28.5 C
Chennai
Wednesday, September 30, 2020
Home அரசியல் & சமூகம் மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?

மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்திய குடியரசுத்தலைவர் மோடிக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மோடியின் அமைச்சரவை சகாக்களும் நேற்றைய நிகழ்விலேயே பதவியேற்றுக்கொண்டனர். இதில் பல அதிரடி மாற்றங்களை தேசிய ஜனநாயக கூட்டணி செய்திருக்கிறது.

Oath-Narendra-Modi-770x433
Credit: ANI

டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுமார் 8000 பேர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் BIMSTEC நாடுகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

20 புதுமுகங்களுக்கு இந்த அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற முறை கேபினெட் அமைச்சர்களாக இருந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, மேனகா காந்தி, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கே.ஜே.அல்போன்ஸ், ஜே.பி.நட்டா, ஜெயந்த் சின்ஹா, உமா பாரதி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அருண்ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் உடல்நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அருண்ஜெட்லி பதவி வகித்த நிதித்துறை அமித்ஷாவிடமும், சுஷ்மா சுவராஜிடம் இருந்த வெளியுறவுத்துறை, முன்னாள் வெளியுறவு செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

india-politics-modi-1
Credit: The Indian Express

மோடியின் கடந்த ஆட்சியில் கேபினெட்டில் 7 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை மூன்று பெண்கள் மட்டுமே (ஸ்மிரிதி இராணி, நிர்மலா சீதாராமன், சிரோன்மணி அகாளி தளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர்) தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அமைச்சர்களாகின்றனர்.

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் மொத்தம் 58 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 25 பேர் கேபினெட் அமைச்சர்கள். 33 பேர் இணை அமைச்சர்களாக பதிவியேற்றனர்.

கேபினெட் அமைச்சர்கள் :

 1. நரேந்திர மோடி
 2. ராஜ்நாத் சிங்
 3. அமித் ஷா
 4. நிதின் கட்காரி
 5. சதானந்த கவுடா
 6. நிர்மலா சீதாராமன்
 7. ராம்விலாஸ் பாஸ்வான்
 8. நரேந்திர சிங் தோமர்
 9. ரவி ஷங்கர் பிரசாத்
 10. ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோன்மணி அகாளி தளம்)
 11. தவார் சந்த் கெலாட்
 12. சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
 13. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
 14. அர்ஜுன் முண்டா
 15. ஸ்மிருதி இரானி
 16. டாக்டர் ஹர்ஷ்வர்தன்
 17. பிரகாஷ் ஜவடேகர்
 18. பியுஷ் கோயல்
 19. தர்மேந்திர பிரதான்
 20. முக்தார் அப்பாஸ் நக்வி
 21. பிரஹ்லாத் ஜோஷி
 22. மகேந்திர நாத் பாண்டே
 23. அரவிந்த் சாவந்த் (சிவசேனா)
 24. கிரிராஜ் சிங்
 25. கஜேந்திர சிங் ஷெகாவத்

தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் :

 1. சந்தோஷ் குமார் கங்கர்
 2. ராவ் இந்திரஜித் சிங்
 3. ஸ்ரீபத் நாயக்
 4. ஜிதேந்திர சிங்
 5. கிரெண் ரிஜிஜு
 6. பிரஹ்லாத் சிங் படேல்
 7. ராஜ்குமார் சிங்
 8. ஹர்தீப் சிங் புரி
 9. மன்சுக் எல். மாண்டவியா

இணை அமைச்சர்கள்:

 1. ஃபாக்கன் சிங் குலஸ்டே
 2. அஷ்வினி குமார் சௌபே
 3. அர்ஜுன் ராம் மேக்வால்
 4. ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங்
 5. கிரிஷன் பால் குஜார்
 6. தன்வே ரோசஹிப் தாதராவ்
 7. கிஷன் ரெட்டி
 8. புருஷோத்தம் ரூபலா
 9. ராம்தாஸ் அத்வாலே
 10. சாத்வி நிரஞ்சன் ஜோதி
 11. பாபுல் சுப்ரியோ
 12. சஞ்சீவ் குமார் பால்யன்
 13. தூதரே சஞ்சய் சம்ரோவ்
 14. அனுராஜ் சிங் தாக்குர்
 15. அங்காடி சுரேஷ் சன்னபசப்பா
 16. நித்தியானந்த் ராய்
 17. ரத்தன்லால் கட்டாரியா
 18. வி. முரளிதரன்
 19. ரேணுகா சிங் சாருதா
 20. சோம் பர்காஷ்
 21. ராமேஷ்வர் தெளி
 22. பிரதாப் சந்திரா சாரங்கி
 23. கைலாஷ் சவுத்ரி
 24. தேபாஸ்ரீ சவுதுரி

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -