யார் இந்த சக்தி காந்த தாஸ்? – இதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்?

0
269
shakthi kanta das
Credit: Business Insider

திரு.உர்ஜித் படேல் ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய RBI ஆளுநராக
நியமிக்கப்பட்டுள்ளவர்தான் IAS அதிகாரியான திரு சக்திகாந்த தாஸ் ஆவார். RBI க்கு என வரைறுக்கப்பட்டுள்ள விதிப்படி நிதித்துறையின் ஆலோசனையோடு யாரைவேண்டுமாலும் பிரதமர் RBI ஆளுநராக நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ் 25 வது RBI ஆளுநராவார். மேலும் இப்பதவி பெறும் 14வது IAS/ICS அதிகாரி இவர் ஆவார்.

11shanktikanta-das
Credit: Reddif

ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் பொருளாதார மேதையாக இருக்கவேண்டு என
எக்கட்டாயமுமில்லை. 1980 பேட்ச் IAS அதிகாரியான இவர் ஆளுநர் பதவிக்கு மிகச்சரியானவர் என்று இவரது சக அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர். 2008 முதல் Joint Secretary in the Expenditure Department of the Union Finance Ministry பதவிவகுக்கும் இவர், இதற்கு முன்பு தமிழகத்தில் இரண்டு முறை வணிக மற்றும் வரித்துறை செயலராகவும், தொழிற்சாலை செயலர் ஆகவும் பதவிவகித்துள்ளார். மேலும் 1989 முதல் 1991 வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும் இருந்துள்ளார். தமிழகத்தில் மறைமலைநகரில் மஹிந்திரா தொழிற்சாலை அமைவதற்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. திரு சக்திகாந்த தாஸ் அவர்கள் தமிழகத்திலிருந்து ஆளுநரான இரண்டாவது IAS அதிகாரி ஆவார் . இதற்கு முன் நாகர்கோவிலைச் சேர்ந்த எஸ்வெங்கட்ராமன் IAS பதினெட்டாவது ஆளுநராக பொறுப்பேற்றிருந்தார்.

வெடிக்கும் சர்ச்சை

இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் அனைவரும் பொருளாதாரத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய பிறகே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் சக்தி காந்த தாஸின் இந்த பதவியேற்பு நாடெங்கும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கடந்த காலாண்டில் இந்தியாவின் GDP யில் ஏற்பட்டிருக்கும் கடும் சரிவிலிருந்து நாட்டை மீட்க என்னமாதிரியான உக்திகளை புது கவர்னர் மேற்கொள்ளப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கேப்டன் விஜயகாந்திற்கு நெருக்கமானவரா?

தேமுதிக வின் தலைவரும் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படத்தில் தற்போதிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அவர்களின் பெயரை விஜயகாந்த் கூறுவதுபோன்ற காட்சி ஒன்றுவரும். அட புள்ளி விவரப்புலியாய் கேப்டன் கர்ஜிக்கும் காட்சி வருமே அதுதான். இதனால் இந்த இருவருக்கும் முன்னமே தொடர்பு இருப்பதாக செய்தி வைரலாகப் பரவி வருகிறது.

ரமணா படக் காட்சியைப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.