பெருகி வரும் பாலியல் குற்றங்கள் – காரணங்களும், தீர்வுகளும்

Date:

சிறுமிகள் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. எங்கோ ஒரு சம்பவத்தை கேள்வியுறும் போதோ, செய்தித்தாள்களில் படிக்க நேரும் போதோ உலகின் ஏதோ ஒரு மூலையில் அல்லது இந்தியாவின் கடைக்கோடியில் ஒரு இடத்தில் தானே நடக்கிறது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவர்கள் நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று சமாதானம் செய்து கொள்ள இப்போதெல்லாம் முடிவதில்லை. ஏனெனில் சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் நம் பக்கத்து வீடு வரையிலும் நுழைந்து விட்டன.

என்ன தான் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், அது ஒரு புறம் நியாயமானதாக இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் நாம் சிந்திக்க வேண்டிய , மாற்ற வேண்டிய வேறுசில கோணங்களும் உள்ளன.

பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள்

பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்னவென்று ஆராய்வது இன்றியமையாததாகிறது. எந்தவொரு வித்தியாசமும் இன்றி அனைத்து தரப்பட்ட ஆண்களும் , அனைத்து வயதினரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். நிர்பயா வழக்கிலும், ஆசிபா வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களே சாட்சி. பெற்ற தந்தையே தன் குழந்தைகளை சீரழிக்கும் அவலங்களையும் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது சமுதாயத்தில் கூட்டுக் குடும்ப அமைப்புகள் சிதைந்தது தான். யாருக்கும் யார் மீதும்  பயமோ மரியாதையோ இல்லை. அவரவர்கள் அவரவர்களுக்கான பந்தயங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதில் குடும்ப அமைப்பை பாதுகாக்கவோ, பெண்களை சக உயிரினமாக மதிக்கவோ யாருக்கும் நேரமுமில்லை அப்படி தவறு செய்தால் தட்டிக் கேட்க ஆளும் இல்லை.

அடுத்ததாக பல்கிப்பெருகி விட்ட ஸ்மார்ட்போன் பயன்பாடு. இலவசமாக வாரி வழங்கப்படும் இணைய வசதிகள். அதில் உருப்படியாக ஏதேனும் கற்றுக்கொள்ள ஒரு வலைத்தளத்திற்குள் சென்றால் கூட, அந்தப் பக்கத்தில் மின்னும் ஆபாச தளங்களின் விளம்பரங்கள். பக்குவப்பட்டவர்கள் அதனைக் கடந்து சென்று விடுகின்றனர். ஆனால், இளம்பருவ வயதில் இருக்கும் சிறுவர் சிறுமிகள் அந்த வலையில் விழுந்து விடுகின்றனர். நல்லது கெட்டது தெரியும் முன்னரே இந்த போதையில் விழுந்து விடும் இளைஞர்களுக்கு வேறு எதைப்பற்றியும் யோசிப்பதற்கான இடைவெளிகள் கிடைப்பதில்லை. ஆபாச இணையதளங்ளை முற்றிலுமாக தடை செய்வதன் மூலம் ஓரளவு பாலியல் குற்றங்களை தடுக்க முடியும்.

images 4 2ஆனால் பெரும்பாலோனோர் இன்று முன்வைக்கும் விஷயம், ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் இப்படி இல்லை இப்போது காலம் கெட்டு விட்டது என்பது தான். அது உண்மை தான் என்றாலும் மற்றொரு புறம் சிந்தித்தால், பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் மக்களுக்கு பாலியல் குற்றவாளிகளின் முகத்திரையை கிழிக்கும் தைரியம் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தான் அது அவமானாகக் கருதப்பட்டது. அதனால் அத்தகைய சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆண் அடுத்த குற்றத்திற்கு தயாரானான். ஆனால் இன்று பெண்களுக்கு அந்த தைரியம் வந்திருக்கிறது. அதனால் தான் இன்று வன்புணர்வு சம்பவங்கள் கொலை சம்பவங்களாக மாறி வருகின்றன.

பணத்தை விட குழந்தைகள் முக்கியம் தாய்மார்களே !!

