தொழிலில் வெற்றியடைந்த ‘பிஸ்னஸ்மேன்கள்’ அனைவரும், ஒரே மாதிரியான மனநிலையை கொண்டு தனது தொழிலை துவங்கியுள்ளனர் என்பது குறித்து பொதுவான 7 பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மாறா நிலை உடையவர்களாக இருப்பார்கள்:
தொழிலில் வெற்றியடைந்த பிஸ்னஸ்மேன்கள் எப்போதும் மாறாநிலை உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களிடமிருந்து, எப்போதும் தங்களை வேறுபடுத்தி காட்டுவார்கள். பொதுவான விஷயங்களை கூட வித்தியாசமாகப் பார்ப்பவர்கள். அதீத தைரியம், அதீத நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.
” சிலர் இவர்களை பைத்தியக்காரர்களாக பார்க்கும்போது, நாம் மேதைகளைப் பார்க்கிறோம். ஏனென்றால், உலகை மாற்ற முடியும் என்று நினைக்கும் அளவுக்கு பைத்தியம் பிடித்தவர்கள் தான் சாதனை செய்கிறார்கள். ” – ஆப்பிள், இன்க்.
1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் , “நெக்ஸ்ட்’ எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1997 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்குத் திரும்பியபோது, ‘வித்தியாசமாக சிந்தியுங்கள்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் தொடங்கினார். இவர், இன்றும் பெரும்பாலான தொழில்முனைவோர், உத்வேகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
சிந்தனையாளர்கள்:
பிரபல எழுத்தாளர் மைக்கேல் ஹையாட் கூறும்போது, “பல ஆண்டுகளாக, இரண்டு வகையான சிந்தனைகள் இருப்பதை நான் கவனித்தேன். ஒரு வகை வெற்றி, மகிழ்ச்சி மற்றும் நிறைவேற்றத்திற்கு வழிவகுக்கிறது. மற்றொன்று தோல்வி, பயம் மற்றும் அதிருப்திக்கு வழிவகுக்கிறது.” என்றார்.
மேலும் அவர், தொழிலில் வெற்றி பெற நினைப்பவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும் என்று கருதினார்.
சிந்தனையாளர்களின் பொதுவான பண்புகள் பின்வருமாறு:
- யோசனைகள், அறிவு, தொடர்புகள் போன்றவற்றைப் பகிர்தல்.
- நம்பிக்கையின் மூலம் எளிதில் உறவுகளை உருவாக்குதல்.
- போட்டியைத் தழுவுதல். அதிக நம்பிக்கையுடன், பாராட்டுதலுடனும் இருத்தல்.

வெற்றிக்கு, தோல்வியே முதல் படி:
இது குறித்து ப்ரீட்ரிக் நீட்சே கூறும்போது, “ஒரு நாளில் பறக்கக் கற்றுக்கொள்பவர் முதலில் நிற்கவும், நடக்கவும், ஓடவும், ஏறவும், நடனமாடவும் கற்றுக்கொள்ள வேண்டும்; உடனே ஒருவரால் பறக்க முடியாது.” என்றார்.
நீங்கள் வெற்றி அடைவதற்கு நீண்ட காலம் ஆகலாம். வெற்றிகள் பெரும்பாலும் பல தோல்விகளுக்கு பிறகே கிடைக்கும். நாம் வெற்றி மற்றும் தோல்வி இரண்டுக்குமே நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
போட்டி, சந்தையில் தேவைகள் குறைவது, லாபம் மற்றும் வருமானம் குறைவது, முதலீட்டாளர்கள் கொடுக்கும் அழுத்தம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் (stress) ஏற்படலாம். அது எல்லாவற்றையும் எதிர்கொள்ள உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் விடாமல் முயற்சி செய்தவர்களே வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
சிக்கனமாக இருப்பது புதுமைக்கு உதவக்கூடும்:
ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திட மிகவும் அவசியமான இரண்டு விசயங்கள் “சோதனை” செய்து பார்ப்பது, மீண்டும் மீண்டும் “முயற்சிப்பது”. புதிதாக ஒரு தொழிலை உருவாக்க நினைக்கும் தொழில்முனைவோருக்கும் இந்த இரண்டு விசயங்களும் அவசியமானவை தான். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் சிக்கனமாக இருப்பது புதுமைக்கு உதவக்கூடும் என்று நம்பினார்.
உதாரணமாக, வாரன் பபெட், என்பவர் விரும்பும் எதையும் வாங்க பணம் இருந்தபோதிலும், ஒரு சாதாரண வாழ்க்கை முறையை வாழ்ந்துள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், 7 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையவராக இருந்தாலும் எளிமையாக இருந்துள்ளார்.
சிக்கல் தீர்க்கும் நபர்கள்:
“எனக்குத் தெரிந்த மகிழ்ச்சியான மற்றும் மிகவும் வெற்றிகரமான மக்கள் அவர்கள் செய்வதை மட்டும் விரும்புவதில்லை. அவர்கள் ஒரு முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிக ஈடுபாடுடன் இருப்பார்கள்.” – ட்ரூ ஹூஸ்டன்
மற்றவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு, முடிவுகளை நீங்களே எடுங்கள்:
“எனக்குத் தெரிந்த வெற்றிகரமானவர்களில் பெரும்பாலோர் பேசுவதை விட அதிகம் கேட்பவர்கள்.” – என்று பெர்னார்ட் பருச் கூறியுள்ளார்.
மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு சொந்த முடிவுகளை நீங்களே எடுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நீங்கள் கொண்டிருக்கும் தகவல்களையும் (information), விவரங்களையும் (details) பொறுத்தே அமையும். எப்போதும் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள். இருப்பினும், நீங்கள் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
ஒரு விளையாட்டு வீரரைப் போல சிந்தியுங்கள்:
“என் வாழ்க்கையில் 9000 முறை கோல் போடும் சந்தர்ப்பத்தை வீணடித்திருக்கிறேன். இதுவரை 300 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறேன். நான் என்னுடைய அணியை வெற்றி பெற வைப்பதற்கு, கோல் போட்டு விடுவேன் என்று மைதானத்தில் உள்ளவர்கள் நம்பிய வேளையில், 26 முறை அந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறேன். நான் என் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தேன். அதனால்தான் நான் வெற்றி பெறுகிறேன்.” – என்று மைக்கேல் ஜோர்டன் கூறியுள்ளார்.
Also Read: நீங்கள் தொழில் துவங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்!