என்னிடமே ஹிந்தியா… பா.ஜ.க வை கிண்டல் செய்த சித்தராமையா

Date:

கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு மே-12ல் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக இரு பெரும் கட்சிகளான காங்கிரசும், பி.ஜே.பி. யும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, ஏனைய பிரபலங்களும் ட்விட்டர் சந்தில் கலாய்த்துக் கொள்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வே. அப்படி ஒன்று நேற்று கர்நாடகா அரசியலில் அரங்கேறியது. பி.ஜே.பி.யை சேர்ந்த கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளரான முரளிதர் ராவ், காங்கிரசின் தற்போதைய முதல்வர் மற்றும் முதல்வர் வேட்பாளருமாகிய சித்தரமய்யாவை நோக்கி “மைசூருவின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்று விடுவோமோ என்று பயந்து விட்டார், அதனால்தான்  இரண்டாவது தொகுதியாக மற்றொரு தொகுதியை தேடுகிறார். உங்களுக்கு சந்தேகமே வேண்டாம், உங்கள் இரு தொகுதிகள் மட்டுமல்லாமல், முழு கர்நாடகாவும் ‘காங்கிரஸ் இல்லாத மாநிலமாக’ மாறிவிடும் என்றும் ஹிந்தியில் பதிவிட்டார். இதுவரையிலும் 284 பேர் மட்டுமே மறுகீச்சிட்டிருக்கிறர்கள்.

சித்தராமைய்யா கர்நாடகாவின் இருவேறு தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஏற்கனவே  தெரிவித்திருந்தார்.

இதனைக் கண்ட சித்தராமையா, பி.ஜே.பி.யின் முரளிதர் ராவின் ட்விட்டை மேற்கோளிட்டு, “ஹிந்தி புரியவில்லை, கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் பதிவிடுங்கள் ஐயா” என்று கன்னட மொழியில் பதிவிட்டார். இதனை இதுவரையிலும் 4500க்கும் மேற்பட்டோர் மறுகீச்சிட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு கர்நாடக மாநில பி.ஜே.பி.யின் ட்விட்டர் பக்கத்திலிருந்து “சித்தராமையா அவர்களே, நீங்கள் மற்றும் உங்கள் கட்சி உறுப்பினர்கள் இந்தி மற்றும் உருது மொழிகளில் கடந்த காலத்தில் உங்கள் பிரச்சாரங்களில் உருது மொழியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள், அது எங்களுக்கும் புரியவில்லை” என்று ஹிந்தியில் பதிவிடாமல் கன்னட மொழியில் பதிவிட்டு சுட்டிக்காட்டியது.

இதன்பிறகு, முரளிதர ராவ் தான் ஏற்கனவே பதிவிட்ட ஹிந்தியில் போட்ட ட்விட்டையே கன்னட மொழியில் பதிவிட்டார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, “கர்நாடக தலைவர்கள் மாநிலத்தின் எந்தப் பகுதியையும் பார்த்து பயப்படவில்லை, இரு தொகுதிகளிலும் மக்கள் விதியை முடிவு செய்வார்கள், அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.” என்று கன்னடத்தில் இல்லாமல் ஆங்கிலத்தில் போட்டாரே ஒரு பதிவு.

மேலும் அதில் “கன்னடத்தில் ட்வீட் செய்ய நான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்றும் பதிவிட்டது ஹிந்தியை சந்துக்குள் வைத்து சங்கடப் படுத்தியது போல் இருப்பதாக நெட்டிசன்கள் உற்சாகம் பொங்க சிரித்துக்கொண்டும், பாராட்டியும் மறுகீச்சிட்டு வருகிறார்கள்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!