Home பொன்மொழி கல்வியின் சிறப்பைக் கூறும் பொன்மொழிகள்!

கல்வியின் சிறப்பைக் கூறும் பொன்மொழிகள்!

Sasin Tipchai

“எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்” கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் அறிஞர்களின் பொன்மொழிகள்.

 1. கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா. – மாஜினி
 2. கல்வியும், வாளுமே ஒரு தேசம் புத்துயிர் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும். – மாஜினி
 3. கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்று மூடுபவன். – விக்டர் ஹூகோ
 4. கல்வியின் லட்சியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதன்று; நல்ல காரியங்களைச் செய்வதில் ஆசையும் ஆனந்தமும் உண்டாக்குவதேயாகும். – ரஸ்கின்
 5. கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதேயாகும். – ரஸ்கின்
 6. பொய்க் கல்வி பெருமை பேசும், மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும். – ரஸ்கின்
 7. ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே. – ரஸ்கின்
 8. மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். – ரஸ்கின்
 9. சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும். – ரஸ்கின்
 10. நடை எழுதவும், இசை பாடவும், உருவம் தீட்டவும் முழு வல்லமை பெற்ற பொழுதே கல்வி முற்றுப் பெறும். – ரஸ்கின்
 11. கல்வியின் லட்சியம் விஷயங்களை அறிவது அல்ல. வேலைக்கு அடிகோலுவது அல்ல. சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும். – ரஸ்கின்
 12. அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம். – ஆவ்பரி
 13. கல்வி கற்பிக்க ஒவ்வொருவனிடம் ஒரு மாணவனாவது இருக்கவே செய்கிறான். – ஆவ்பரி
 14. பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கெளரவமானவராக வளர்ப்பதன் சாரமாகும். – ஹோம்ஸ்
 15. கல்வி எதற்காக? நல்ல தொழிலாளி ஆக்குவதற்கே. – ஆவ்பரி
 16. வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எங்ஙனம் வாழ்வது என்பதே. – ஆவ்பரி
 17. கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம் கற்பதை மறப்பது. – ஆவ்பரி
 18. எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று.! அடக்கம், ஒழுங்கு அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை. – பர்க்
 19. சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும். – மில்டன்
 20. இளஞ்சிறார் செவிமடுக்க வேண்டிய மொழிகள் இவையே ‘உனக்கு வேண்டியதை நீயே உண்டாக்கிக் கொள்ளலாம். நீ பட்டினி இருப்பதும் இல்லாததும் உன் முயற்சியைப் பெறுத்ததேயாகும்.’ – மெல்போர்ன்
 21. இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன். – யுரீப்பிடீஸ்
 22. மாணவனிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாத வரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை. – மில்
 23. சிறுவர்களுகான பிரமாதமான கல்வி, அறிவு ஊட்டுவதல்ல. நல்ல பழக்க வழக்கங்கள் அமைப்பதேயாகும். – போனால்டு
 24. மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானை விட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது. – கதே
 25. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகி விடமாட்டார். – கதே
 26. மூடர் முன் முற்றக் கற்றவனாகக் காட்சிக் கொள்ள விரும்புகிறவன் முற்றக் கற்றவர் முன் மூடனாகக் காட்டிக் கொள்கிறான். – குன்றிலியன்
 27. அதிகம் கற்றவரே அற்பமாகவே தெரியும் என்று அறிந்து கொள்ளக் கூடியவர். – ஆவ்பரி
 28. இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு. பிறரிடம் பெறுவது ஒன்று. தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது. – கிப்பன்
 29. கல்வியில்லாத ஆன்மா பணி செய்யாத சலவைக் கல். – எடிஸன்
 30. நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்துவதற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும். – தாக்கரே
 31. அதிகம் படிப்பவன் அகந்தை உடையான், கல்வியைக் காட்டுவதில் கருத்துடையான், அதிகம் பார்ப்பவன் அறிவு உடையான், அயலாருடன் வாழ்வான், அவர்க்கு உதவுவான். – லிச்சென்பரி
 32. கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது. டெம்பிள் ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும். – பர்க்
 33. வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கற்றவன்.-யங்
 34. நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான். – ஸ்காட்
 35. சான்றோனாக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலே யாகும். அதனால் பெறும் அறிவும் தன்னைப் பிறர் மெச்சும்படி செய்ய மட்டும் கற்றுக் கொண்ட ஒருவித மடமையேயன்றி வேறன்றுமில்லை. – போலிங்புரூக்

Also Read: ‘உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்’ பணம் பற்றிய…

ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!

‘காலத்தின் மதிப்பு தெரிந்தால் உனக்கு வாழ்வின் மதிப்பு தெரியும்’: நெல்சன் மண்டேலா கூறிய சிறந்த…

NO COMMENTS

error: Content is DMCA copyright protected!