வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 3

0
47
Vellungal_Parkkalaam_Program_Logo

பொது அறிவு வினா விடை புதிர்க் கேள்விகளில் “உயரமானது எது”, “நீளமானது எது”, “எங்கு நடந்தது”, “எப்போது நடந்தது” போன்ற வார்ப்புரு கேள்விகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அதற்கு அப்பாற்பட்டு அறிந்ததை பகிரும் வகையிலும் பகிர்வது பயனுள்ளதாக இருக்கும் வகையிலும் இம்முறை ‘வெல்லுங்கள் பார்க்கலாம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கேள்வி அமைப்பு போட்டித் தேர்வுகளிலும் அமையப் பெற்றிருக்கிறது. இருப்பினும் தமிழ் இணையத்தில் உருவாக்குவது இதுவே முதல் முறை.

 1. 1 கீழ்க்கண்டவற்றுள் மூன்று நகரங்கள் புவியியல் ரீதியில் ஒன்றுபட்டிருக்கின்றன. அப்படியானால் அந்த தனித்த நகரம் எது?

  1. கெய்ரோ (எகிப்து)
  2. வாலெட்டா (மால்டா)
  3. லண்டன் (ஐக்கிய இராச்சியம்)
  4. புது டெல்லி (இந்தியா)
  Correct!
  Wrong!

  நதிக்கரையோர நகரங்கள்!!!

  உலகில் முக்கியமான நாகரிகங்கள் நதிக்கரைகளிலிருந்துதான் தொடங்கின. ஏனென்றால், விவசாயத்திற்குத் தேவையான வண்டல் மண்ணும், தேவையான அளவு நீர் கிடைத்ததாலும், காலநிலை சரியாக இருந்தததாலும் மற்றும் போக்குவரத்திற்கு இலகுவாக இருந்தததாலும் அவர்கள் நதிக்கரையோரங்களில் குடியேறினர். தமிழகத்தில் கூட முக்கிய நகரங்கள் நதிக்கரையில் தான் அமைந்திருக்கின்றன உதாரணமாக, மதுரை (வைகை), திருச்சி (காவிரி), சென்னை (கூவம் & அடையாறு). சரி! இப்போது கேள்விக்கு வருவோம். கேள்வியில் இருக்கும் நான்கு தேசிய நகரங்களில் கெய்ரோ நைல் நதிக்கரையிலும், லண்டன் தேம்ஸ் நதிக்கரையிலும், புது டெல்லி யமுனை நதிக்கரையிலும் அமைந்திருக்கின்றன. ஆனால், ஐரோப்பிய கண்டத்திலுள்ள மால்டா எனும் நாட்டின் தலைநகரான "வாலெட்டா" எந்த நதிக்கரையிலும் அமைந்திருக்கவில்லை. மேலும் இந்த நாட்டில் நிரந்தர ஆறுகளோ அல்லது ஏரிகளோ கிடையாது.

 2. 2 கீழ்க்கண்டவற்றுள் மூன்று நாடுகள் அரசியலமைப்பு ரீதியில் ஒன்றுபட்டிருக்கின்றன. அப்படியானால், அந்த தனித்த நாடு எது?

  1. மக்கள் சீனக் குடியரசு
  2. கியூபாக் குடியரசு
  3. வியட்நாம் சமவுடைமைக் குடியரசு
  4. தென்னாப்பிரிக்கா குடியரசு
  Correct!
  Wrong!

  பொதுவுடைமை நாடுகள்!!!

  உலகில் தற்போது ஐந்து நாடுகள் மட்டுமே பொதுவுடைமை(Communism) நாடுகளாக அறிவித்து செயல்பட்டு வருகின்றன.  தென்னாப்பிரிக்காவில் பொதுவுடைமைக் கட்சி, ஆட்சியில் பங்குவகிக்கின்றது. ஆனால், தென்னாப்பிரிக்கா குடியரசு ஒரு பொதுவுடைமை நாடு அல்ல. 

 3. 3 கீழ்க்கண்டவற்றுள் மூன்று நாடுகள் பூகோள அமைப்பில் ஒன்றுபட்டிருக்கின்றன. அப்படியானால், அந்த தனித்த நாடு எது?

  1. சீன மக்கள் குடியரசு
  2. ஆப்கானிஸ்தான்
  3. சிறீலங்கா
  4. இந்தியா
  Correct!
  Wrong!

  இந்தியத் துணைக்கண்டம்!!!

