புல்வாமாவில் இன்றும் துப்பாக்கிச்சூடு – இந்திய அரசு எடுத்த துணிச்சல் முடிவு

0
64
pulwama
Credit: ANI

கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்தவாரம் நடத்தப்பட்ட தாக்குதலினால் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த செய்தி ஏற்படுத்திய அதிர்வலை இன்னும் இந்தியாவை விட்டு அகலவில்லை. இதனிடையே இன்று அதிகாலை பாதுகாப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு இந்தியாவின் பதிலடி எப்படி இருக்கப்போகிறது என்பதை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

adil_jaish_terrorist
Credit: India Today

மீண்டும் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில், 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்டம் பிங்லான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த துணைபுரிந்தவர்களாக இருக்கலாம் என ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஷ்மீர் மாநில போலீஸாரும், ராணுவத்தில் 55 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவினரும் இணைந்து இன்று அதிகாலை பிங்லான் கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.

கடுமையாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pulwama
Credit: ANI

பதிலடி

தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானைக் கண்டித்து இந்தியா புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி இருந்த ‘வர்த்தக நட்பு நாடு’ என்ற சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்திருக்கிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அடிப்படை சுங்க வரி 200 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிசெய்தார். இதனால் பாகிஸ்தானுக்கு ரூ.3,482 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் பல இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய அரசின் உயரமட்ட அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.