கொரோனாவினால் கடந்த 2020 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு கடினமான ஆண்டாக அமைந்தது. கோவிட் -19 தடுப்பூசிகள் மூலம் இந்த 2021 ஆம் ஆண்டானது, மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உறுதியளித்துள்ளது. கடந்த ஆண்டு தனிமை, சோகம், வேலையிழப்பு, மனச்சோர்வு, மற்றும் மனதளவிலான பிரச்சனைகளை நம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. இதன் தாக்கம், தவிர்க்க முடியாத நெகடிவ் சிந்தனைகளை பெரும்பாலோனோருக்கு உருவாக்கியுள்ளதை நம்மால் கண் கூடாக பார்க்க இயலுகின்றது.
இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களை கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகிவிட்டது. எனவே, நாம் இந்த 2021 ஆம் ஆண்டினை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, தேவையற்ற நெகட்டிவ் செயல்களை கைவிடுவது அவசியமாகிறது. ஆரம்பகட்டத்தில் இருந்தே, நாம் அதற்காக நம்மை நாமே கட்டாயப்படுத்தி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் செலவிட வேண்டும். அதற்கான 6 சிறந்த வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நாம் சில சமயங்களில் அதிகப்படியான மன உளைச்சலை உணரும்பட்சத்தில், அதற்கான மருத்துவ ஆலோசகரை நாடுவது அவசியமாகும்.

1. சமூக அக்கறையோடு செயல்படுங்கள்:
சமூக விஷயங்களுக்கு உதவுவது நமது மூளையின் ரிவாட் (Reward) சிஸ்டத்தை தூண்டுவதாக ஆராய்ச்சிக்குறிப்புகள் குறிப்பிடுகின்றன. சமூக விஷயங்களுக்குக்காக உதவுவது, ஆரோக்கியம், வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் வாழ்நாளை அதிகரிக்கின்றது.
இளைஞர்கள் பெரும்பான்மையாக தங்களின் வாழ்நாளில் அதிகபட்ச சந்தோசத்தை இந்த சமூக விஷயங்களுக்கு செலவிடும் போது அடைவதாகவும், தங்களின் மன அழுத்தம் மற்றும் கவலையிலிருந்து மீள்வதாகவும் தெரிவிக்கின்றனர். சுருக்கமாக சொல்வதென்றல், மற்றவர்களை மகிழ்விப்பதின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியடையலாம்!
2. உடற்பயிற்சி:

உடற்பயிற்சி நமது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இது, இருதய நோய்களை குறைத்து இருதயத்தின் ஆயுளை அதிகரித்து மன அழுத்தத்தினை குறைக்க உதவும். குழந்தைப் பருவத்தில் அல்லது பள்ளி நாட்களில் இந்த உடற்பயிற்சியானது நமது மூளையின் திறனை அதிகரித்து நன்றாக படிக்க உதவும். மேலும், இது மூளையின் செயல்திறனை அதிகரித்து டிமன்சியா (dementia) போன்ற மூளை சம்மந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது.மேலும், பல தரப்பட்ட ஆய்வுகளும் மூளையின் செயல்திறனை, இந்த உடற்பயிற்சிகள் அதிகரிப்பதாக கூறுகின்றன.
உடற்பயிற்சி அதிகமாக மேற்கொள்பவர்கள் அதிக நாட்கள் வாழ்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்களது மூளையை ரீபூட் செய்வதற்கு நீங்கள் காலை எழுந்தவுடன் வேகமான நடை, நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது சிறந்தது. உங்களுக்கு விருப்பமான ஓர் உடற்பயிற்சியினை தேர்வு செய்து இன்றே அதை செயல்படுத்தத் துவங்குங்கள்.

ஊட்டச்சத்துள்ள உணவுகள் நமது மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமாகும். ஊட்டச்சத்து குறைவாக உள்ள உணவுப்பொருட்களை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்வதால் மூளை செல்கள் பாதிக்கப்படுவதாகவும், ஊட்டசத்து அதிகளவுள்ள உணவு பழக்கவழக்கங்கள் மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதாவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதிகமாக இனிப்பு, சாச்சுரேட்டட் பேட்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்ளும் போது, அவற்றின் கலோரிகள் மூளையின் நியூரான்களை பாதிக்கின்றன. மாறாக பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்ற உணவுப்பொருட்கள் உட்கொள்வது மூளையின் செயல்திறனை அதிகரிக்கின்றன.
4. சமூகத்துடன் இணைந்திருங்கள்:
சமுதாய தனிப்படுத்துதல் உடல், மூளை மற்றும் மனவளர்ச்சி ஆகியவற்றை பெரும்பான்மையாக பாதிப்பதாக பல தரப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில் தனிமைபடுத்துதல் உலக அளவில் எல்லா தரப்பட்ட மக்களையும், அதிக அளவில் பாதித்துள்ளது. மேலும், இந்த கொரோனா கால கட்டம் மனிதர்களின் உளவியல் உணர்ச்சிகளை பெரும்பான்மையாக பாதிக்கிறது.
இவை அவர்களின் வாழ்நாட்களை குறைப்பதுடன் அதிக அளவு நோய்தொற்றுக்கும் வழிவகை செய்கிறது. ஆகையால், முடிந்தவரை இந்த 2021 ஆண்டில் உங்களது குடும்பம் மற்றும் உறவுகளுடன் சேர்ந்து புது நண்பர்களின் உறவுகளையும் ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
5. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம்:

நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மூளையை புத்துணர்ச்சி அடைய செய்து நமது உடல் நலனை பாதுகாக்கிறது.
6. போதுமான அளவு தூக்கத்தினை ஏற்படுத்தி கொள்ளுங்கள்:

நமது தூக்கத்தின் போது மூளையானது மறுசீரமைப்பு, மீள்நிரப்பு செய்வதால் தேவைற்ற கழிவு பொருட்களை மூளையின் செயல்திறன் மூலம், வெளியேற்றுகின்றது. அதுமட்டுமின்றி, நம்முடைய நீண்ட கால நினைவாற்றலுக்கு தூக்கம் இன்றியமையாததாகின்றது.
நல்ல தூக்கத்தின் மூலம் நமது உடல் சோர்வு, மன சோர்வு அனைத்தும் களையப்படுகின்றன. பொதுவாக தூக்க குறைபாடு, நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருமளவு பாதிக்கிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் தினமும் 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமாகிறது.
மேற்கூறிய உடல் மற்றும் மூளைக்கு தேவையான விஷயங்களை பின்பற்றி இந்த ஆண்டு அதிக ஆரோக்கியத்துடனும், மன நிறைவுடன் வாழ வாழ்த்துக்கள்!
வெளியில் செல்ல நேர்ந்தால் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.