  இந்தியத் துணைக் கண்டம் என்பது தெற்கே இந்தியப் பெருங்கடலிலிருந்து வடக்கே இமய மலைத்தொடர் வரையும் மேற்கில் இந்து குஷ் மலைத்தொடரிலிருந்து, கிழக்கில் அரகான் மலைத்தொடர் வரையும் உள்ள ஒரு கண்டத்தட்டு ஆகும். இந்தியாவின் பெரும் பகுதி இந்த கண்டத்தட்டில் அமைந்திருப்பதால், இது இந்தியத் துணைக்கண்டம் என அறியப்படுகிறது. இந்திய கண்டத்தட்டு வடக்கு நோக்கி நகர்வதால் யுரேசியன் கண்டத்தட்டுடன் மோதுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தட்டில் வங்காள தேசம் , பூட்டான், இந்தியா, நேபாளம், பாக்கிஸ்தான், சிறீலங்கா மற்றும் மாலத்தீவுகள் (சிறிலங்கா மற்றும் மாலத்தீவுகள் தீவு நாடாக தனித்திருப்பது போல் தோன்றினாலும் அவை இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியே!!!) ஆகிய நாடுகள் உள்ளன.  ஆனால் சீன மக்கள் குடியரசானது யுரேசியன் கண்டத்தட்டில் அமைந்துள்ளது.

 4. 4 தொழில்நுட்ப உலகில் கீழ்க்கண்டவற்றுள் மூன்று தயாரிப்பு ரீதியாக ஒன்றுபட்டிருக்கின்றன! அப்படியானால் அந்த தனித்த தயாரிப்பு எது?

  1. ஐபோன் (iPhone)
  2. மேக்கின்டோஷ் (Macintosh)
  3. ஹோம் போட்(HomePod)
  4. பிக்சல் (Pixel)
  Correct!
  Wrong!

  Apple vs Google

  ஆப்பிள் நிறுவனமானது தனித்துவமான அடையாளங்களையும், உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் வெளிவந்தால், அதை வாங்குவதற்கு ஒரு நாள் முழுவதும் வரிசையில் நின்று நடைபாதையில் தூங்கி எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று விரும்பும் மக்களை மேற்கத்திய நாடுகளில் பார்க்க முடியும். ஆப்பிள் மோகம் தலைக்கேறிய இந்தியர்கள் சிலரோ ஒரு படி மேலே போய் தங்களின் சிறுநீரகங்களை விற்று ஆப்பிளின் தயாரிப்புகளை வாங்கிய கதையும் இந்தியாவில் நடந்தேறியது. சரி! இந்த கேள்விக்கு பதில் என்ன? ஐபோன் (iPhone), மேக்கின்டோஷ் (Macintosh), மற்றும் ஹோம் போட்(HomePod) ஆகியவை ஆப்பிளின் தயாரிப்புகள். ஆனால், பிக்சல் (Pixel) என்பது கூகுளின் தயாரிப்பு ஆகும்.

 5. 5 அரசியல் பார்வையில் கீழ்க்கண்டவற்றுள் தனித்த மாநிலம் எது?

  1. மத்திய பிரதேசம்
  2. கேரளா
  3. மகாராட்டிரம்
  4. இராஜஸ்தான்
  Correct!
  Wrong!

  இந்தியாவில் பொதுவுடைமை !!!

  கேரள மாநிலத்தில் சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே இந்தியப் பொதுவுடமைக் கட்சி பெரும் வெற்றியை பெற்றது. மேலும், உலக வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொதுவுடமைத் தலைவரொருவர் மக்களாட்சித் தேர்தல் வழியே மாநில ஆட்சிக்கு தலைமையேற்ற பெருமை கேரளத்தில் தான் நடந்தது. முதன் முதலில் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைத்ததும் கேரளத்தில் தான்.

 6. 6 பின்வரும் உலக நாடுகளின் பிரதம மந்திரிகளில் மூவருக்கு பொதுவான ஒற்றுமை ஒன்று உண்டு!!! அப்படியானால் வேறுபட்டிருப்பவர் யார்?

  1. ஏஞ்சலோ மெர்கல் (Angela Merkel)
  2. மார்கரெட் தாட்சர் (Margaret Thatcher)
  3. ஜெசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern)
  4. இந்திரா காந்தி (Indira Gandhi)
  Correct!
  Wrong!

  பெண் தலைவர்கள்!!!

