில் வெற்றி பெறுதல் தொடர்பான பல்வேறு ஊக்கமூட்டும் கருத்துகளை தனது எழுத்துக்களில் கையாண்டவர் ஒரிசன் ஸ்வெட் மார்டென். மேலும் இவரது எழுத்துகள் பொது அறிவு கொள்கைகள், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நல்லொழுக்கங்கள் ஆகியவற்றை விவாதிப்பதாக இருந்தன. ஒரிசன் ஸ்வெட் மார்டென் கூறிய சிறந்த 14 பொன்மொழிகள்!

ஒரிசன் ஸ்வெட் மார்டென் பொன்மொழிகள்!

  1. அதிகமாக பெறுவதற்கு, கண்டிப்பாக நாம் அதிகமாக கொடுக்கவும் வேண்டும்.
  2. பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்.
  3. விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் குழந்தையே வெற்றி.
  4. ஒருவரின் தோல்விகளின் மூலம் உங்களால் அவரை அளவிட முடியாது.
  5. நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை.
  6. “உங்கள் வாடிக்கையாளரின் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள்” என்பதே ஒவ்வொரு தொழிலதிபருக்குமான சிறந்த விதி.
  7. பெரும்பாலான மனிதர்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் தோல்விகளை எதிர்கொண்டதாலேயே இறுதியில் வெற்றி பெறுகின்றார்கள்.
  8. ஒரு சரியான அமைப்பு, இலக்கை அடைவதற்கான தூரத்தின் அளவை குறைக்கும்.
  9. நமது எண்ணங்கள் மற்றும் கற்பனை ஆகியவை மட்டுமே நமது சாத்தியக் கூறுகளுக்கான உண்மையான வரம்புகளாகும்.
  10. அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்; பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி, அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள்.
  11. ஒரு வலிமையான, வெற்றிகரமான மனிதன் தனது சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுபவன் அல்ல; அவன் தனக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கிக்கொள்கிறான்.
  12. ஒரு விருப்பம் ஒரு வழியை கண்டறிகின்றது.
  13. நம்முடைய சோதனைகள், துக்கங்கள் மற்றும் வருத்தங்கள் ஆகியவையே நம்மை வளரச் செய்கின்றன.
  14. தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.

Also Read: ஜோசப் ஸ்டாலின் பொன்மொழிகள்!

“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம்…

வாரன் பஃபெட் அவர்களின் சிறந்த 20 பொன்மொழிகள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!