Homeஉளவியல்நீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்!

நீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்!

தன்னம்பிக்கை இழந்தால் வெற்றியை இழக்கிறீர்கள் என்று பொருள்!

NeoTamil on Google News

மனிதன் எத்தனை பிரச்சினைகள் கவலைகள் வந்தாலும் மீண்டு எழ காரணம் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை ஏற்படலாம். முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசி ஆராயுங்கள். அதன் பிறகு இந்த 8 டிப்ஸ்களை மறக்காமல் பின்பற்றுங்கள்!

1
வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுங்கள்

Credit: Pixabay

வெற்றிக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டீர்களா என சிந்தியுங்கள். நீங்கள் எதையாவது செய்யாமல் விட்டிருப்பீர்கள். அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து, பாதை வகுத்து வெற்றியை நோக்கி பயணத்தைத் துவங்குங்கள். ‘எந்த நிலையிலும் பின் வாங்கக் கூடாது‘ என்பதில் மிக உறுதியாக இருங்கள்.

2
நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்

Credit: Pixabay

பிரச்சினைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் கவலைகள் நம்முடைய இலக்கை மறைத்துவிடும். இந்த நேரத்தில் தான் மனதுக்குள் நம்முடைய இலக்கை நினைத்துப்பார்க்க வேண்டும். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள், உங்கள் இலக்கு என்ன என்பதை நினைத்தாலே அதை சாத்தியமாக்க வழி கிடைக்கும். வெற்றி பெறும் வரை துவண்டு விட மாட்டேன் என மனதுக்குள் கூறிக்கொள்ளுங்கள்.

3
ஊக்கப்படுத்தி கொள்ளுங்கள்

தலைவர்களின் பொன்மொழிகளை அடிக்கடி படியுங்கள். நமது நியோதமிழில் ஏராளமான பொன்மொழிகள் உள்ளன. உங்களை ஊக்கப்படுத்தும் சில பொன்மொழிகளை அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள். அடிக்கடி நீங்கள் பார்க்கும் இடத்தில உத்வேகம் தரும் கருத்துக்களை எழுதி ஒட்டிக்கொள்ளுங்கள்.

Also read: பாசிட்டிவ் எண்ணங்களை தரும் 7 பொன்மொழிகள்!

4
தாழ்வு மனப்பான்மை

social anxity
Credit: theconversation.com

ஒருவருக்கு தன்னம்பிக்கை குறைந்தால் அதற்கு முதல் எதிரி தாழ்வு மனப்பான்மையாகதான் இருக்கும். அப்படி இருந்தால் உங்களின் திறமை என்ன, உயர்ந்த விஷயங்கள் என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். தாழ்வு மனப்பான்மை தான் தயக்கத்துக்கு முதல் காரணம். தாழ்வு மனப்பான்மைக்கு நீங்கள் அடிக்கடி பார்ப்பது, கேட்பது, உங்களைச் சுற்றி இருப்பவர்கள் கூட காரணமாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை எதனால் வந்தது என்று அறிந்து அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.

Also Read: தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் தயக்கம் – தவிர்ப்பது எப்படி ?

5
உடலும், உள்ளமும் நலம் தானா?

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது. உடலும் உள்ளமும் மிகவும் ஆரோக்கியமாக இல்லையேல் இலக்கை அடைவது தாமதமாகலாம். அதனால், உடலளவிலும், மனதளவிலும் உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உடலும், உள்ளமும் நலமாக இருக்க நல்ல உணவு, நல்ல உறக்கம், மகிழ்ச்சி தேவை.

Also Read: மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு 10 வழிகள்..!

6
பயத்துக்கே பயம் காட்டுங்கள்

பயம் தான் நம்மை பின்னோக்கித் தள்ளும் பெரிய எதிரி. பயத்தை வீழ்த்த துணியுங்கள். பயம்வர எது காரணமோ அதை நேருக்கு நேர் சந்தித்து எதிர்கொள்ளுங்கள்.

அங்குலிமாலா என்பவன் பலரது கட்டை விரலை வெட்டி மாலையில் அதனை சேர்த்துக்கொள்வான். இப்படி 999 கட்டை விரல்கள் அவனது கழுத்தை அலங்கரித்தன. அடுத்து எதிர்ப்படும் யாரையும் வேட்டையாடாமல் விடக்கூடாது என்ற எண்ணத்தில் காட்டிற்குள் அங்குமிங்கும் அலைந்தான். அந்த காலத்தில் மக்கள் பலரும் அஞ்சிய அவனை காண புத்தர் சிறிதும் அச்சமின்றி அவன் வாழும் காட்டிற்கே சென்றார். பின்னர் நடந்தது வரலாறு!

Also Read: புத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை!

7
எதிர்மறை விஷயங்களை கட்டாயம் தவிருங்கள்

நீங்கள் என்ன தான் பாசிட்டிவாக இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் பாசிடிவிட்டியை குறைக்கும் விஷயங்கள் உங்களை சுற்றி இருக்கும். அப்படி, எதுவாக இருந்தாலும் அதைத் தவிருங்கள். எதிர்மறை செய்திகள், எதிர்மறை சிந்தனைகள், எதிர்மறையாக பேசும் நண்பர்கள் என அனைத்தையும் சில காலம் ஒதுக்கி வைத்து விட்டு பாருங்கள். உங்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் எந்த செயலையும் ஆரம்பத்திலேயே தவிர்த்தல் நல்லது.

8
பிறரை ஊக்கப்படுத்துங்கள்

close-up-of-human-hand-3

மற்றவர்களை ஊக்கப்படுத்தினால் நம் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? கூடவே மற்றவர்களுக்கு இருக்கும் பிரச்சினையை விட நம் பிரச்சினை சிறிது தானே என்ற ஆறுதலும் கிடைக்கும். இதனால், நிச்சயம் பாசிடிவ் எண்ணங்கள் தோன்றும்.

இந்த கதை நிச்சயம் உங்களை ஊக்கப்படுத்தும். பள்ளிப் பருவத்தில் ஒரு ஜோடி ஷூ வாங்க இயலாமல் கஷ்டப்பட்ட இளைஞன், 19 வயதில் 2000 கோடிக்கு அதிபதி!

மேலே குறிப்பிட்டுள்ள இந்த முக்கியமான டிப்ஸ்களை மறக்காமல் பின்பற்றினாலே தன்னம்பிக்கை அதிகரித்து நீங்கள் நினைத்த இலக்கை எட்டுவீர்கள். வாழ்க வளமுடன்!

நமது நியோதமிழில் இது போன்ற பயனுள்ள நல்ல தகவல்கள் உள்ளன. Get your daily dose of positivity by following NeoTamil’s facebook page and twitter.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

- Advertisment -

Must Read

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

0
வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. வான்கோழி பற்றி பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள்! இதோ... காட்டு வான்கோழிகளால் பறக்க முடியுமா? காட்டு...
error: Content is DMCA copyright protected!