நேர்மறை எண்ணத்துடன் இருப்பது கடினமானதாக தோன்றும். ஏனெனில் தோல்வி, ஏமாற்றம் இழப்பு போன்றவை தொடர்ச்சியாக நடந்தால், உங்கள் நேர்மறை வீணாகிக் கொண்டே இருக்கும். உங்கள் நேர்மறை அணுகல் மாறுபட்டால், மற்றவர்கள் உங்களை விட்டு எளிதில் விலகிச் செல்வர்.
எதிர்மறை உங்களுக்கு நடந்த நிகழ்வை சிந்தித்து வருந்திக் கொண்டே இருக்க செய்யும். ஆனால், நேர்மறை அந்த சிந்தனையில் இருந்து மாறுபட்டு, ஏற்பட்ட பிரச்சினையை சாதகமாக்கி கொள்ளும். நேர்மறையான எண்ணங்கள் நம்பிக்கை நிறைந்த இதயத்திலிருந்து வருகிறது.
1. இயற்கையை நேசியுங்கள்
இயற்கையை நேசிக்கவும், ரசிக்கவும் தெரிந்திருந்தால் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். இது அறிவியல் பூர்வமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2. கருணைக் காட்டுங்கள்
மற்றவர்கள் மீது கருணைக் காட்டுங்கள். அது மட்டுமின்றி அவர்கள் முகத்தில் புன்னகை தோன்ற நீங்கள் காரணமாக இருங்கள். இவை உங்களை நேர்மறையானவராக இருக்க கொண்டுச் செல்லும்.
3. நன்றியுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்
நன்றியுணர்வுடன் நடந்துக் கொள்வது வாழ்க்கையில் அடிப்படை நலன்களை மேம்படுத்தும். அது உங்களை நேர்மறையானவராக காண்பிப்பதை தாண்டி உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து விரைந்து உதவிகள் கிடைக்கும்.

4. சோர்வை கைவிடுங்கள்
சோர்வு நேர்மறைக்கு முக்கியமான எதிரி. நீங்கள் எதிர்கொள்ளும் எந்த சவாலில் இருந்து உங்கள் மனதிற்கு அவ்வப்போது இடைவெளி கொடுங்கள். தொடர்ந்து மற்ற வேலைகளை செய்யுங்கள்.
Also Read:நன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா?
5. சிரிக்கவும்
சிரிப்பு உண்மையிலேயே நமக்கான சிறந்த மருந்து. சிரிப்பு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
எப்போதும் சிரித்து கடக்க, நகைச்சுவைகளை பார்க்க வேண்டும். உங்களின் நண்பருடன் நேரத்தை செலவிடுவதும் சிறந்தது.

6. நேர்மறையான நபர்களுடன் பழகுங்கள்
மன அழுத்தம் தொற்று நோயாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை நீங்கள் எவ்வளவு அதிகமாகச் பற்றிக்கொள்கிறீர்களோ, அவ்வளவு தூரம் அது உங்கள் எண்ணங்களை பாதிக்கிறது. எனவே நேர்மறையான நபர்களுடன் பழகுங்கள்.

7. ஆழ்மனதை நேராக்குங்கள்
ஆழ்மனத்தில் உணர்ச்சிகரமான விஷயங்களை எதிர் கொள்ளும் அளவிற்கு நேராக்குங்கள். வருந்தத்திற்குரிய நிகழ்வுகள் நடந்தாலும், அதை பெரும் பாதிப்புகள் நடக்காத வண்ணம் முறையாக கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
8. மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்
மூச்சுப் பயிற்சி உங்களை புத்துணர்வுடைய நபராக உணரச் செய்யும். ஒரு பிரச்சினை குறித்து ஒருவரிடம் பேசும் முன் மூச்சு பயிற்சி செய்வதால், தெளிவான முறையில் பேசும் அளவிற்கு புத்துணர்வுடன் இருப்பீர்கள்.

9. நேர்மறை வார்த்தைகளை பேசுதல்
நேர்மறை வார்த்தைகளை தனக்கு தானே பேச வேண்டும். அவ்வாறு செய்கையில், உங்கள் ஆழ்மனம் அதை நம்பும். அதை நீங்கள் நன்று உரக்க உங்களிடம் நீங்களே கூறலாம்.
Also Read: பாசிட்டிவ் எண்ணங்களை தரும் 7 பொன்மொழிகள்!
10. நேர்மறையான நண்பருடன் பழகுங்கள்
உங்களை பற்றி அறிந்துக்கொண்ட நேர்மறையான நண்பருடன் பழகுங்கள். நேர்மறையான நண்பர்கள் சிக்கலில் இருந்து உங்களை காத்துக் கொள்ள உதவுவார்கள். மற்றும் நேர்மறையான எண்ணங்கள் உருவாக காரணமாகும்.
11. நடைப்பயிற்சி செய்யுங்கள்
நடைபயிற்சி மூளையில் உள்ள நரம்பு செல்களைத் தூண்டுவதன் மூலம் அமைதிப்படுத்துகிறது. இது உங்களை ஆரோக்கியத்திற்கும் வழிவகுப்பதால், நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
Also Read:உடற்பயிற்சியை ஏன் காலை உணவிற்கு முன்பே செய்ய வேண்டும்? காரணம் இது தான்!
12. உறக்கம்
சரியான உறக்கம் உங்களை நேர்மறையாக முன்நோக்கி செல்லத் தூண்டும். ஆய்வுகள் கூட இதை உறுதி செய்துள்ளன. அதில், ஐந்து மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர், மன அழுத்தம், கோபம், கலக்கம் போன்றவைக்கு ஆளாக நேரிடும்.

13. நல்லவையில் உங்களை ஈடுபடுத்துங்கள்
நீங்கள் உங்களை நல்லவையில் ஈடுபடுத்துங்கள். அர்த்தமுள்ள மற்றும் ஆரோக்கியமானவற்றில் ஈடுபடுத்தினால் நல்லெண்ணத்துடன் நடந்துக் கொள்ள முடியும்.
14. சிறிய வெற்றிகளையும் கொண்டாடுங்கள்
கொண்டாட்டத்தை எல்லோரும் நிச்சயம் விரும்புவர். எனவே சிறிய வெற்றிகளையும் மறக்காமல் கொண்டாட கற்றுக்கொள்ளுங்கள். அது அடுத்ததை செய்யத் தூண்டுவதுடன், நேர்மறையான வார்த்தைகளை வளர்க்கும்.
இவை அனைத்தும் உங்களை நேர்மறையான வாழ்க்கையில் கொண்டுச் செல்லும் அடிப்படை வழிமுறைகளாகும்.