ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ம் தேதி, உலக புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விரைவில் செல்வந்தர்களாக ஆகும் உத்திகளை வாசகர்களாகிய உங்களுக்கு கற்றுத்தர, ஆங்கிலத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 10 புத்தகங்களின் தமிழ் பதிப்பை எழுத்தாணி உங்களுக்கு பரிந்துரைக்கிறது.
வாசகர்கள் விரைவாக புத்தகங்களை வாங்கிட ஏதுவாக, புத்தகத்தின் தலைப்பிலேயே ‘அமேசான்’ தளத்தின் புத்தக விவர பக்கத்துக்கு இணைப்பு தரப்பட்டுள்ளது.
1. சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தை குவியுங்கள்
நெப்போலியன் ஹில் அவர்கள் எழுதிய இப்புத்தகம் பலராலும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் நாகலட்சுமி சண்முகம் அவர்கள் இதை மொழி பெயர்த்துள்ளார்.
- Manjul Publishing House
- Napoleon Hill (Author)
- Tamil (Publication Language)
- 320 Pages - 01/01/2013 (Publication Date) - Manjul Publishing House (Publisher)
இதன் ஆங்கில புத்தகம் இணைப்பு இங்கே.
2.பணக்கார தந்தை, ஏழை தந்தை
ராபர்ட் டி. கியோசகி (Robert T Kiyosaki) அவர்கள் எழுதிய இப்புத்தகம் பொருளாதாரம், முதலீடு, உலக வர்த்தகம் ஆகியவற்றை சுற்றி எழுதப்பட்டது. முதலீட்டின் முக்கியத்துவம் பற்றியும், பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் பெரும் பணம் ஈட்டும் ரகசியங்களையும் விவரித்த இந்த புத்தகத்தை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இதன் ஆங்கில புத்தகம் இணைப்பு இங்கே.
3.பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம்
டேவிட் ஷுவார்ட்ஸ் (David J Schwartz) எழுதியது. அதிகப்பணம் சம்பாதிக்கவும், தலைமைப்பண்பை பெருகேற்றவும் இப்புத்தகம் வழிகாட்டும். இதையும் நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இதன் ஆங்கில புத்தகம் இணைப்பு இங்கே.
4.ஆழ்மனத்தின் அற்புத சக்தி
- Manjul Publishing House
- Dr. Joseph Murphy (Author)
- Tamil (Publication Language)
- 336 Pages - 08/01/2011 (Publication Date) - Manjul Publishing House (Publisher)
ஜோசப் மர்பி எழுதிய இப்புத்தகம் நம் எண்ண ஓட்டம் ஆழ்மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அதனால் நாம் நேர்மறை எண்ணத்தை ஆழ்மனதில் எவ்வாறு பதிப்பது என்பது பற்றியும் விவரிக்கிறது.இதன் ஆங்கில புத்தகம் இணைப்பு இங்கே.
5.இரகசியம்
இந்தப் புத்தகத்தை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ரோண்டா பைர்ன் எழுதிய இப்புத்தகம் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. படித்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையையே மாற்றக் கூடியது இப்புத்தகம்.
இதன் ஆங்கில புத்தகம் இணைப்பு இங்கே.
6.நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி
இந்த புத்தகத்தை எழுதிய வின்சென்ட் நார்மன் பீல் அவர்கள் நேர்மறை சிந்தனைக்காகவே புகழ் பெற்றார். ஆங்கிலத்தில் The Power of Positive thinking என்ற பெயரில் 1952-ல் வெளியான இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் பெருமளவில் விற்பனையாகிறது.
- Manjul Publishing House
- Norman Vincent Peale (Author)
- Tamil (Publication Language)
- 328 Pages - 11/01/2011 (Publication Date) - Manjul Publishing House (Publisher)
ஆங்கில புத்தக இணைப்பு இங்கே.
7.இலக்குகள்
இதை எழுதிய பிரையன் ட்ரேசி, இதுவரை 70 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ட்ரேசி வேறு பல புத்தகங்களுக்கு பெயர் பெற்றவர் எனினும், Goals என்ற பெயரில் வெளியான இந்த புத்தகம், இலக்குகளை அதி விரைவில் அடைவது எப்படி என்பதை சிறப்பாக விளக்குகிறது.
இதன் ஆங்கில புத்தகம் இணைப்பு இங்கே.
8. உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
ஜான் சி மேக்ஸ்வெல் எழுதிய இப்புத்தகம் உங்களுக்குள் இருக்கும் தலைமைப்பண்பை வளர்த்தெடுத்து வெளிக்கொண்டு வர உதவும்.
- Amazon Kindle Edition
- John C Maxwell (Author)
- Tamil (Publication Language)
- 288 Pages - 10/23/2017 (Publication Date) - Manjul Publishing House (Publisher)
இதன் ஆங்கில புத்தகம் இணைப்பு இங்கே.
9. சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்
பிரையன் ட்ரேசியின் இன்னொரு புத்தகம்.
10. நண்பர்களை எளிதாகப் பெறுவதும், மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து பெரும் பணம் ஈட்ட நல்ல நண்பர்களும், செல்வாக்கும் தேவை. டேல் கார்னகியின் இந்த புத்தகம் ஒரு பொக்கிஷம். மார்க்கெட்டிங், விற்பனை துறையில் உள்ளோருக்கு அவசியம்.
இதன் ஆங்கில புத்தகம் இணைப்பு இங்கே.
இந்த புத்தக தினம் தொடங்கி கைபேசி பயன்பாட்டை குறைத்து, புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்வோம்.
வாசிப்பை நேசிப்போம்.