  நவீன கால அரசியலில் பெண்கள் உயரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது உலக வரலாற்றில் நடந்த முக்கிய மாற்றமாகும். கிராமசபைத் தலைவர் முதல் ஐக்கிய நாடுகளின் சபைத் தலைவர் பதவி வரை பெண் தலைவர்கள் அலங்கரித்துவிட்டார்கள். ஆனால், சில புள்ளி விபரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சுதந்திரம் சம உரிமை போன்றவை கிடைத்து விட்டது என்று மேடையில் முழங்கினால் கைதட்டல் கிடைக்கலாம். ஆனால், அது உண்மையாகி விடாது. நீண்ட விளக்கம் தான், சரி! பதில் என்ன? ஏஞ்சலோ மெர்கல், மார்கரெட் தாட்சர் மற்றும் இந்திரா காந்தி முறையே ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் முதல் பிரதம மந்திரிகள் ஆவார்கள். ஆனால், உலகில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடக விளங்கும் நியூஸிலாந்தின் தற்போதைய (2018) பிரதமராக இருக்கும் ஜெசிந்தா ஆர்டெர்ன்(வயது:37) அவர்கள் அந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்

 7. 7 பின்வரும் இந்தியாவின் முக்கியமான நதிகளில் மூன்றிற்கு பொதுவான ஒற்றுமை ஒன்று உண்டு!!! அப்படியானால் வேறுபட்டிருக்கும் நதி எது?

  1. கங்கை
  2. நர்மதை
  3. காவேரி
  4. கோதாவரி
  Correct!
  Wrong!

  மேற்கே ஓடும் நதி!!!

  உலகில் உயிரினங்கள் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் ஆறுகள் தான். நதிகளை இந்தியாவில் இறைவனுக்கு நிகராகவும், பெண்ணின் மறு வடிவமாகவும் போற்றுவோர் உண்டு. நாம் நிலத்தின் மேல் பார்க்கும் ஆறுகளை போலவே நிலத்திற்கு அடியிலும் வலிமையான ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆறுகள் மேற்பரப்பில் பார்ப்பதற்கு அழகாக ரசிக்கும்படியாக காணப்பட்டாலும் உண்மையில் அதன் நீரோட்டத்தின் ஆற்றல் கற்பனைக்கு அப்பாற்பட்டது. பெருவாரியான ஆறுகள் பொதுவாக அதன் நீரோட்டத்தில் சென்று கடல்களில் கலக்கின்றன. அப்படி ஆறுகள் கடலில் கலக்கும் இடம் கழிமுகம் எனப்படும். சரி ஆறுகளைப் பற்றிய விளக்கம் போதும். கேள்விக்கு பதில் என்ன? இந்தியாவைப் பொறுத்தவரை அதன் முக்கிய ஆறுகள் அனைத்தும் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்கக் கடலில் கலக்கின்றன. எடுத்துக்காட்டாக கங்கை, காவேரி மற்றும் கோதாவரி போன்றவை. ஆனால் மூன்று ஆறுகள் மட்டும் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. அதில் ஒன்று தான் நர்மதை ஆறு.

 8. 8 கீழ்க்கண்ட தலைவர்களில் மூவர் ஒரு முக்கிய விடயத்தால் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அப்படியானால் அந்த தனித்த தலைவர் யார்?

  1. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  2. ஹோ சி மின்
  3. சேகுவேரா
  4. பிடல் காஸ்ட்ரோ
  Correct!
  Wrong!

  போர்ப்படைத் தலைவர்கள்!!!

  ஐக்கிய அமெரிக்க குடியரசானது (USA) நாடு பிடிக்கும் கொள்கையில் நாட்டம் கொண்டிருக்கா விட்டாலும், இயற்கை வளம் மிக்க நாடுகளை பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தும் செயலை எப்போதும் செய்து கொண்டுதானிருக்கின்றது. அமெரிக்கா ஒரு நாட்டின் மீது கண் வைத்து விட்டால், அந்நாட்டின் அரசை அதற்கு சாதமாக செயல்பட வைக்கும். அப்படி இல்லாவிட்டால் அந்நாட்டின் மீது போர் தொடுத்து அதை வென்று அமெரிக்காவிற்கு சாதமாக செயல்படும் அரசை அமைக்கும். இவ்வாறு உலக நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்து வென்ற போர்கள்தான் ஏராளம். இதற்கு விதிவிலக்காக இருந்த நாடுகள் கியூபாவும் வியட்நாமும். உலகில் பரவி வந்த பொதுவுடைமை அரசாங்கங்களை அடக்கி வைக்க அமெரிக்க ராணுவம் வியட்நாமின் மீது கை வைத்தது. ஆனால் அமெரிக்கா தன் வரலாற்றிலேயே முதல் தோல்வியை அடைந்தது வியட்நாமில்தான் (வரலாற்றாசிரியர்கள் சிலருக்கு இதில் மாறுபட்ட கருத்தும் உண்டு). சரி இந்த கேள்விக்கான விடை என்ன? ஹோசிமின், சேகுவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகிய புரட்சியாளர்கள் அமெரிக்கா எனும் நாட்டிற்கெதிராக  (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) போராடியவர்கள். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேய அரசிற்கு எதிராக படையை திரட்டி போராடியவர்.

