இன்றைய இன்டர்நெட் காலத்தில், நியூ இயர் ‘ரெசல்யூஷன்’ பற்றி இணையத்தில் பெரும்பாலோனோர் பதிவிடுவதை காண முடிகின்றது. அதில், இந்த வருடம் நான் ‘ஃபிட் ஆவேன்’, ‘அதிக பயணங்களை மேற்கொள்வேன்’, ‘புகை பழக்கத்தைக் கைவிடுவேன்’, ‘புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவேன்’ என்று ஒவ்வொருவரின் புத்தாண்டு உறுதிமொழிகள் ஏராளம். ஒரு சில மாதங்கள் கடந்ததும் அவை மறந்து போய் விடும். பெரும்பாலானோர், தாங்கள் எடுத்துக்கொண்ட ‘ரெசல்யூஷன்’ ஐ மறந்து சாதராண பழைய நிலைக்கே திரும்பி விடுவார்கள்.
ஏன் இந்த நியூ இயர் ‘ரெசல்யூஷன்’ பின்பற்றப்படுவதில்லை?
நியூ இயர் ‘ரெசல்யூஷன்’ தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 8 அன்று சுவீடனில் நடத்தப்பட ஓர் ஆய்வானது, இது பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை நம்முடன் பகிர்ந்துள்ளது. அதாவது, அப்ரோச் ஓரியன்டட் (approach-oriented) ரெசல்யூஷன், அவாய்டன்ஸ் ஓரியன்டட் ரெசல்யூஷனை (avoidance-oriented) விட அதிக அளவில் பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
உதாரணமாக, நான் ‘புகை பழக்கத்தைக் கைவிடுவேன்’ என்பது, அவாய்டன்ஸ் ஓரியன்டேட் ரெசல்யூஷன் (avoidance-oriented). புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவேன் என்பது ஓரியன்டட் ரெசல்யூஷனை (avoidance-oriented) ஆகும். குறிப்பாக, நாம் தீய பழக்கத்தைக் கைவிட முயற்சிப்பதைக் காட்டிலும், நல்ல பழக்கத்தினை பின்பற்ற நினைப்பது அதிக பலன் தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரெசல்யூஷன்’ (resolutions) மற்றும் இலக்கு (goal) இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த உளவியலாளர் பிரேர்னா கோஹ்லி கூறும்போது, உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுப்பது ‘ரெசல்யூஷன்’. இலக்கு (goal) என்பது குறிப்பிட்ட கால அட்டவணையில், நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் ஓர் விருப்பமான நிலையாகும். உதாரணமாக, உடற்பயிற்சி செய்து 24 கிலோ எடை குறைக்க முயற்சிக்கும் பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் 2 கிலோ குறைத்தால் ஓராண்டில் வேண்டிய இலக்கை அடையலாம்.
இது பற்றி, சோஃபி நொன்னென்மேக்கர் (Sophie Nonnenmacher) ஊட்டச்சத்துக்கான சர்வதேச பயிற்சியாளர், எவ்வாறு இலக்கு இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று காரணிகளை குறிப்பிடுகிறார்.
- இலக்கு திட்டவட்டமாக இருக்க வேண்டும்.
- ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
- நடைமுறையில் அடையக்கூடியதாக இருக்க வேண்டும்.
இது குறித்து கிராஸ்ஃபிட் விளையாட்டு தடகள பென் ஸ்மித் (athlete Ben Smith) கூறும்போது, உங்களுடைய இலக்குகளை குறிப்பிட்டு, அவற்றை உங்களுக்கு நினைவூட்டும் விதமாக உங்களுடைய அறையில் ஒட்டிவைத்துக் கொள்ளுங்கள். இவை உங்களுடைய இலக்கை அடைய ஊக்கப்படுத்தும். நீங்கள் உங்களுடைய இலக்குகளை பல்வேறு விதமாக பிரித்துக்கொண்டு அவற்றை மதிப்பீடு செய்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
உதாரணாமாக, நீங்கள் 3, 6, 9, 12, மாதங்களில் ஏதேனும் ஒரு நாளினை தேர்ந்தெடுத்து, அந்த நாளில் உங்களுடைய இலக்கை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவற்றை, நீங்கள் எவரேனும் ஒருவரிடம் பகிர்ந்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வருட இறுதியில் உங்களுடைய சாதனைகள் பற்றி நீங்கள் ‘பாசிட்டிவ்’ வாக உணர வேண்டுமா?
அப்படி என்றால், இன்றே உங்களது ‘நோட் புக்கை’ எடுத்து எந்த கால இடைவெளியில் உங்களது இலக்கை எப்படி அடைய வேண்டும் என்பதை குறித்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய மற்றும் சிறிய இலக்குகளாக இருந்தாலும் நீங்கள் அதை சாதிக்கும் பொழுது உண்டாகும் பெருமிதமும், வெற்றிக்களிப்பும் வேறு எதற்கும் ஈடாகாது.
உங்களுக்கு இந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!