இலங்கை குண்டுவெடிப்பிற்கு காரணம் கண்டுபிடிக்கப்பட்டது!!

Must Read

காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019

2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை!

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது? | ஒரு கருத்து கணிப்பு

நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.

நேற்று இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கல்வாரி குன்றிலே பாவப்பட்டவர்களுக்காக சிலுவை சுமந்த புனித குமாரனின் மகிமையை மக்கள் முனுமுனுத்துக்கொண்டிருந்தனர். திடீரென காதைப்பிளக்கும் சத்தத்தோடு அந்த குண்டு வெடித்தது. புகைமூட்டம் வானளக்க, மக்கள் வீதிகளில் சிதறியோடத் தொடங்கினர்.

sri-lanka-blastஅடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் கொழும்புவின் முக்கிய நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. எங்கு நோக்கிலும் தீயின் சுடர் நாவுகள் நகரத்தை தின்னும் காட்சி திகிலூட்டுகிறது.

இந்த குண்டுவெடிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை குண்டுவெடிப்பின் காரணமாக 24 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல்

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் பெரும்பான்மையானவை தற்கொலைப்படைத் தாக்குதல்கள் தான் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இலங்கை அரசு தெரிவிக்கிறது.

srilanka-blast-780x405இதுகுறித்துப் பேசிய அரசு செய்தித்தொடர்பாளரும் கேபினெட் அமைச்சருமான ரஜிதா சேனரத்னே, ”சுமார் 300 பேரைக் கொன்ற தற்கொலைப்படைத் தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்குத் தொடர்புள்ளதாக இலங்கை அரசு நம்புகிறது. தவ்ஹீத் ஜமாத்துக்கு சர்வதேச உதவிகள் கிடைத்ததா என்பது குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது” என்றார்.

இலங்கையில் உள்ள புத்த விகாரங்களை தகர்க்கும் நாச வேலைகளை இந்த அமைப்பு செய்து வந்ததும் இதன்மூலம் தெரியவருகிறது. கடந்த 11 ஆம் தேதியே தீவிரவாத தாக்குதல்கள் இலங்கையில் நடைபெற வாய்ப்பிருப்பதாக வெளிநாட்டு புலனாய்வுத்துறை அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இத்தனை பெரிய தாக்குதல்களை யாருமே எதிர்பார்க்கவில்லை.

SRILANKACHURCHBLASTSதேவதூதன் புத்துயிர்ப்பு அடைந்த நாளில் இத்தனை எளியவர்கள் கொல்லப்பப்பட்டதைக் கண்டித்து உலகம் முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் வெளிப்படுகிறது. எல்லா மதத்தினரும் இலங்கையின் மருத்துவமனைகளில் அவதியுறும் மக்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறார்கள். இந்த கொண்டுந்துயரில் இருந்து இலங்கை மீண்டெழும். தீவிரவாதத்தை வேரறுக்கும் என்னும் அவா எல்லா மனிதனிடத்தும் ஊறிக்கிடக்கிறது என்றால் அது மிகையில்லை.

இது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா?

வியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்! நியோதமிழில் வன்முறை, ஆபாசம், சினிமா கிசு கிசு, நடிகைகளின் படங்கள் போன்றவைகளை பதிவிடுவதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

Latest News

காமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019

2015 ம் ஆண்டு முதல் Comedy Wild Life Photography Awards என்ற விருதுகளை அதே பெயரில் செயல்படும் நிறுவனம் வழங்குகிறது. இந்த...

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை!

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது? | ஒரு கருத்து கணிப்பு

நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.

பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)

வீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை!

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி

More Articles Like This