நீங்கள் தேவையற்ற விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படுபவராக இருந்தால், அது உங்கள் வேலைகளை சரியாக செய்து முடிக்க விடாது. அது மட்டுமின்றி நீங்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டு, செயல்படுகையில் அது மற்றவர்கள் முன் நல்ல தோற்றத்தையும் தராது.
பலரும் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளை தாங்கிக் கொள்ள இயலாமல், உணர்ச்சி வசப்படுகின்றனர். அவர்களை சக பணியாளர்கள் ‘டென்சன் பார்ட்டி’ என்று குறிப்பிடுவதை பார்க்கலாம்.
வெற்றி பெறும் பல மனிதர்கள் உணர்ச்சி வசப்படும் குணம் இல்லாமல் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அப்படி என்றால், நீங்கள் உணர்ச்சி வசப்படும் நேரத்தில் எப்படி அதை கையாள வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

கட்டுப்படுத்த முடியாத அளவு உணர்ச்சிவசப்படுதல்
உங்கள் உணர்ச்சிகளை அடக்குவது அதை முடிவுக்கு கொண்டுவராது. ஏனெனில், அவ்வாறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்துபவர் காலப்போக்கில் மதுவுக்கு அடிமையாகும் சூழலும் ஏற்படலாம். ஆனால், நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்பதை நீங்களே உணர வேண்டும்.
Also Read: மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? தினமும் வெறும் பத்து நிமிடம் ஒதுக்குங்கள்
சரி! வாருங்கள்… எமோஷனல் ஏகாம்பரமாக மாறாமல் இருப்பது எப்படி என இப்போது பார்க்கலாம்.
காரணங்களை பட்டியலிடுங்கள்
நீங்கள் எதனால் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்பதை பட்டியலிட வேண்டும். அதில், நீங்கள் பதற்றமாக இருக்கிறீகளா? ஏமாற்ற மடைந்துள்ளீர்களா? அல்லது சோகமாக இருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக அதிக கோபம் பாதிப்பை ஏற்படுத்தும். உணர்ச்சிகளை தற்காலிகமாக மறைக்கும். அதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள், உணர்ச்சி வசப்படுகையில், எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை பட்டியலில் சேருங்கள். அது, கவலையாக இருக்கலாம், விரக்தியாக இருக்கலாம், பொறுமை இழப்பாக இருக்கலாம்.
இந்த பட்டியலை நன்கு நீங்கள் அறிந்து வைத்திருந்தால், உங்களுக்கு இதிலிருந்து மெல்ல விடுபடும் வழிமுறை தெரியவரும்.

எண்ணங்களை மாற்றி அமைத்தல்
எண்ணங்களை மாற்றி அமைப்பது எளிதானது அல்ல. அது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், இதை முயற்சித்து பாருங்கள். உங்கள் மேனேஜர் உங்களை பார்க்க அழைத்தால், “எந்த வேலையில் தவறிழைத்தோம்?” என்று சிந்திக்காமல், “எதோ புது வேலை தரப்போகிறார்” என்று சிந்தியுங்கள்.
இதை நீங்கள் எதார்த்தமான எண்ணங்களுடன் வடிவமைக்கலாம். அதாவது, கடந்த கால நிகழ்வுகளுடன் உங்கள் எண்ணங்களை எப்போதும் ஒப்பிடாமல் நிகழ்கால சிந்தனையை கொண்டு வாருங்கள்.
ஒருவேளை ஒரு இடத்தில் நீங்கள் தனித்து விடப்படுகிறீர்கள், அங்கு இருக்கும் மற்ற நபர்கள் உங்களிடம் பேசவில்லை. இப்படி இருந்தால், நீங்கள், அது உங்கள் தவறு என்று சிந்திக்க வேண்டாம். அதை தவிர்த்து, இதை நாம் இப்படி பயன்படுத்தலாம் என்று எண்ணுங்கள்.
அதேபோல் ஏதேனும் சிக்கலில் இருக்கும் நபரிடம் நீங்கள் சென்று நல்ல எண்ணங்களை பகிரலாம். இது உங்களை சரியாக அடையாளப்படுத்தும். எதிர்மறை எண்ணங்கள் உருவாகும்போது, உங்கள் உடலை வேகமான பணியில் ஈடுபடுத்துங்கள். அப்போது நீங்கள் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடலாம்.
Also Read: நீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்!
மனநிலை மாற்றத்தைத் தூண்டுங்கள்
நீங்கள் மோசமான மனநிலையில், இருக்கையில் நடக்கும் சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால் உணர்ச்சி வசப்பட துவங்குவீர்கள். அதுமட்டுமின்றி உங்களை நீங்கள் தனித்துவிட்டால், மற்றவர்களிடம் அழைப்பேசியில் அழைத்து அதை பற்றி புலம்பத் துவங்குவீர்கள். இந்த செயல்களை தவிர்த்து. ஏதேனும் ஒரு புத்தகம், அல்லது உங்கள் அழைப்பேசியில் நல்ல பக்கங்களை தெரிவு செய்து படிக்கலாம். அத்துடன், மகிழ்ச்சியாக இருக்கையில் நடந்த நிகழ்வுகளை சிந்தித்துப் பார்க்கலாம்.

மனநிலையை மாற்றத் தூண்டும் வழிமுறைகள்
நண்பனை அழைத்து நல்ல விஷயங்கள் பற்றி பேசலாம்
நடைபயணம் செல்லுங்கள்
தியானம் செய்யுங்கள்
நல்ல இசையை தெரிவு செய்து கேளுங்கள்.
Also Read: நீங்களும் வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா? சரியான 10 வழிமுறைகள் இதோ.. பின்பற்றுங்கள் வெற்றி நிச்சயம்!
உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கும் பயிற்சி
உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிப்பது சில நேரங்களில் கடினமாக தோன்றலாம். ஆனால், உணர்ச்சியை கட்டுப்படுத்த பயிற்சி செய்தால் நீங்கள் இன்னும் வலுவாக இருப்பீர்கள். எனவே மெதுவாக அதை பயிற்சி செய்ய துவங்குங்கள். நிச்சயம் விரைவில் பலனளிக்கும்.