குழந்தை வளர்ப்பில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு காட்டப்படும் பாரபட்சமும் குற்றங்கள் நிகழ காரணங்களாகின்றன. எனவே வளரும் பருவங்களிலேயே ஆரோக்கியமான சிந்தனைகளை குழந்தைகள் மனதில் விதைக்க பெற்றோர்கள் முற்பட வேண்டும்

பெண்கள் வெளியுலகிற்கு வந்ததும் , வேலைக்கு செல்வதும் ஆரோக்கியமானவை என்றாலும் அதை விட முக்கியம் நம் மூலம், நம்மை நம்பி உலகிற்கு வந்த நம் குழந்தைகள்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் குழந்தைகளை கவனிக்க எந்த பெற்றோருக்கும் நேரமில்லை என்பதே உண்மை. பெண்கள் வெளியுலகிற்கு வந்ததும் , வேலைக்கு செல்வதும் ஆரோக்கியமானவை என்றாலும் அதை விட முக்கியம் நம் மூலம், நம்மை நம்பி உலகிற்கு வந்த நம் குழந்தைகள்.

குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டியது நல்ல உணவைக் கொடுப்பது, கேட்டதை வாங்கித் தருவது, பெரிய தரமான பள்ளிகளில் படிக்க வைப்பது மட்டுமல்ல. மனதளவில் அவர்களை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதை நம் பெற்றோர்களிடம் பகிரலாம்.அவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்வார்கள். நம்மைப் பாதுகாப்பார்கள் என்று குழந்தைகளை நம்ப வைப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதுவே ஒரு பெற்றோரின் வெற்றியும் கூட.

தற்போது காதலென்ற பெயரில் பெருகி வரும் பள்ளிப்பருவ ஈர்ப்புகளுக்கும் இவை தான் காரணமாக இருக்க முடியும். நம் குழந்தைகள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பைத் தானே தவிர பகட்டான வாழ்க்கையை அல்ல. அப்படி நம்மிடம் அது கிடைக்காத பட்சத்தில் வேறு ஒரு இடத்திலிருந்து கிடைக்கும் சிறிய அன்பிற்கு கூட குழந்தைகள் அடிமையாகி விடுகின்றனர்.

இப்படியே சென்றால்…

தற்போது சமுதாயத்தின் நிலையையும், மக்களின் மனநிலையும் இதே போல் குறுகிக்கொண்டே கொண்டே சென்றால், இன்னும் பத்து இருபது வருடங்கள் தேவையில்லை வெகுவிரைவிலேயே நாம் விரும்பத்தகாத மாற்றங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஒன்று வன்கொடுமை சம்பவங்கள் வெகு சாதாரணமான விஷயங்களாகி நாம் இயல்பாக அதை கடந்து செல்ல பழகியிருப்போம்.

ஒன்று வன்கொடுமை சம்பவங்கள் வெகு சாதாரணமான விஷயங்களாகி நாம் இயல்பாக அதை கடந்து செல்ல பழகியிருப்போம். அல்லது முந்தைய காலங்களைப் போல பெண்கள் பாதுகாப்பிற்காக குழந்தைத் திருமணங்களும், அவர்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பதும் நடந்து கொண்டிருக்கும். இன்னும் சொல்லப் போனால் போராடி சலித்துப் போய் பெண்கள் விரும்பியே கூண்டுக்குள் அடைபட்டுக்கொள்ள நேரலாம்.

இவையனைத்தையும் தாண்டி, இப்போதெல்லாம் பெண்களுக்கு எந்த ஆணையும் முழு நம்பிகையோடு அணுக முடிவதில்லை. ஒரு சிறுமியை பொதுவிடங்களில் காண நேர்ந்தால் அவள் நல்லபடியாக வளர வேண்டும் என்று தான் பிரார்த்திக்கத் தோன்றுகிறது. இதெல்லாம் ஆணினத்தின் தோல்விகள். இதை அவர்கள் உணர்வதும், உளவியல் ரீதியான உணவுமுறைகள் ரீதியான மாற்றங்களும் தான் குற்றங்களைக் குறைக்க உதவும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!