ஒரு குறிப்பிட்ட பணி நமக்கு தெரிந்திருந்தாலும், அது முறையாக செய்து முடிக்க முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் கவனச்சிதறலே. பெரும்பாலும், உங்கள் கைப்பேசியால் தான் கவனச்சிதறல் (Distraction) ஏற்படுகிறது.
ஒரு வேலை செய்கையில் மொபைலை திரும்பி பார்க்கிறீர்கள். அப்போது சில நோட்டிஃபிகேஷன்கள் வரும். அதை பார்த்ததும், மொபையில் போனை எடுத்து என்ன என்று கூர்ந்து கவனிக்க துவங்குவீர்கள். அவ்வேளையில், நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி பாதியில் நிற்கிறது என்பதை மறந்திருப்பீர்கள்.

உங்களின் மனம், புதியது ஒன்றை முயற்சி செய்யவும், ஒன்றை சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டலாம். ஆனால், சில குறிப்பிட்ட விடயங்கள் உங்களுக்கு கவனச்சிதறல்களை ஏற்படுத்தும்.
நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியின் முடிவு அல்லது நீங்கள் ஓட்டப்போட்டியில் பங்கேற்கையில், உங்களின் கவனம் செலுத்தும் திறன், வெற்றி தோல்விக்கு இடைப்பட்ட வித்தியாசத்தை குறிக்கும்.

கவனச்சிதறல்களை தவிர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. அவ்வாறு கவனச்சிதறல்களை எளிதில் துரத்த முடிந்தால், அனைவரும் சிறந்த விளையாட்டு வீரரின் கூர்மையை கொண்டிருப்போம். கவனச்சிதறல்களை எளிதில் துரத்த 5 அற்புதமான டிப்ஸ்!
1உங்கள் மனதை மதிப்பிடுங்கள்

நீங்கள் பணியை தொடங்கும் முன் உங்கள் மனதை மதிப்பிடுவதன் மூலம் வேலையை எளிதாக்கலாம்.
முதலில் உங்களுக்கான பணி பெரிதானதாக தெரிந்தாலும், உங்கள் மனதையும் உங்கள் திறனையும் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருந்தால், அது அந்த வேலையை எளிதாக்கும்.
ஒருவேளை உங்களுக்கு தொடர்ந்து கவனச்சிதறல் ஏற்படுகிறது என்றால், நீங்கள் உங்கள் மனநலனிற்காக சில பயிற்சிகளை செய்ய வேண்டும். அதாவது, நல்ல பழக்கவழக்கங்களை பழகி கொள்ள வேண்டும்.
2கவனச்சிதறல்களை நீக்குதல்

கவனச்சிதறல்களுக்கு அடிப்படை காரணமாக அமைவது ஒலியாகவே இருக்கும். அந்த ஒலி, நம்மால் கட்டுப்படுத்தும் நிலையில் இருந்தால் அதை செய்யலாம்.
ஆனால், அது ஒருவேளை, உங்களுடன் பணிபுரிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் மூலம் எழுப்பப்படுகிறது என்றால், அதை தடுப்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும். அவ்வேளைகளில், நீங்கள் அவர்களிடம் இருந்து வேறு பகுதியில் உங்கள் பணியை தொடர முற்படுவது நல்லது.
அவ்வாறு நீங்கள் வேறு இடங்களை தெரிவு செய்து பணிகளை செய்ய துவங்கினாலும், உங்கள் மனம் வேறு கவலைகளுடனோ, மற்ற சிந்தனைகளுடனோ இல்லாமல் இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
3கவனத்தை கட்டுப்படுத்துங்கள்
ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வது அல்லது பலவற்றை சிந்திப்பது இரண்டும், உங்களுக்கான உற்பத்தி திறனை முற்றிலும் பாதிக்கும். நீங்கள் ஒரு வேலையை செய்கையில் உங்கள் கவனத்தை ஒன்றின் மீது முழுமையாக செலுத்துவதன் மூலம் அதற்கான பலனை முழுமையாக காண முடியும்.
4நிகழ் காலத்தை சிந்தித்தல்
நீங்கள் கடந்த காலத்தை சிந்திப்பதும், எதிர்காலத்தை பற்றி வருந்துவதும், உங்களை மனதளவில் மிகவும் பாதிக்கும். இவை இரண்டும் நிகழ்கால சூழலுக்கும் தேவையற்றதாகவே உள்ளது. ஏனெனில், எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். அது இப்படிதான் இருக்கும் என்று கற்பனை செய்து வருந்துவதில் பயனில்லை.
அதேபோல் கடந்த காலம் இறந்து போய்விட்டது அதை பற்றிய சிந்தனை தேவையற்றதே. அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைத்து வருந்தி நிகழ்காலத்தில் உள்ள இனிப்புகளை சுவைக்காமல் விட்டுவிடுகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே நிகழ்காலத்தை பற்றிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் கவனச்சிதறல்களை தவிர்க்க உதவும்.
5மனநிறைவடைதல்

மனநிறைவு என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த மனநிறைவு தியானம், யோகா போன்றவையால் சாத்தியப்படுகிறது.
இது குறித்த ஆய்வு ஒன்றிலும், தினமும் அவசர அவசர வேலைகளை செய்பவர்களை தெரிவு செய்து, 8 வாரங்கள் தியானப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதில், பயிற்சிக்கு பின் பலர், வேலையில் கவனம் செலுத்தும் திறன் பெற்றிருந்தனர். எனவே தியானம் மனதை கட்டுப்படுத்தும் சிறந்த ஆயுதம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று பல நல்ல வழிமுறைகள் உங்களை நிச்சயம் கவனச்சிதறலில் இருந்து தப்பிக்க செய்யும்.
மேலும் பல உளவியல் (psychology) தொடர்பான கட்டுரைகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!