2025 – ல் சீனாவை மிஞ்சப் போகும் இந்தியாவின் மக்கள் தொகை !!

Must Read

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை!

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது? | ஒரு கருத்து கணிப்பு

நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.

பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)

இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், எதிர்காலத்தில் மிகவும் உயரக்கூடும் என்று அவதானிக்கப்படுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மக்கள் மத்தியில் கல்வி ரீதியாக இருக்கும் வேறுபாடுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சிலவற்றைத் துல்லியமாக கணிக்க முடிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிகபட்ச மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஆசியாவின் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு இத்தகைய துல்லியமான மக்கள்தொகைக் கணிப்புகள் இந்தியாவிற்கு  உதவும் என அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரியாவில் உள்ள, IIASA  (International Institute for Applied Systems Analysis) நிறுவனத்தின் , உலக மக்கள்தொகை நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் லுட்ஸ் (Lutz) கூறுகையில், ஐரோப்பாவைப் போல அல்லாமல் இந்தியா ஒரு பரந்த துணைக்கண்டம்.  இனி வரும் காலங்களில் இந்தியாவின் எதிர்கால கணிப்புகள், வெளிப்படையாகவே அதன் பன்முகத்தன்மையைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

2025 க்குள், உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியர்கள் கருவுறும் விகிதங்கள் மற்றும் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் விகிதம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த கருத்து முன் வைக்கப்படுகிறது.

Credit : HIndusthan Times

எவ்வாறாயினும், இந்தியாவின் மக்கள்தொகை மேற்பார்வை அதன் பகுதிகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் அல்லது பன்முகத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, மக்கள் தொகை கணிப்பு மாதிரிகளின்  ஒன்றிணைந்த அளவைச் சார்ந்து அமைகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் கிராமப்புற அல்லது நகர்ப்புற இடத்தின் குடியிருப்பு, மாநிலம், வயது, பாலினம் மற்றும் கல்வி அளவை உள்ளடக்கிய இந்தியாவின் மக்கள்தொகை வேறுபாடுகளின் ஐந்து பரிமாண முன்மாதிரிகளை மேற்கொண்டனர்.
இந்த மாதிரியின் பல்வேறு நிலைகளை இணைக்கும் சூழல்களில் மக்கள் தொகை மாற்றங்களை மாற்றியமைக்க இந்த மாதிரி பயன்படுத்தப்பட்டது.

Credit : Global Times

உதாரணமாக, ஒரு அதிக மக்கள் தொகைகொண்ட பிரதேசம் , ஒட்டுமொத்த தேசிய அளவை ஒப்பிடுகையில், தனிப்பட்ட மாநிலங்களில் இருந்து தரவுகளை ஒருங்கிணைக்கும் ஒரு மாதிரியாக இருக்கிறது. ஏனெனில் உயர்ந்த கருத்தரித்தல் விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் கூட  இறுதியில் உயர் தேசிய மக்கள்தொகை கணிப்புடன் சேர்க்கின்றன.

இந்தியா முழுவதும் கல்வி கற்றோர் விகிதம் காலப்போக்கில் அதிகரித்துள்ளது.

வயது மற்றும் பாலியல் கூறுகளை  மட்டும் வெளிப்படையாகக் கணக்கிட்டுத் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டால், உயர் கல்வி போன்ற செல்வாக்குக் காரணிகள் (கருவுறுதலுடன் குறைவாகத் தொடர்புடையவை)  வெளியேறுகின்றன. இதனால், இன்றியமையாத, கல்வியறிவற்ற, இன்று  அதிகமான  கருத்தரிப்பு விகிதத்தைக் கொண்டுள்ள கிராமப்புறப்  பெண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கணிப்பு, எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை பெருமளவு அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

அதே சமயம், இந்தியா முழுவதும் கல்வி கற்றோர் விகிதம் காலப்போக்கில் அதிகரித்துள்ளது. கல்வி மற்றும் அதிகரித்துள்ள நகரமயமாக்கல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் அதே கணிப்பானது குறைவான மக்கள் தொகை விகிதத்தைக் கணிக்கக் கூடும்.

இந்த இரண்டு விளைவுகளையும் இணைத்துப் பார்க்கையில் , கல்வி செல்வாக்கு ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றுகிறது, இதன் விளைவாக குறைவான மக்கள் தொகை வளர்ச்சிதான் சாத்தியமானதாக இருக்கும்.

Credit : World Economic Forum

2011 வருடத்தில் இருந்ததைப் போலவே, கருத்தரித்தல், இறப்பு, கல்வி மற்றும் குடிபெயர்வு விகிதங்கள் முடக்கப்பட்டால், கல்வி, மாநிலங்கள் அல்லது குடியிருப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலான மக்கள்தொகை வளர்ச்சி திருப்திகரமானதாக, அதாவது  1.6 முதல் 3.1 பில்லியன் வரையிலான மக்கள்தொகையாக இருக்கலாம்.

இந்த விகிதங்கள் நம்பத்தகுந்த மாதிரியின் கணிப்புகளுக்கு இடையில் மாறுபடலாம். இருப்பினும், 1.65 பில்லியனிலிருந்து 1.8 பில்லியன் வரை மக்கள் தொகை உச்சநிலையாகக் கருதப்படுகிறது.

இந்தக் கணிப்புக்களுக்கு இடையேயான வித்தியாசம், ஒரு கருத்துக்கணிப்பிற்கான மாதிரிக்கு, எந்த மாதிரியான  புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

இது போன்ற தகவல்களை மின்னஞ்சலில் பெற வேண்டுமா?

வியக்க வைக்கும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆச்சரியங்கள், விண்வெளி நிகழ்வு நேரலைகள், வீடியோக்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் பெற...

Latest News

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணியின் கதை!

இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் அனைவர் நினைவிலும் முதல் இடம் பிடிக்கும் ஜான்சி ராணி - இந்த வார ஆளுமையாக ( நவம்பர் 19, 2019) கொண்டாடப்படும் ஜான்சி ராணியின் வீர வரலாறு

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜி / ஸ்மைலி எது? | ஒரு கருத்து கணிப்பு

நாம் இப்போதெல்லாம் எமோஜி இல்லாமல் யாருக்கும் மெசேஜ் அனுப்புவதில்லை. செல்போனில், ஆங்கிலம், தமிழ் போல எமோஜியும் ஒரு மொழியாகிப்போனது.

பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து , அவற்றின் பாதுகாப்பிற்காக முழு முயற்சி செய்தவர் சலீம் அலி - இவர் தான் இந்த வார ஆளுமை (நவம்பர் 12, 2019)

வீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை!

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரேடியத்தை கண்டுபிடித்து அதனை பிரித்தெடுத்தவர் - மேரி கியூரி

உங்களுடைய பைக் மைலேஜை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

உங்களுடைய பைக்கின் மைலேஜை அதிகரிக்கச் செய்ய இதைப்படியுங்கள்!!

More Articles Like This