 9. 9 இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்று. அது வழங்கப்படும் துறை ரீதியாக வேறுபட்டிருக்கிறது? அப்படி வேறுபட்டிருக்கும் விருது எது?

  1. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
  2. சாகித்திய அகாதமி விருது
  3. துரோனாச்சார்யா விருது
  4. அர்ஜுனா விருது
  Correct!
  Wrong!

  இந்தியாவில் விருதுகள்!!!

  இந்தியாவில் நாட்டிற்காக சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்களுக்கு சிறந்த குடிமக்களுக்கான விருதுகளாக பாரத் ரத்னா மற்றும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு துறைகளின் கீழ், அந்தந்த துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகின்றன. அப்படி துறை ரீதியாக பார்க்கும் பொழுது திரைப்படம், விளையாட்டு, இலக்கியம், ராணுவம் போன்ற துறைகளின் சார்பில் இந்திய அரசாங்கத்தால் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோனாச்சார்யா விருது, மற்றும் அர்ஜுனா விருது ஆகியவை விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக இந்திய அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும் விருதுகள் ஆகும். சாகித்திய அகாதமி விருது என்பது இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் விருது ஆகும்.

 10. 10 பின்வரும் அதிகாரங்களில் மூன்றிற்கு பொதுவான ஒற்றுமை ஒன்று உண்டு!!! அப்படியானால் வேறுபட்டிருக்கும் அதிகாரம் எது?

  தமிழ் கூறும் நல்லுலகில் அனைவரும் அறிந்த தகவல்தான் இருந்தாலும் தமிழை பற்றிய தகவல் இல்லாமல் முடிக்க விரும்பவில்லை.  

  1. காலம் அறிதல்
  2. தெரிந்து தெளிதல்
  3. அன்புடைமை
  4. அறிவுடைமை
  Correct!
  Wrong!

  அரசியலும் இல்லறவியலும்!!!

  உலகப்பொதுமுறை நூலாக விளங்கும் திருக்குறள் தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் மேன்மையை வாழ்வியலை மற்றும் பண்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்டும் முக்கிய நூலாகும். திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பால்கள் ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதிகாரங்களைக் கொண்டுள்ளது . ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னகத்தே அடக்கியுள்ளது. இவற்றுள் காலம் அறிதல், தெரிந்து தெளிதல் மற்றும் அறிவுடைமை ஆகியவை பொருட்பாலில், அரசியல் என்னும் இயலின் கீழ் வரும் அதிகாரங்கள் ஆகும். 

  ஆனால் அன்புடைமையோ அறத்துப்பாலில் இல்லறவியலின் கீழ் வரும் அதிகாரமாகும்.


  'வெல்லுங்கள் பார்க்கலாம்' போட்டியில் பங்கெடுத்தமைக்கு நன்றி.  முகநூல் மற்றும் ட்விட்டரில் இப்போட்டி பற்றி பகிர்ந்து, TNPSC, UPSC, வங்கிப் பணி தேர்வுகள் போன்ற போட்டி தேர்வுகளுக்காக பயின்று வரும் பிறரையும் இப்போட்டியில் பங்கெடுக்க செய்யலாம். மதிப்பெண்கள் பொருட்டல்ல என்பதை நினைவில் கொண்டு முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

  இங்கே, இப்பதிவின் கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில், உங்கள் கருத்துக்களை பதிவிட்டு புத்தகங்களை பரிசாகப் பெறுங்கள். (மூவருக்கு மட்டும்)

  இந்த போட்டி பற்றி கருத்துகளையும், விமர்சனங்களையும் வரவேற்கிறோம். 

  ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமையன்று 'வெல்லுங்கள் பார்க்கலாம்' போட்டி தொடர்ந்து நடைபெறும். 


வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 3

Created on
 1. Quiz result
  You scored
  Correct!
  Share Your Result
 2. Quiz result

  You scored
  Correct!
  Share Your Result