இந்தியர்களை விசா இல்லாமல் வரவேற்க காத்திருக்கும் பாகிஸ்தான் – சீக்கியர்கள் மேற்கொள்ள இருக்கும் கர்தார்பூர் பயணம்!!

0
145
border
Credit:NewsroomPost

சென்ற ஞாயிற்றுக்கிழமை முழுவதும்  உலகக்கோப்பை இறுதிபோட்டி, விம்பிள்டன் தொடரென்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கழிந்தது. அதே நாளில்தான் பாகிஸ்தானிடம் இந்தியா நீண்டகாலமாக கூறிக்கொண்டிருந்த “கர்தார்பூர் சாகிப் குருத்வாராவிற்கு” செல்லும் இந்திய மக்களுக்கு விசாவில்  இருந்து விதிவிலக்கு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

pak sikh
Credit:dawn

“சீக்கியத் தந்தை குருநானக்”

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரும், அம்மதத்தின் வழிவந்த பத்து குருமார்களின் முதன்மையானவருமான குருநானக்கின் 550 வது பிறந்தநாள் விழா வரும் (1469) நவம்பர் மாதம் 29ஆம் தேதி உலகமெங்கும் உள்ள சீக்கிய மக்களால் கொண்டாடப்படவுள்ளது.  குருநானக் தன் இறுதிகாலத்தை பாகிஸ்தானில் (அப்போது ஒரே இந்தியா) உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்குதான் இந்த விஷேச நாள் (கார்த்திகை பூரனமாசியன்று) கோலாகலமாகவும் பக்திமார்க்கமாகவும் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக இந்தியாவில் இருந்து கர்தார்பூர் செல்லும் பக்த கோடிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் இருநாடுகளின் சார்பில் கட்டப்பட்டுவரும்  கட்டுமான வசதிகளும் முடிவுறுத் தருவாயில் இருக்கின்றன. அவ்வாறு இந்தியாவிலிருந்து தரைவழி மூலமாக செல்லும் மக்களுக்கு விசா விலக்குத்தருமாறு பாகிஸ்தானை இந்தியா கோரியது. அதற்கு இணங்கிய பாகிஸ்தான் அதிகாரிகள்  இந்தியர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவின் OCI அட்டை (oceanised citizenship of india) உள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்த வெளிநாட்டவரும் இலவசமாக விசா இன்றி கர்தார்பூருக்கு பயணம் செய்யலாம். அதுவும் வாரத்திற்கு ஏழு நாட்கள் வீதம் வருடம் முழுதும்.   

PERMIT சிஸ்டம்

 புனித தளமான கர்தார்பூருக்கு அனைத்து மதத்தினரும் யாத்திரை செய்ய அனுமதியளிக்கவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானோ, புனிதயாத்திரை (வாகன பிரயாணம் + பாதயாத்திரை ) மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க நிர்பந்தித்தது. ஆனால் நாளொன்றுக்கு 5,000 மற்றும் விஷேச நாட்களில் 10,௦௦௦ பயணிகளை அனுமதிக்க இந்தியா வலியுறுத்தி அதற்கு அவர்களை இணங்கவும் வைத்துள்ளது.

Kartarpur
Credit:Moneycontrol

காலிஸ்தான் அபாயம்

 கர்தார்பூர் விவகாரத்தில் இந்தியாவின் முக்கிய நிலைப்பாடே அங்கு பயணிக்கும் இந்திய மக்களை (குறிப்பாக சீக்கியர்களை) பாகிஸ்தானில் இருந்து செயல்படும் காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் மூளைச்சலவை செய்துவிடாது தடுக்க வேண்டும் என்பதே. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தானுக்கு வெளியிட்ட அறிக்கையில் “காலிஸ்தான் ஆதரவாளர்களின் இயக்கங்களையோ அவர்களின் பாகிஸ்தான் மூலங்களையோ குறிப்பிடாது” இந்தியாவின் எண்ணம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிரப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கர்தார்பூருக்கு அருகில் பாகிஸ்தான் கட்டி வரும் எரிக்கரையால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்தார்பூர் கட்டுமானம்

 கர்தார்பூருக்கு செல்லும் இந்திய மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை கையாள்வதற்கான கட்டிட வேலைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அக்கட்டிடம்  நாளொன்றுக்கு 15,000 நபர்களை கையாள ஏற்றது. அவர்களுக்கு தேவையான தங்குமிடம், கழிப்பறை வசதிகள், கார் பார்க்கிங் என அனைத்து அம்சங்களும்  கிட்டத்தட்ட தயார். மீதமுள்ள வேலைப்பாடுகள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திருவிழா தொடங்குவதற்கு ஒரு வார காலம் முன்னதாக. மேலும் டெல்லியில் இருந்து “நாங்கனா சாகிப்” செல்லும் இந்திய- சீக்கிய  பஜனை கோஷ்டியான “நகர் கீர்த்தனையும்” அனுமதிக்க இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது   

pak
Credit:Geo

 இதற்க்கு முன்னதாக கடந்த வருடம் இறுதியில் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர்சிங், கர்தாருக்குப் பதிலாக 10,000 ஏக்கர் நிலப்பரப்பை கைமாற்றிக்கொள்ள பாகிஸ்தானை கேட்டுக்கொண்டார்”. அதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மத ரீதியிலான பண்டிகைக்கு பாகிஸ்தான் – இந்தியா ஒருங்கிணைந்து செயல்படுவது இருநாட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.