வெற்றியின் ரகசியம் கூறும் பில்கேட்ஸின் பொன்மொழிகள்…
- வெற்றி ஒரு மோசமான ஆசிரியர், அது புத்திசாலிகளையும் மயக்கி தோல்வியே நமக்கு இல்லை என்று நினைக்க வைத்துவிடும்.
- உங்களால் நம்பிக்கையுடன் கனவு காண முடியும் என்றால், கனவில் கண்டதை நிஜத்திலும் செயல் வடிவில் செய்து முடிக்க முடியும்.
- கடினமான வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களை தேர்வு செய்கிறேன். ஏனென்றால் அவர்களால் தான் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழியை கண்டுபிடிக்க முடியும்.
- நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கிறது. ஆனால், அனுபவமோ தவறான முடிவிலிருந்து கிடைக்கிறது.
- எல்லோரும் நினைப்பது போல் நான் வெற்றியாளன் அல்ல. இப்போதும் வெற்றியடையும் முயற்சியில் தான் இருக்கிறேன்.
- பிறக்கும் போது ஏழையாய் இருப்பது உன் தவறல்ல. ஆனால் இறக்கும் போது ஏழையாய் சாவது தான் உன் தவறு.
- பிரச்சினைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வுகளையும் தேடுகிறேன்.
- கற்றுக்கொடுப்பதனால் தோல்விகளே என் மனதுக்கு நெருக்கமானவை.
- கழிவறையை சுத்தம் செய்ய வேண்டுமென்றாலும் கூட, அதற்கு நூறு சதவிகித உழைப்பைக் கொடுப்பேன்.
- வலிமையாக இருந்தாலும் என்னுடைய மோசமான செயல் திட்டங்கள் எனக்கு தோல்விகளை வழங்கியிருக்கின்றன.
- வறுமையில் இருப்பவர்களை என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறேன், அவர்களின் வறுமையை அல்ல.
- என் அடுத்த முதலீடு எதில் என்பதை என் வாடிக்கையாளர்களே தீர்மானிக்கிறார்கள்.
- மகிழ்ச்சியற்ற வாடிக்கையாளர்களே என் நிறுவனத்தின் அடுத்த கட்ட ஆரம்பமாக இருக்கிறார்கள்.
- திட்டமிட்ட செயலை சிறப்பாக செய்ய முடியவில்லை என்றாலும் கூட, குறைந்த பட்சம் செய்து முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன்.
Also Read: நிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்