இந்தியா என்பது ஒரு மிகப் பெரிய சந்தை. இங்கு பல்வேறு உலக நாடுகள் கடைவிரித்து எதை எதையோ எளிதாக விற்க முடியும். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை இங்கு விற்பதற்கு எதிர்ப்புகள் மிகவும் குறைவு! சொல்லப்போனால், மக்களுக்கு இருக்கும் அறியாமையால் எதிர்ப்பும் இருப்பதில்லை! இந்தியாவில் அவற்றை பல நிறுவனங்களால் எளிதாக விற்க முடிவதற்கு மற்றுமொரு காரணம் அரசியல்! பிற நாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகும் பொருட்களைப் பற்றித்தான் நாம் இங்கே காணப்போகிறோம்.
1. விக்ஸ்
கேட்கவே ஆச்சரியமாக இருக்கும். தொண்டை கரகரப்பிற்கு விக்ஸ் உண்பதால் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளும், அதிகமான பக்கவிளைவுகளும் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. விக்ஸ் மருந்துப் பொருட்கள் உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. பல ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இதற்கு தடை உள்ளது. ஆனால், இந்தியாவில் விக்ஸ் பொருட்கள் பரவலாக சிறு கடைகளில் கூட விற்பனை செய்யப்படுகின்றன.
2. Maruti Suzuki Alto 800
பாதுகாப்பு சோதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களில் (Safety guidelines) தோல்வியுற்ற கார் என்பதால் பல வெளிநாடுகளில் இது விற்பனையில் இல்லை. இந்த கார் பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கே மிகவும் பிரபலமாக உள்ளது.
3. குழந்தை வாக்கர்ஸ்
கனடா நாட்டில் 2004 – ஆம் ஆண்டு முதல் பேபி வாக்கர் (Baby Walker) தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கர்ஸ் ஆபத்தானது மட்டுமல்லாமல், மனநல வளர்ச்சியில் தாமதத்திற்குப் பங்களிப்பு செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீங்கள் அங்கு விற்பனை செய்தால் 100 ஆயிரம் டாலர் அபராதத்திற்கு உட்படுத்தப்படுவீர்கள் அல்லது சிறையில் ஆறு மாதங்கள் உள்ளே தள்ளப்படுவீர்கள்.
4. ரெட் புல்
ரெட் புல் (RedBull) என்ற ஆற்றல் பானம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டது. பிரான்ஸ் மற்றும் டென்மார்க்கில் ரெட் புல் தடைசெய்யப்பட்டது. மேலும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு லிதுவேனியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம் taurine என்ற அமினோ அமிலம் தான்! இந்தியாவில் இது விற்பனைக்கு உள்ளது.
5. நீல ஜீன்ஸ் தடை
வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் தடை செய்யப்பட்ட ஒன்று. இதை நீங்கள் அணிந்தால் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள். ஜீன்ஸ்ல என்ன இருக்கு என்கிறீர்களா? இது அமெரிக்க நாட்டின் கொடி போல இருப்பதால் தான் இதை அணிய வடகொரியாவில் தடை விதித்துள்ளது. கருப்பு நிற ஜீன்ஸ் அணியலாம்.
Also Read: கிம் ஜாங் உன் – மர்ம சாம்ராஜ்யத்தின் மகத்தான சர்வாதிகாரி! வடகொரியா அதிபரின் தனி ராஜாங்கம்!!
6. பிளாஸ்டிக் பைகள்
முதன் முதலில் இந்த பிளாஸ்டிக் பையைத் தடை செய்த நாடு பங்களாதேஷ். அதன் பின்னர் பல நாடுகளில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட ஒன்று. பிரான்சு, டான்சானியா, சான் பிரான்சிஸ்கோ போன்ற அமெரிக்க நகரங்களில் தடை செய்யப்பட்டது. இது இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒன்று தான். ஆனாலும், இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் இப்போதும் கிடைக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் ஓரளவு தடை இருக்கிறது.
7. லைபாய் சோப்
ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். இங்கு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் லைபாய் சோப்களுக்கு (Lifebuoy Soap) பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் அவற்றைக் கொண்டு சில விலங்குகளைக் குளிப்பாட்ட மட்டுமே அனுமதி. மனிதர்களுக்கு அவை தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்துவதாகத் ஆய்வுகள் தெரிவித்துள்ளனவாம்.
