Home அரசியல் & சமூகம் தன்பாலுறவு சட்டப்பூர்வமாக்கப்படுமா? விரைவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தன்பாலுறவு சட்டப்பூர்வமாக்கப்படுமா? விரைவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377ன் படி, இயற்கை மாறான உறவை ஏற்றுக் கொள்ள இயலாது. அதில் ஆண், பெண் அல்லது விலங்குகள் உடனான உறவுகள் அடங்கும். எனவே தண்டனைச் சட்டப்படி, மேற்கண்ட செயல்பாடுகள் தண்டிக்கப்பட வேண்டியவை. விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.

இதற்காக ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்படும். இதுதொடர்பாக 2013ல் வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், இயற்கைக்கு மாறான எந்தவொரு உறவும் சட்ட விரோதம் என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

இதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒப்புதல் அளித்தது. இந்த உத்தரவு குறித்து பரிசீலனை செய்யுமாறு, ஓரினச் சேரிக்கையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூத் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ‘பாலியல் சுதந்திரத்துக்கான உரிமையும்’ அடிப்படை உரிமைகளுள் ஒன்றா என்று தீர்ப்பளிக்க உள்ளது. குறிப்பாக ‘அந்தரங்க உரிமை’ ஓர் அடிப்படை உரிமைதான் என்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்பளித்தபின் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.

தனக்கான துணையைத் தேர்வு செய்வது ஒருவரது வாழ்வதற்கான உரிமை என்பதை ஏற்கனேவே உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதால், அதே தர்க்க அடிப்படையை ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரையும் துணையாகத் தேர்வு செய்ய அனுமதி உண்டு என நீட்டிக்கலாம்.

ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் பிரிவு 377 அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 10 அன்று, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

“தனக்கான துணையைத் தேர்வு செய்வது ஒருவரது வாழ்வதற்கான உரிமை என்பதை ஏற்கனேவே உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதால், அதே தர்க்க அடிப்படையை ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரையும் துணையாகத் தேர்வு செய்ய அனுமதி உண்டு என நீட்டிக்கலாம். இதை குற்றமில்லை என்று ஆக்கிவிட்டால் அவர்கள் பலவீனமாக உணரமாட்டார்கள்,” என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விசாரணையின்போது கூறியுள்ளது.

ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக அனுமதித்துள்ள நாடுகள்
அக்டோபர் 2017ஆம் தேதி வரையிலான தகவலின்படி நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, நார்வே, சுவீடன், மெக்சிகோ, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், அர்ஜென்டினா, டென்மார்க், உருகுவே, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், பிரிட்டன், லக்ஸம்பர்க், அமெரிக்கா, பின்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி மற்றும் மால்டா ஆகிய 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதாக உள்ளது . பிற நாடுகளில் அது சட்டவிரோதமானது.

ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்குவதற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் வாதங்கள்
  • ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதுவது அடிப்படை அரசியலமைப்பை மீறுவதாகும். ஒவ்வொரு வயது வந்த குடிமகனு(/ளு)க்கும் அவர்களுக்கான துணையை தேர்வு செய்வதற்கான உரிமையை அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது.
  • எல்லா ஆண்களும், எல்லா பெண்களும் எதிர்பாலினத்தவர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு கொண்டுள்ளவர்களாக இருப்பதில்லை. இது மரபு ரீதியாக வரும் ஓர் இயல்பே தவிர, அந்த நபர்களின் தேர்வாக இருப்பதில்லை. குணப்படுத்த இது ஒரு நோய் அல்ல.
  • பாலின சிறுபான்மையினராக உள்ள அவர்களுக்கு, இயல்பான பாலியல் விருப்பங்களுள்ள பிறரைப் போலவே, அச்சமின்றி சுதந்திரமாக வாழவும், தங்கள் திறன்களை பயன்படுத்தி இலக்குகளை அடையவும் சமூகப் பாதுகாப்பு தேவைப்படுகிறது.
  • இயற்கையின் விதி என்று கருதப்பட்ட ஏராளமான விஷயங்களை அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சிகள் மாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்குவதற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்கள்
  • சட்டபூர்வ வயதை அடைந்த இருவர் உறவு கொள்வது அவர்கள் தனிப்பட்ட உரிமையே என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் இது குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம்
  • 76 நாடுகள் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருத்துவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றனர். ஒரு சமூகத்தால் அறநெறியாக கருதப்படுபவையும் இந்த சட்டப்பிரிவு செல்லுமா என முடிவு செய்வதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
  • ஒரு குற்றத்தை செய்பவர்கள் விரும்புகிறார்கள் என்பதால் அந்தக் குற்றத்தை சரி என்று கூறிவிட முடியாது.என்று இப்பிரிவினர் வாதிடுகின்றனர்.

விவாதங்கள் ஒருபுறம் உள்ள போதும் , தனிமனித சுதந்திரம், கருத்துரிமை , பேச்சுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அந்தரங்க உரிமையும் ஓர் அடிப்படை உரிமை ஆகியுள்ள நிலையில், பாலினத் தேர்வை மேற்கொள்ளும் உரிமையை அடிப்படை உரிமையாக உச்சநீதிமன்றம் அறிவிக்குமா என்பது இன்னும் ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே தெரிந்து விடும்

இந்த விவகாரத்தில் முடிவை மத்திய அரசு நீதிமன்றத்தின் கையிலேயே கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.சட்டமாகினும், இயற்கையாகினும் . மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அவரவர் விருப்பத்தின் படி வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ளது என்பதே நிதர்சனம்.

நீடூழி வாழ்க.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -