நேரில் ஒருவரிடத்தில் பேசும் போது குரலின் தொனி மற்றும் உடல்மொழியை வைத்து அந்த கருத்து கோபத்துடன் கூறப்பட்டதா, இல்லை வேடிக்கையாக சொல்லப்பட்டதா என புரிந்துகொள்வது எளிது. செல்போன் மெசேஜ் வழியாக தொடர்பு கொள்ளும் போது இதெல்லாம் முன்பு சாத்தியமில்லை. எமோஜிக்கள் அதை சாத்தியப்படுத்தி இருக்கின்றன.
ஓர் மனிதன் பிற மொழி பேசும் மக்களிடத்தில் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வழி படங்கள் மட்டும் தான். நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. பேஸ்புக், வாட்ஸ்ஆப் தொடங்கி இன்று செயல்பாட்டில் இருக்கும் எண்ணற்ற சமூக வலைத் தளங்களில் இமோஜிக்கள் இல்லாமல் பேச்சுவார்த்தையே கிடையாது. அதனால் தான் செல்போனில் ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது. இது யூனிவெர்சல் லாங்குவேஜ். சந்தேகத்திற்கு இடமில்லாமல் இமோஜிக்கள் செல்போன்களின் புதுமொழி தான். உலகிலேயே மிகவும் பிரபலமான எமோஜி எது என்பதற்கான விடை இங்கே உள்ளது.
Emoji’ என ஒரு திரைப்படமே வந்துள்ளது. அப்படிப்பட்ட எமோஜியை கொண்டாட ‘உலக எமோஜி நாள்’ என ஒரு நாளே இருக்கிறது. அது ஜூலை 17-ம் தேதி. இப்போது கேள்வி இது தான்..