‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் இந்த 2021 புத்தாண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நமக்கு பதைபதைப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த ஆண்டு பல்வேறு நல்ல விஷயங்களை எதிர்பார்க்க காரணங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை கீழே காணலாம்.

1. கொரோனா தடுப்பூசி:
ஜனவரி முதலே இந்தியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் பட்சத்தில், நாம் மீண்டும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. பயணத்தின் முக்கியத்துவம் பற்றி கடந்த ஆண்டின் நிகழ்வுகள் நமக்கு உணர்த்தியுள்ளதால், வரும் ஆண்டுகளில் மக்கள் சுகாதார செயல்பாடுகளில் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
2. ஜெட் ஏர்வேஸ் (jet airways) விமான நிறுவனம் மீண்டும் செயல்படத் துவங்கும்:
2021 இன் சூழ்நிலையானது நாம் கணிக்கப்பட்டபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலையில், ஜெட் ஏர்வேஸ் (jet airways) நிறுவனம் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஏர் லைன் என்ற அங்கீகாரத்தை இந்த ஆண்டின் கோடைகாலத்தில் மீண்டும் பெறும். இதற்காக, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கல்ராக் கேபிடல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் முராரி லால் ஜலான் ஆகியோர் சுமார் ரூ. 850 கோடி முதலீடு செய்யவுள்ளனர்.
3. உலக போட்டிகள் மீண்டும் நடைபெற துவங்கும்:
கடந்த ஆண்டில், கரோனா அச்சம் காரணமாக சுமார் 10-திற்கும் அதிகமான விளையாட்டு போட்டிகள் உகெங்கிலும் நிறுத்தப்பட்டன. குறிப்பாக, டோக்கியோவில், நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ரத்து செய்யப்பட்டு உலக அளவில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த ஆண்டு பல உலகளாவிய போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மீண்டும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்: ICC ஆண்கள் டி 20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை (Asia Cup).
கால்பந்து: UEFA யூரோ கோப்பை (Euro Cup), 2021 FIFA கிளப் உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா 2021
கூடைப்பந்து: FIBA ஐரோப்பா கோப்பை (Europe Cup), FIBA ஆசியா கோப்பை (Asia Cup)
கோல்ஃப் (Golf): முதுநிலை போட்டி, PGA சாம்பியன்ஷிப்
மோட்டார்ஸ்போர்ட்ஸ்: 2021 F1 உலக சாம்பியன்ஷிப் (World Championships), F1 சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் (Saudi Arabian Grand Prix) போன்றவை முக்கியமானவை.
4. இந்த ஆண்டு செயற்கை இறைச்சி விற்பனைக்கு வரும்:
ஆய்வகத்தில் வைத்து உருவாக்கப்பட்ட செயற்கை கோழி இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சிங்கப்பூரில் அமைந்துள்ள ஷியோக் மீட்ஸ் (Shiok Meats) என்ற நிறுவனம், இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம், ஆய்வகத்தில் வளர்ந்த இறைச்சியை உணவகங்களில் விற்பனை செய்யும் உலகின் முதல் நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பவுண்டுக்கான விலை, இந்திய மதிப்பில் சுமார் 1,66,000 ($2,268) முதல் வெறும் 1,15,000 ($1,588) ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, செயற்கை இறைச்சி இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. கார்பன் எமிஸன்ஸ் (Carbon emissions)
தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், சாலைகளில் குறைந்த அளவு வாகனங்கள் காணப்பட்டதாலும், விமானங்கள் குறைந்த அளவு விடப்பட்டதாலும், கார்பன் எமிஸன்ஸ் குறைந்த அளவு குறைக்கப்பட்டு உலகெங்கிலும் ”பாசிட்டிவ்” நிறைந்த சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
6. தொல்லியல் மற்றும் மியூசியம்:
கைரோவில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் எகிப்திய (Grand Egyptian) மியூசியம் இந்த ஆண்டு திறக்கப்பட உள்ளது. இதில், எகிப்தின் பழங்கால பொருட்கள் இடம்பெற உள்ளன.
இது கடந்த வருடம் திறக்கப்பட இருந்த நிலையில், கரோனா அச்சம் காரணமாக திறக்க முடியாமல் போனதால் இந்த ஆண்டு திறக்கப்பட உள்ளது. கிசாவின் பிரமிடுகள் (Pyramids of Giza) அருகில், அமைந்திருக்கும் இந்த மியூசியமானது ஒரு லட்சம் புராதன பொருட்களை கொண்டிருக்கும்.
7. விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சாதனைகள்:
விண்வெளியில் பல மாறுதல்கள் நிகழும் ஆண்டாக, இந்த ஆண்டு நிச்சயம் இருக்கும். ஏனெனில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனா ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி (James Webb Telescope) மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிகப்பெரிய அளவில் இருக்கும் இந்த தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவின் சந்திரயான் -3 விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மே மாதத்தில் நாசா ஸ்பேஸ் எக்ஸ் (NASA SpaceX Crew-1) க்ரூ -1 விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்ப உள்ளனர். அதேபோன்று, நான்கு விண்வெளி வீரர்களுடன் நாசா ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ -2 (NASA SpaceX Crew-1) மிஷன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்கின்றது.
கடந்த ஆண்டு அனைவருக்கும் பாதிப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த ஆண்டினை நாம் அனைவரும் ‘பாசிட்டிவ்’ நோக்கத்துடன் எதிர்நோக்குவது மிகவும் அவசியமாகிறது.