மகிழ்ச்சி என்பது தானாக வராது. அதை நீங்கள் தான் வளர்க்க வேண்டும். உங்கள் நடத்தை மற்றும் அதன் விளைவுகள் மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் உணர்வுபூர்வமாக நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் பின்வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
1. உங்களால் மாற்றக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டுமே நீங்கள் கவலைப்படுங்கள். உங்களால் முடிந்த அளவு செய்ததை ஏற்றுக்கொண்டு பின்னர் அதை விட்டுவிடுங்கள். எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியாது!
2. நீங்கள் விரும்பாத விஷயங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது அவற்றை மறந்துவிடுங்கள். மனக்கசப்பு அல்லது எரிச்சல், இவற்றை உணரும் நபரை மட்டுமே பாதிக்கிறது. உருவாக்கும் நபரை ஒருபோதும் பாதிப்பதில்லை.
3. வெளியே செல்லுங்கள். மரங்கள், பூக்கள், பறவைகள், விலங்குகள் – இவை அனைத்தும் மனிதர்களை மகிழ்விக்கின்றன. உங்களால் முடியாவிட்டால், இயற்கையை உங்களிடம் கொண்டு வாருங்கள். அது ஒரு ஜன்னல் வழியாக கூட இருக்கலாம். ஒரு மருத்துவமனை படுக்கையிலிருக்கும் நோயாளி, மரங்கள் அல்லது இயற்கையின் காட்சிகளை பார்வையிடுவதன் மூலம் விரைவாக குணமடைகிறார்களாம்.
4. மக்கள் தொடர்பு – நாம் அனைவருக்கும் மனித தொடர்பு தேவை. உங்கள் காலணிகளை மட்டுமே நீங்கள் பார்த்து நடந்தால், யாராவது உங்களைப் பார்த்து சிரிக்கும்போது உங்களால் பார்க்க முடியாது. மற்ற மனிதர்களிடம் பேசுங்கள். நட்பாக இருங்கள். ஒரு நண்பர் குழுவில் சேருங்கள் அல்லது உருவாக்குங்கள், அவர்களோடு புன்னகை செய்யுங்கள்.
5. சிறிய விஷயங்கள் உண்மையில் பெரிய விஷயங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சிறிய நிகழ்வுகள் சேர்ந்துதான் நம் வாழ்க்கையை உருவாக்குகிறது. ஒரு உரையாடல், ஒரு கப் காபி, ரோஜாக்களின் நறுமணம், புல் மீது பனித்துளி, இதமான குளியல், ஒரு நல்ல புத்தகம், நட்பு என எதுவாக வேணாலும் இருக்கலாம்.

6. சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது நல்லது, நம் வாழ்க்கையில் நம்மை உட்பொதித்து, நமக்கு நல்ல நோக்கத்தை இது அளிக்கிறது. மனிதர்கள் எதையாவது சேர்த்திருக்க வேண்டும். அது உங்கள் குடும்பம், ஒரு நட்பு வட்டாரம், ஒரு தன்னார்வத் திட்டம், ஒரு புத்தகக் குழு, உங்கள் நண்பர்கள், உங்கள் அலுவலகம், உங்கள் சமூகம் என பெரிய விஷயத்தின் ஒரு பகுதியை உணர வேண்டும்.
7. நன்றியுணர்வு. இருப்பதை கொண்டு நன்றியுடன் இருங்கள். உங்களிடம் சில விஷயங்கள் உள்ளன என்பதை மனதில் கொள்ளவும். நம்மிடம் இருப்பதற்கு நன்றியும், அதை அங்கீகரிப்பதும் நமது மன ஆரோக்கியத்திற்கு நல்லது. இது மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு மாதத்திற்கு ஒரு நன்றியுணர்வு நாளை குறித்து வைத்திருப்பது நல்லது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் நன்றியுடன் இருக்க வேண்டிய மூன்று விஷயங்களை கவனித்து குறித்து வைக்க வேண்டும். மாதத்தின் அந்த ஒரு நாளில் இதனை நோக்கும்பொழுது, இது மனச்சோர்வை நீக்கி, மகிழ்ச்சியை உயர்த்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
8. சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்களுக்கான உங்கள் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள். அதிகமாக காட்டப்படும் அல்லது திணிக்கப்படும் விஷயங்களினால், பதட்டத்தின் அளவு உயர்வதற்கும் மகிழ்ச்சியைக் குறைப்பதற்கும் இது காரணமாக அமைகின்றது. நகைச்சுவை உணர்வுள்ள மற்றும் நல்ல படங்களைப் பாருங்கள். மகிழ்ச்சி தரும் புத்தகங்களைப் படியுங்கள். முக்கியமாக உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் இசையை கேட்கவும் மறக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடத்தில் நேரம் ஒதுக்கி பேசுங்கள்.

9. உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் காரில் தவறான எரிபொருளை செலுத்தினால் அது மோசமாக இயங்கும். மனிதர்களும் அதுபோலவே. நன்றாக உண்பது, போதுமான ஓய்வு, வழக்கமான மிதமான உடற்பயிற்சி போன்ற விஷயங்களைச் செய்யுங்கள். உங்களை சிரிக்க வைக்கும் நபர்களுடன் பேசிக்கொண்டிருங்கள். சிலர் உங்கள் ஆளுமைகளுக்கு ஏற்றவர்கள் அல்ல என தோன்றினால் தொடர்பை குறைத்துக்கொள்ளுங்கள்.
10. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அன்பானவராக நடந்து கொள்ளுங்கள். உங்களை விமர்சிக்கும் அல்லது உங்களை ஒரு முட்டாள் என்று அழைக்கும் விமர்சனக் குரலை கண்டுகொள்ளாமல் விடுங்கள். அதற்கு பதிலாக உங்களை ஊக்கப்படுத்தும் ஒரு செயற்கை குரலை வளர்த்துக் கொள்ளுங்கள். அதாவது, உங்களுக்கு நீங்களே ஒரு நண்பர், அன்பான செல்லப்பிள்ளை அல்லது ஒரு சிறு குழந்தையுடன் பேசும் விதம் போன்று உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு நீண்ட பயணம். அதிக கவனம் செலுத்தும் ஒரு விஷயத்தை நீங்கள் பெறுவீர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. உங்கள் அருகிலுள்ள மூன்று நேர்மறையான விஷயங்களைக் கவனிப்பது பற்றி சிந்தியுங்கள். அதிலேயே நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மகிழ்ச்சி வளர நல்ல விஷயங்களின் மீது கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்…
Also Read: நீங்கள் எடுக்கும் நியூ இயர் ‘ரெசல்யூஷன்’ ஏன் தோல்வியடைகிறது? அவற்றை சரி செய்வது எப்படி?