தனிமை ஒரு கொடூரமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சமூகத்திலிருந்து தனித்திருக்கும் பலரும் உடல் பருமன், இரத்த அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு விரைவில் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதற்கான மாற்று வழிகள் குறித்த ஆய்வில், தனிமை ஒரு மனிதனை மெருகூட்டுவதாக குறிப்பிடுகிறது. அதாவது, அந்த குறிப்பிட்ட மனிதன், தான் என்ன செய்ய வேண்டும், தனக்கு உண்மையில் என்ன தேவைப்படுகிறது என்பதை தனிமை மூலம் அதிகம் உணர்ந்து கொள்ள முடியும். அது அவனை புதிய படைப்புகள் உருவாக்கவும் தூண்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
நன்றாக சிரித்து பேசும் தன்மைக்கொண்டவர்கள் தனிமையாக இருக்க விரும்புவதில்லை. கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்கள், தனித்திருக்கவே விரும்புகின்றனர். இவர்களை நாம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்திருப்போம். தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் கல்வியில் சிறந்து விளங்குபவராக இருப்பதை பார்க்க முடியும்.
உண்மையில், கூச்ச சுபாவம் கொண்டவர்கள் தனித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள், தங்களுக்கு ஏற்ற குழு ஒன்றை அமைத்துக் கொள்ளலாம்.
தனிமையை வெல்வது எப்படி?
தனிமையை வெல்வதற்கு இவற்றை செய்து பாருங்கள்.
தனித்திருக்கையில், இரவு உணவிற்கு வெளியில் செல்லுங்கள். இதன் மூலம் சுற்றி இருப்பவர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

2. தனிமையாக திரைப்படங்கள் பார்க்க செல்லுங்கள்
திரைப்படங்கள் பார்க்க ஒரு குழுவாக செல்கையில் முழுவதும் ரசிக்க முடியாது. ஆனால், தனித்திருக்கும் போது உங்களால் முழுவதும் படத்தை பார்க்கவும். அது பற்றிய உண்மையான புரிதலும் ஏற்படும்.
3. உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள்
தனிமையில் நீங்கள் மென்மையாக உணர அவசியமான ஒன்று இசை. அதில், உங்களுக்கு பிடித்த இசையை தெரிவு செய்து கேட்கும் போது மனம் தனிமையை நேசிக்கும். அதன் மூலம் மற்ற உணர்வுகளுடன் இணைப்பு ஏற்படுத்தி கொள்ளலாம். இசையில் அதிக ஈர்ப்பு உள்ளவரானால், உங்களுக்கு பிடித்த பாடகரின் பாடல் நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம்.

4. உயரமான இடங்களுக்கு செல்லுதல்
பொதுவாக இயற்கையுடன் நாம் இணைந்திருந்தால், இந்த தனிமை பிரச்சினையாக இருக்காது. காரணம் இயற்கையில், மரங்கள், பறவைகள், விலங்குகள் என்று அனைத்தும் அற்புதமான ஒன்றாகவே இருக்கிறது. அவை உங்களை உற்சாகப்படுத்தும்.
எனவே நீங்கள் உயரமான மலை பாதைகளை தேர்வு செய்து குட்டி நடைபோடலாம்.
5. பயணங்கள்
தனியாக பயணங்கள் மேற்கொள்ளுங்கள். அது உங்களை தன்னிறைவு அடைய செய்யும். பயணங்களின் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டியது அவசியம். ஒரு வேளை தனித்து பயணிப்பது உங்களுக்கு அச்சுறுத்தலாக தோன்றலாம். ஆனால், தனித்து பயணிக்கையில் தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
6. விளையாட்டுக்களை பார்ப்பது
விளையாட்டுப் போட்டிகளை பார்த்து ரசிப்பதன் மூலமும் தனிமையை வெல்ல முடியும். மனதில் வேறு எந்த நினைப்பும் இல்லாமல் விளையாட்டை ரசித்து பார்த்தால் தனிமை போயே போச்சு…
தனிமை எல்லோருக்கும் பொதுவான ஒரு உளவியல் மனநிலை தான். ஒவ்வொருவருக்கும் கால சூழல்கள் வெவ்வேறு விதத்தில் இருக்கும். அவரவர், மனத்திற்கு எட்டும் செயல்களை தங்களுடன் இணைத்து கொள்ளலாம். ஆனால், தொலைக்காட்சி, கைபேசி போன்ற சாதனங்களில் தங்கள் தனிமையை போக்கும் செயல்களில் அதிகம் ஈடுபடுவதை தவிர்க்கலாம். ஏனெனில், நாம் பார்க்கும் காட்சிகள் மன அழுத்ததை உண்டாக்கலாம்.
எனவே சரியான வழிமுறையை நீங்களே தெரிவு செய்து அதன்படி தனிமையை வெல்லலாம்.